Thursday, December 24, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (25-12-09)

1)டிசம்பர் 24 மற்றும் 25 ஆப்த நண்பர்களாகவும்..கொள்கைகளில் இரு துருவங்களாயும்..நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்த இருவரும் 94ஆம் வயதில் அமரர் ஆனார்கள்.அவர்கள் பெரியார் மற்றும் ராஜாஜி ஆவர். ஆச்சர்யமான மற்றொன்று 24..புரட்சி தலைவர் மறந்த நாள் வேறு.இப்படி அமைவது அபூர்வம்.அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள்..அன்று பிறந்த மற்றொரு காந்தியவாதி லால் பகதூர் சாஸ்திரி.காலா காந்தி என்று அழைக்கப்பட்டவரும்..காந்திய வாதியுமான காமராஜர் மறைந்த தினமும் அக்டோபர் 2.

2)1812ல் பிரிட்டனும்..அமெரிக்காவும் யுத்தமிட்ட போது கனடாவில் இருந்த அமெரிக்க ராணுவத்திற்கு நியூயார்க்கிலிருந்து ஆண்டர்சன் என்பவர் உணவிற்கு இறைச்சி அனுப்பிக் கொண்டிருந்தார்.நல்ல இறைச்சியாக 'பேக்' செய்வதில் வில்சன் சாமுவேல் என்பவர் அவருக்கு உதவியாய் இருந்தார். யு.எஸ்.என்று பேக் செய்து வரும் பெட்டிகளை ராணுவ வீரர்கள் தமாஷாக அங்கிள் சாம் அனுப்பிய இறைச்சி வந்ததா என்பர்.இதுவே நாளடைவில் அமெரிக்காவிற்கு 'அங்கிள் சாம்' என்ற செல்லப் பெயர் ஏற்பட்டு விட்டது.

3)தாய்மொழிக் கல்வி பற்றி ஜெயகாந்தனை ஒருமுறைக் கேட்டபோது..தாய்மொழி என்பது பயிலப்பட வேண்டிய ஒன்றல்ல.அது இயல்பாக பாண்டித்யம் பெற வேண்டிய ஒன்று.நான் ஒரு தமிழ்ப்புலவன் அல்ல..ஆனால்..உங்க வாத்தியார்களிடமோ..உங்கள் பள்ளிக்கூடங்களிலோ நான் படிக்கவில்லை.அறிவாளியாவதோ..முட்டாளாவதோ அவரவர் விருப்பம் என்றார்.

4)இந்திய விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலும், 12 ஆண்டுகள் தமிழக காங்கிரஸ் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,4 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்,9 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும்,5 ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும்,இருமுறை இந்திய பிரதமரை உருவாக்கிய ஒரே தமிழராகவும் இருந்த காமராஜர் இறந்த போது வாழ்வில் அவருக்கு எஞ்சியது
60 ரூபாய் 10 கதர் வேஷ்டி, சட்டைகள் மட்டுமே

5)சந்தோஷம் என்பது விரும்பியதை சொந்தமாக்கிக் கொள்வதில் இல்லை.கிடைத்த பின் அதை அனுபவிப்பதில் தான் இருக்கிறது.

6)தோல்விகளுக்கு இடையேதான் வெற்றி இருக்கிறது.குழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.பிரச்னைகளுக்கு இடையே தான் சத்தியம் இருக்கிறது - அப்துல் கலாம்

7) ஒரு கவிதை

படித்தான்

படித்தாள்

கை நிறைய சம்பாதிக்கிறான்

கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்

மழலைகள்

8)ஒரு ஜோக்

தலைவர் ஏன் கோபமாய் இருக்கார்

சிறந்த நடிகருக்கான விருதை எதிர்ப்பார்த்தாராம்...வசனத்திற்கான விருது மட்டுமே கிடைத்ததாம் அதனால்தான்..

34 comments:

Cable சங்கர் said...

ஜோக் சர்காஸ்டிக்..:))

அகநாழிகை said...

