Tuesday, May 17, 2011

தி.மு.க., தோற்றது யாரால்...



நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை.

தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139

தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள்.

வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000.

இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது.

இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்...

எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்சியைத் தவிர்த்து..

பலருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் இருந்தது..இலங்கை தமிழர்கள் பிரச்னையில்...அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது..வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்..

அதனால் தான் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசால் 34லட்சத்திற்கு சற்று அதிகமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்நிலையில்..ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்தவர்கள்...எக்கட்சியும் சாரா பொதுமக்கள்..

இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இங்கு வேறு ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்..

தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 42 விழுக்காடு வாக்குகள் வாங்கியுள்ளது.

ஆனால்..தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 35.6 விழுக்காடே வாக்குகள் வாங்கியுள்ளது.

ஏன் அப்படி?

தி.மு.க., வைக் கூட மன்னிக்கத் தயாராய் இருந்த மக்கள்..காங்கிரசை மன்னிக்க விரும்பவில்லை.தண்டிக்கவே விரும்பியுள்ளனர்.

9 comments:

வேலவன் said...

உண்மை என்று தான் படுகிறது.. ! உன்னால நான் கெட்டேன் , என்னால நீ கெட்ட கதை தான் போல.. !
காங்கிரஸ் மீதான கோவத்தை ௨௦௦௯ பாராளுமன்ற தேர்தல்ல காமிக்காம விட்டுட்டு சட்டமன்ற தேர்தல்ல காமிச்சிருக்காங்க.. .. ஆச்சரியமான தமிழ் மக்கள்பா..

காங்கிரஸ் அம்மா கூட கை கோர்க்க போகுது. இது காங்கிரசுக்கு கை வந்த கலை.. திரும்பவும் ஏமாற்றம் மக்களுக்கு தான் ..

Chitra said...

நல்ல அலசல்.

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

சிநேகிதன் அக்பர் said...

உண்மைதான் எக்காட்சியும் சாராதவர்களே வெற்றியை தீர்மானிக்கின்றனர்.

அமைதி அப்பா said...

//இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.//

சரியா சொல்லியிருக்கீங்க.

**********
மாற்றம் ஏமாற்றம் குறித்த எனது பதிவு. படித்துக் கருத்துச் சொல்லுங்களேன்.


இது நல்ல (ஏ)மாற்றம்...!

நன்றி.

Anonymous said...

வடிவேலு விஜயகந்தை வெளுத்து காட்டியதை திரும்ப திரும்ப டிவியில் காட்டியதும் 10 சதவீத எப்போதும் ஓட்டு போடாத நடுநிலையாளர்கள்? மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்து விடுமோ எனபயந்து போய் ஓட்டளிக்க வந்தார்களாம்

Unknown said...

இதையெல்லாம் ஆள்பவர்களும் / ஆளப்போகிறவர்களும் எப்போது சிந்திப்பார்களோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
வேலவன்
Chitra
நசரேயன்
அக்பர்
அமைதி அப்பா
சதீஷ்குமார்
ரமேஷ் பாபு

Kathasiriyar said...

தாத்தாவிற்கு தோல்விக்கான ஒரு நல்ல காரணம் கிடைத்துவிட்டது.