Wednesday, July 27, 2011

அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சி

தமிழகத்தில் இன்று நிலவும் அரசியல் சூழலில் மக்களுக்கு நம்பிக்கையும் வாழ்வும் அளிக்க ஒரு மற்று சக்தி தேவைப்படுவதால்..பாமக மாற்று அணிக்கு தலைமை ஏற்க முடிவெடுத்துள்ளது.ஆதலால் இனி எந்த திராவிடக் கட்சிகளுடன் கூட்டணிக்கு போகமாட்டோம்.உள்ளாட்சித் தேர்தலில் பாமக தலைமையில் அணி அமைத்து போட்டியிடுவோம் என நேற்று கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2016 தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இச் செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நமது நிருபருக்கு தலைவர்கள் அளித்த கற்பனை பேட்டி..

கலைஞர்- மருத்துவர் ராமதாஸின் இம்முடிவு அதிர்ச்சியை கொடுக்கிறது.இதனால் இரவு முழுதும் எனக்கு உறக்கமில்லை.இனி தி.மு.க., எதிர்காலம் குறித்து அதிகப்படியான கவலை என்னை தொற்றிக் கொண்டுவிட்டது.பாமகவினர் தங்கள் முடிவை மறு பரீசலனை செய்ய வேண்டும்.

ஜெ- மருத்துவ சகோதரர் ராமதாசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.அவரை நம்பி கட்சி நடத்தும் தலைவர்கள் பற்றி அவர் சற்றும் கவைலைப்படவில்லையே! அவரின் இம் முடிவு மறு பரீசலனை செய்யாவிடின் பாமகவினர் மீதும் நில அபகரிப்பு மோசடி வழக்குகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

விடுதலை சிறுத்தை தொல்.திருமாவளவன்- கடந்த இரு நாட்களாக மருத்துவர் என்னை அவர் கூட்டணியில் சேர தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கிறார்.இவரை நம்பி எப்படி....(மனதிற்குள்..மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க முடியுமா)

வைகோ-நமக்கு எதிர்காலம் இருக்கும் என்று எண்ணுகையில் இப்படி ஒரு அறிக்கையா? வேண்டுமானால் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் எனச் சொல்லி அவரது முடிவை மாற்றப்பார்ப்போம்..

கம்யூனிஸ்ட்-ஆகா..நாம கூட்டு சேர இன்னொரு அணி தயாராயிடும் போல இருக்கே..123 ஓகே..

விஜய்காந்த்,சரத்குமார்,கார்த்திக் ..- 2016ல் நாம முதல்வர்னு நினைக்கிறோம்...இவர் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறாரே

மக்கள்- நம்மை மறந்துவிட்டார்களே!..அரசியலில் யார் யாருக்கு என்ன இடம்னு தீர்மானிப்பது நாமதானே!

No comments: