Tuesday, February 9, 2010

ஊடுதல் காமத்திற் கின்பம் (கொஞ்சி விளையாடும் தமிழ்-14)



தலைவன் தலைவியை தற்காலிகமாகப் பிரிந்து வெளியூர் செல்கிறான்.அவன் திரும்பி வரும் நாளை எதிர் நோக்கிக் காத்திருக்கிறாள் தலைவி.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்கேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

நெடுந்தொலைவு சென்று காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்த் தெரிகிறது.

அவர் எப்போது வருவார்..எப்போது வருவார்..என நெஞ்சம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.அவரை என்று காண்பேன்..அவரைக் கண்ட பின்னரே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும் என்கிறாள் தலைவி.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகோ டேறுமென் நெஞ்சு

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்தோள் பசப்பு

என்றெல்லாம் வாடுகிறாள்..வரட்டும்..அவர்..ஒருநாள் வந்துதானே ஆகவேண்டும்..வந்தால் என் துன்பம் முழுதும் தீரும் வகையில் அவரிடம் இன்பம் துய்ப்பேன் என்கிறாள்..

வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

தலைவன் வருவதாகச் சொன்ன நாட்களில் எல்லாம் வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறாள்.தினம் தினம் ஏமாற்றமே..வந்தால் அவருடன் பேசக்கூடாது..ஊடல் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறாள்.ஆனாலும் தனிமை அவளை வாட்டுகிறது.அச்சமயம் அவன் வந்துக்கொண்டிருக்கும் செய்தி எட்டுகிறது.

கண்ணின் மணியாம் காதலர் வந்ததும் பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனா...அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனா..அல்லது ஊடுதல்..கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனா..ஒன்றுமே புரியவில்லையே..எனக்கு..இன்பம் கட்டுக் கடங்காமல் போனதால்..எனமனதில் இன்பம் பொங்க செய்வதறியாது இருக்கிறாள்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்ணன்ன கேளிர் வரின்

6 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஊடல் வந்தால் காமத்திற்கு இன்பம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்காக காமம் சிறக்க ஊடல் கொள்வது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

உயர்ந்த மனிதன் படத்தில் சௌவுகார் ஜானகி, சிவாஜியுடன் ஊடல் கொள்வாரே அந்தக் காட்சி உங்களுக்கு நினைவு வருகிறதா..,

goma said...

தேடுதலில் வாடுதல் கண்ட தலைவி கூடுதலா ஊடுதலா என்று கலங்கி நிற்கிறாளோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆனாலும் உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்தான் சுரேஷ்..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தேடுதலில் வாடுதல் கண்ட தலைவி கூடுதலா ஊடுதலா என்று கலங்கி நிற்கிறாளோ//

கோமா..ம்..என்ன சொல்றது..பின்னிட்டீங்க..போங்க..

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

T.V.ராதாகிருஷ்ணன் said...

சுரேஷ் உங்கள் பின்னூட்டம் எனக்கு இந்த குறளை ஞாபகப் படுத்தியது

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

ஊடலுக்கும், கூடலுக்கும் இடையே உள்ள காலம் உணவில் இடும் உப்பு போல அளவோடு இருக்க வேண்டும்.அது நீடித்தால் உப்பு நிறைந்த உணவு அடையும் நிலையே ஏற்படும்