Thursday, November 11, 2010

மத்திய அரசுக்கு 'ஜெ' திடீர் ஆதரவு

மத்திய மன்மோகன்சிங் அரசுக்கு 'ஜெ' திடீரென ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், அதன் ஏலம் மூலம் நாட்டுக்கு 1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தனது இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்விவகாரத்தில் காங்கிரஸ்-தி.மு.க., வினரிடையே மோதல் ஏற்படலாம் என்ற நிலையில், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையை சீரியஸாக எடுத்துக் கொண்டால், ஒரு அமைச்சர் கூட பணியாற்ற முடியாது என தி.மு.க., கூறியுள்ளது.
'ஓடு மீன் ஓட..உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கு' போல இருந்த 'ஜெ' திடீரென காங்கிரஸிற்கு தி.மு.க., அளித்துவரும் ஆதரவை வாபஸ் வாங்கினால் தான் நிபந்தனை அற்ற ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பேட்டியில் அவர் இதை தெரிவித்துள்ளார்.
தி.மு.க., விற்கு 18 எம்.பி.க்கள் உள்ளனர்..அ.தி.மு.க.,விற்கோ 9 எம்.பி.க்கள் இருந்தாலும் தன்னால் மேலும் 9 எம்.பி.க்கள் ஆதரவைப் பெற்றுத் தர முடியும் என்றுள்ளார் அவர்.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எந்த ஊழலும் நடைபெறவில்லை என உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு ஒரு மனுதாக்கல் செய்துள்ளது.

4 comments:

vista consultants said...

If DMK quits from central ministry, india's GDP will rise atleast by 0.5 percent

sathishsangkavi.blogspot.com said...

எப்படியோ அம்மா கொடநாடு போகும்போது எல்லாரையும் ஒரு கலக்கு கலக்கிட்டாங்க...

காங்கிரஸ் கூட்டு சேருதோ இல்லையோ இப்ப கூட்டணியில் இருக்கறவங்களுக்கு கொஞ்சம் புளிய கரைக்கும்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
stoxtrends

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கவி