Wednesday, October 13, 2010

வடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்

அன்பின் ராஜேந்திரன்,
வணக்கம்.
பதிவர்கள் உங்களை வேலன்,அண்ணாச்சி என்றெல்லாம் அழைத்தாலும் , உரிமை எடுத்துக் கொண்டு உங்களை ராஜேந்திரன் என அழைப்பது அநேகமாக நானாகத்தான் இருக்கும்.அந்த உரிமையிலேயே இம்மடலை எழுதுகிறேன்.
பதிவர்களிடையே உங்களுக்கு இருந்த மரியாதையைக் கண்டு வியந்திருக்கிறேன்.சிறு சிறு சர்ச்சைகளை உங்கள் அணுகுமுறையில் தீர்த்த போது உங்களது ஆளுமை கண்டு பிரமித்திருக்கிறேன்.
என் ஆதங்கங்களையும் ஓரிரு முறை உங்களுடன் மின்னஞ்சலில் பகிர்ந்துக் கொண்டுள்ளேன்.
சமீபத்தில்..பதிவுலக பிரச்னை ஒன்றிற்காக நீங்கள் மனம் வருந்தி என்னிடம் தொலைபேசிய போது அந்த நிகழ்ச்சி உங்கள் மனதை எவ்வளவு தூரம் பாதித்திருந்தது என நான் உணர்ந்தேன்.
'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை' என்பது போல உங்களைப் போன்றோர் இருந்த காரணத்தால் பதிவுலக அவ்வப்போதைய பிரச்னைகள் ஓரளவு நல்ல முறையில் தீர்க்கப்பட்டன..
ஆனால் திடீரென நீங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டது..என் போன்றோர்க்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் எழுத்துகளை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளாததால்..இழப்பு என் போன்றோர்க்குத்தான்.
உண்மையில் உங்கள் இந்த முடிவிற்குக் காரணம்..கீழ்கண்ட இரண்டில் ஒன்றாய் தான் இருக்கும்..
1)பதிவர்களிடையே காணப்படும் தனி மனிதத் தாக்குதல்
2) அச்சக வேலையைவிட்டு கணிணி துறையில் நீங்கள் இறங்கியதால் ஏற்பட்ட வேலைப் பளு

முதல் காரணம்..என்னால் ஒப்புக் கொள்ளமுடியாது..சம்பந்தப் பட்ட பதிவர்கள் மனதில் ஏற்பட்ட வடுவே ஆறி..மீண்டும் பதிவிட ஆரம்பித்து விட்ட நிலையில்..இந்த பாதிப்பு உங்களையும் தற்காலமாகத் தாக்கிவிட்டு மறைந்திருக்க வேண்டும்
இரண்டாம் காரணம்..உண்மை என்றீர்களானால் அதையும் ஏற்க முடியாது..வேலைப் பளு இருக்கலாம்..முன் போல் எழுதமுடியாமல் இருக்கலாம்..ஆனால் அவ்வப்போது எழுத முடியும் அல்லவா? அதைச் செய்யுங்கள்.
என் வேண்டுகோளை ஏற்பீர்கள் என எண்ணுகிறேன்.

அன்புடன்
T V Radhakrishnan

15 comments:

Radhakrishnan said...

வருவார் எழுதுவார் உங்கள் விண்ணப்பம் நிறைவேறும்.

அபி அப்பா said...

இந்த பதிவை சகட்டுமேனிக்கு வழிமொழிகின்றேன்!!!!

நர்சிம் said...

V.Radhakrishnan said...
வருவார் எழுதுவார் உங்கள் விண்ணப்பம் நிறைவேறும்.
//

yes my wish too

Unknown said...

வேலன் அண்ணாச்சி சீக்கிரம் எழுத வாங்க..

vasu balaji said...

me too

Jerry Eshananda said...

தந்தைக்கு உரிய கரிசனம் வெளிப்படுகிறது.....

கார்க்கிபவா said...

உஙக்ள மாதிரி அக்கறையான ஆளு யாரும் இல்லைங்க..

எனக்கு நல்லாவே தெரியும்

Rajasurian said...

இந்த பதிவை நானும் சகட்டுமேனிக்கு வழிமொழிகின்றேன்

Thamiz Priyan said...

வழிமொழிகின்றேன்.!

வால்பையன் said...

அதானே நாம மட்டும் அடி வாங்கலாமா, நண்பனையும் கோர்த்து விடுவது தானே வழக்கம்!

வால்பையன் said...

தல,, சும்மா லுலுலாயிக்கு தான் சொன்னேன், அதுல ஸ்மைலி விட்டு போச்சு!

உண்மையில் அண்ணாச்சி திரும்ப வரணும் என்பது தான் என் ஆசையும்!, இங்கிருக்கும் மொக்கைகளை விட அண்ணாச்சி கூட சண்டைபோடத்தான் எனக்கு பிடிச்சிருக்கு!

thiyaa said...

அம்மாடியோவ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

Radhakrishnan said...

வடகரை வேலன் அவர்கள் எழுத வந்துவிட்டார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

வால்பையன் said...

நானும் இன்னைக்கு ஒரு பதிவு போட்டுட்டேன் என்பதை மகிழ்வுடன் சொல்லி ”கொல்”கிறேன்!