Showing posts with label அரசியல் -நகைச்சுவை. Show all posts
Showing posts with label அரசியல் -நகைச்சுவை. Show all posts

Tuesday, February 8, 2011

வாய் விட்டு சிரிங்க...அரசியல் ஜோக்ஸ்




(தேர்தல் வரை வாரா வாரம் இனி அரசியல் ஜோக்ஸ் வரும்..)

1) தலைவர் எந்தக் கூட்டணியிலே இருக்காராம்?

காங்கிரஸ் வேணாம்னுட்டதாம்..அதனால மரம் வெடி மன்னாரை ஒபாமாகிட்ட அனுப்பியிருக்கார்.. பிரதமர் கிட்ட சிபாரிசு செய்யச்சொல்லி கேட்கறதுக்கு

2)மாநிலத்திலேயே இருந்துட்டதற்கு தலைவர் இப்போ ஏன் வருந்தறார்..

மாநிலத்திலே லட்சக் கணக்கிலேதான் ஊழல் பண்ண முடிஞ்சுதாம்.மத்திலே போயிருந்தா கோடிக் கணக்கில பண்ணியிருக்களாமேன்னு வருத்தப் படறார்

3)அந்த கட்சித் தலைவர் ஏன் நீதிமன்றத்தையே சுத்தி வந்துக் கிட்டு இருக்கார்..

எல்லாக் கோர்ட்டிலேயும் இன்னிக்கு அவரோட கேஸ்கள் ஒரே சமயத்திற்கு வருதாம்.

4)கூட்டணிக் கட்சிக்கு ஆதரவா ஏன் நம்ம தலைவர் பேச மாட்டேன்னு சொல்றார்

கடைசிலே கூட்டணியிலே இருந்து கழட்டிவிட்டுட்டா என்ன பண்றதுன்னுதான்.இறுதி முடிவு வரை காத்திருப்பார்

5) மக்களோட கூட்டணின்னு சொல்ற தலைவர் இப்போ எல்லாம் ஏன் ஒன்னும் பேசறதில்ல..

மக்கள் இவரை கூட்டணியிலே சேர்க்க மாட்டோம்னு சொல்லிட்டாங்களாம்

6)நம்ம தலையெழுத்து இப்படி ஆகிப் போச்சேன்னு தலைவர் ஏன் வருத்தப் படறார்..

தமிழகத்திலே நடக்கற தேர்தலுக்கு டெல்லியிலே கூட்டணிக்கு போகணும்னே வருத்தம்..அப்புறம் இந்தியாவிலே பிறந்தவங்கக் கிட்ட மட்டுமல்லாமல் வெளிநாட்டிலே பொறந்தவங்கக் கிட்ட கூட்டணிக்கு பல்லை இளிக்க வேண்டியிருக்கேன்னு வருத்தம்..ம்..ம்..

7) இரும்பைவிட அசைக்க முடியா உலோகம் எது தெரியுமா?

நம்ம பிரதமர்தான்..என்ன நடந்தாலும் அசைஞ்சுக் கொடுக்கறதில்லையே

8)நீங்க விரும்பற கூட்டணி அமைப்பேன்னு தொண்டர்கள் கிட்ட சொன்ன தலைவராலே ஒன்னும் செய்ய முடியலையாமே..

ஆமாம்..தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணி வேணும்னு தொண்டர்கள் சொல்றாங்களாமே

9)அந்தக் கட்சி தனித்து நின்னா 0 இடங்கள்லதான் வெற்றி பெறும்னு இந்தக் கட்சி சொல்லுதே..

ஆமாம்..இந்தக் கட்சி வெற்றி பெறதற்கு முன்னல இருக்கற 1 எந்தக் கட்சியாம்.அது இல்லேன்னா இவங்களும் 0 தான்

10) ஆதரவற்றோர் இல்லம் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னியே..என்ன பெயர் வைக்கப் போற..

பி.ஜே.பி., இல்லம்

Wednesday, October 15, 2008

இலங்கை தமிழர் பிரச்னை...நான் விடைபெறுகிறேன்..நன்றி

இலங்கை தமிழர் பிரச்னை குறித்து..அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றதும்...அதில் மத்திய அரசுக்கு இரண்டு வார அவகாசம் கொடுப்பதாகவும்..அதற்குள் மைய அரசு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் ...தவறினால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கனிமொழியும்..தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக...ராஜினாமா கடிதத்தை கலைஞரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது போன்ற சமயங்களில் கலைஞரின் கரத்தை பலப்படுத்த வேண்டியது..ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதால்..நானும் பதிவுகள் இனி இடுவதில்லை என தீர்மானித்து..ராஜினாமா கடிதத்தை என் மனைவியிடம் கொடுத்துள்ளேன்.இரண்டு வாரங்களில் மைய அரசு முடிவெடுக்கவில்லை எனில் என் ராஜினாமா ஏற்கப்படும் என என் மனைவி தெரிவித்துள்ளார்.