நல்ல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வாசு

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தகவல்கள்....பெரியார் நினைவுநாளை நினைவு கூர்ந்தது அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆரூரன் விசுவநாதன்

vasu balaji said...

கவிதையும் ஜோக்கும் அருமை:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

உண்மைத்தமிழன் said...

காமராஜர் இறந்தபோது அவருடைய சேமிப்புப் பணமாக வீட்டு பீரோவில் இருந்தது வெறும் 350 ரூபாய்..!

இவர்தான் மனிதர்..!

shabi said...

60 ரூபாய் 10 கதர் வேஷ்டி, சட்டைகள் மட்டுமே......////உள் குத்து எதும் இல்லயே......

T.V.ராதாகிருஷ்ணன் said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
காமராஜர் இறந்தபோது அவருடைய சேமிப்புப் பணமாக வீட்டு பீரோவில் இருந்தது வெறும் 350 ரூபாய்..!

இவர்தான் மனிதர்..!///

வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// shabi said...
60 ரூபாய் 10 கதர் வேஷ்டி, சட்டைகள் மட்டுமே......////உள் குத்து எதும் இல்லயே......///

உள்குத்தா..அப்படின்னா..?

:-)))

பின்னோக்கி said...

நிறைய அறியாத தகவல்களுக்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பின்னோக்கி

அத்திரி said...

ஐயா கடேசி ஜோக்கு......சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்

க.பாலாசி said...

நல்ல தகவல்களை தொகுத்திருக்கீங்க. கடைசியில கவிதையிலும் டச் பண்ணிட்டீங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
ஐயா கடேசி ஜோக்கு......சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்//

நன்றி அத்திரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாசி said...
நல்ல தகவல்களை தொகுத்திருக்கீங்க. கடைசியில கவிதையிலும் டச் பண்ணிட்டீங்க..//

நன்றி க.பாலாசி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அறிவாளியாவதோ..முட்டாளாவதோ அவரவர் விருப்பம் என்றார்.//

அளவுகோள் கூட அவரவர் விருப்பம்தான்...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சந்தோஷம் என்பது விரும்பியதை சொந்தமாக்கிக் கொள்வதில் இல்லை.கிடைத்த பின் அதை அனுபவிப்பதில் தான் இருக்கிறது.//

இது தெரிந்தவர்கள் வேட்டைக்காரனை ரசிக்கிறார்கள்....,

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//அறிவாளியாவதோ..முட்டாளாவதோ அவரவர் விருப்பம் என்றார்.//

அளவுகோள் கூட அவரவர் விருப்பம்தான்...,//


வருகைக்கு நன்றி suresh
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
//சந்தோஷம் என்பது விரும்பியதை சொந்தமாக்கிக் கொள்வதில் இல்லை.கிடைத்த பின் அதை அனுபவிப்பதில் தான் இருக்கிறது.//

இது தெரிந்தவர்கள் வேட்டைக்காரனை ரசிக்கிறார்கள்....,///

:)))

மணிகண்டன் said...

சூப்பர் தகவல்கள். நல்ல போஸ்ட். சுண்டல் அடிக்கடி எழுதுங்க. (தயவு செய்து கவிதை வேண்டாம் :)-

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு டிவிஆர்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பா.ராஜாராம் said...
நல்ல பகிர்வு டிவிஆர்!//

வருகைக்கு நன்றி பா.ரா.

சிநேகிதன் அக்பர் said...

சுண்டல் அருமை.

தகவல் பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

ஜெயகாந்தன் வார்த்தைகளை ரசித்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

ரோஸ்விக் said...

சுண்டல் அருமை. அதிலும் ஜோக் - சூப்பர் குத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ரோஸ்விக்

cheena (சீனா) said...

அன்பின் ராதாகிருஷ்ணன்

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டு நெம்ப நாளாச்சி

தகவல்கள் - கவிதை அருமை அருமை

நல்வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி