Thursday, July 2, 2009

எஸ்.வி.சேகர் செய்வது நியாயமா?

சேகர்...2006க்கு முன்..ஒரு நடிகர்.ஒரு முறை தேர்தலில் சுயேட்சையாக நின்று..மைலாப்பூர் தொகுதியிலேயே 1500 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர்.பின்..பி.ஜே.பி., என்றவர்..சங்கராச்சாரியார் என்றவர்..அம்மாவிடம் தஞ்சம்.

மைத்ரேயனுக்குத்தான்..மைலை தொகுதி என்ற நிலையில்..ஜெ..இவருக்கு கொடுத்தார்.இரட்டை இலை சின்னம் என்பதால் வெற்றி பெற்றார்.அதுவும் எதிர்த்து போட்டியிட்ட நெப்போலியனை..குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

பின்னர்...தலைமையிடம் மனக்கசப்பு...சேகர்..எப்போதும் தனக்கு சரியென்று தோன்றுவதை செய்பவர்.விளம்பரப் பிரியர்.அப்படிப்பட்டவரால்..அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு...காலில் விழும் கட்சியில் குப்பை கொட்ட முடியுமா?

விரிசல்...பெருகியது..

இந்நிலையில்.. மற்ற எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றம் செய்தபொது..செக்யூரிட்டியினர்..இவரை விட்டு விட்டனர்.நான் திரிசங்கு நிலையில் இருக்கிறேன்..என்கிறார்.

இவர் செய்வது நியாயமா...

சேகர்....

கட்சி உங்களை ஒதுக்கினாலும்...நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க., வேட்பாளராக..

ஆகவே..அக்கட்சிக்கு உண்மையாக இருக்க வேண்டும்..அவர்கள்..சட்டசபையில் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்.அதை விடுத்து..தனியாய் செயல்படுவேன்..என்றால்..நீங்கள்..உங்களைத் தேர்ந்தெடுத்த மைலை வாக்காளர்களுக்கும் உண்மையாய் இல்லை என்றே ஆகிறது.

இப்படியே..அடுத்த இரு வருடங்களை ஓட்ட நினைத்தால்...சபைக்கே வராதீர்கள்.சட்டசபைக்கு வந்துதான் தீருவேன் என்றால்...நீங்கள் சார்ந்த கட்சிக்கு கட்டுப்படுங்கள்..அக்கட்சி உங்களை நிராகரித்தாலும்.

ஆது..முடியவில்லை எனில்..பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.

அதைவிடுத்து...சட்டசபையிலும்..நகைச்சுவையாளன் என்பதை எஷ்டாபிளிஷ் செய்ய வேண்டாம்.

இது..எந்த உள்நோக்கமோ ..கட்சியை ஆதரித்தோ எழுதப்படவில்லை.

...மைலை வாக்காளரில் ஒருவன் என்ற முறையிலும் எழுதப் பட்டது.

15 comments:

மதிபாலா said...

நியாயம்

:)))

மதிபாலா said...

நான் சொன்னது நீங்க கேட்ட கேள்வி நியாயம்னு.

:)))))

உடன்பிறப்பு said...

ஆச்சாரியார் சொல்லி தான் அம்மாவிடம் அடைக்கலம் ஆனதாக அண்ணன் ஒருமுறை சொன்னாரே

*இயற்கை ராஜி* said...

hmm..correct...

அறிவிலி said...

நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்.
அரசியல்ல பெரிய ட்ராஜடி ஆயிரும் போல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மதிபாலா said...
நியாயம்

:)))
மதிபாலா said...
நான் சொன்னது நீங்க கேட்ட கேள்வி நியாயம்னு.

:)))))
//

முதல் பின்னூட்டம் பார்த்து சற்று அதிர்ச்சி...
இரண்டாம் பின்னூட்டம் அதை நிக்கியது..
அதுதானே!..நாம ஒரே சிந்தனை உள்ளவங்க ஆச்சே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உடன்பிறப்பு said...
ஆச்சாரியார் சொல்லி தான் அம்மாவிடம் அடைக்கலம் ஆனதாக அண்ணன் ஒருமுறை சொன்னாரே//

வேண்டாம் உடன்பிறப்பு..அது வேற சர்ச்சைக்கெல்லாம் வழி வகுக்கும்..நாம தனியா மீட் பண்ணும் போது பேசுவோம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இய‌ற்கை said...
hmm..correct...//

வாங்க இயற்கை..நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அறிவிலி said...
நல்ல காமெடியனாகத்தான் இருந்தார்.
அரசியல்ல பெரிய ட்ராஜடி ஆயிரும் போல.//

பல முன் உதாரணங்கள் இருந்தும்...தெரியலையே!

மணிகண்டன் said...

நியாயமானதை மட்டும் தான் செய்யவேண்டுமா ? அது தான் நியாயமா ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
நியாயமானதை மட்டும் தான் செய்யவேண்டுமா ? அது தான் நியாயமா ?//

இப்போதெல்லாம்..சில அநியாயங்களும் நியாயப்படுத்தப் படுகின்றன

"உழவன்" "Uzhavan" said...

கட்சிக்கு கட்டுப்படவேண்டும் என்பது சரிதான்.. அதனால்தான் கட்சிகள் செய்கின்ற ஒரு சில அக்கிரமங்களுக்கும், மறுப்புத்தெரிவிக்காது/கேள்விகேட்காது ஒத்துப்போகிற உறுப்பினர்களூம் இருக்கிறார்களோ?? :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உழவன் " " Uzhavan " said...
கட்சிக்கு கட்டுப்படவேண்டும் என்பது சரிதான்.. அதனால்தான் கட்சிகள் செய்கின்ற ஒரு சில அக்கிரமங்களுக்கும், மறுப்புத்தெரிவிக்காது/கேள்விகேட்காது ஒத்துப்போகிற உறுப்பினர்களூம் இருக்கிறார்களோ?? :-)//

உள்ளங்கை நெல்லிக்கனி

george said...

//பதவியை ராஜிநாமா செய்யுங்கள்.பின் நடக்கும்..இடைத்தேர்தலில் போட்டியிட்டு (எந்த கட்சி சார்பாய் இருந்தாலும்) வெற்றி பெற்று...மக்கள் உங்கள் பக்கம்தான் என நிரூபியுங்கள்.//

அப்படி பாத்தா ..டி எம் கே ..பா மா கா கூட்டணில ஜெயிச்ச இரு தரப்பும் ராஜினாமா பண்ணனும்.....

venkat said...

தமிழா தமிழா நீங்கள் சொல்வது சரியா? சிந்தித்துப் பாருங்கள் அதிமுக சார்பில் நின்று மலாபூர் தொகுதியில் வெற்றிபெற்றதனால் அதிமுக என்ன செய்தாலும் பொறுத்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று கூறுவது என்ன நியாயம். அதிமுகவை அடிமைகளின் கூடாரமாக வைதóதுள்ளார். இன்றைக்கு தமிழ் நாடு தரம் தாழ்ந்து போனதற்கு அதிமுக தலைவி ஜெயலலிதா ஒரு முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. ஈழப்பிரச்சனையை தமிழகத்தில் குழப்பத்தை உண்டுபன்னியதில் ஜெ-யின் பங்கு முக்கியமானதாகும். எஸ்.வி. சேகர் செய்தது 100% சரி.எஸ்.வி. சேகரை பின்பற்றி அனைவரும் அவ்வாறே செய்யவேண்டும்.