Monday, April 30, 2012

தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம்



பல ஆண்டு முடக்கத்திற்குப் பின்னர் டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனித் தமிழ் ஈழம் உருவாக்கியே தீர வேண்டும். அதைப் பார்க்காமல் நான் கண் மூட மாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக பேசி வருகிறார். காங்கிரஸிடமிருந்து வேகமாக விலகி வரும் திமுகவின் இந்தப் புதிய கோஷம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெசோ உறுப்பினர்களான அன்பழகன், கி.வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை கருணாநிதியும் உறுப்பினர்களும் சந்தித்தனர். அப்போது சுப. வீரபாண்டியன் கூட்டத் தீர்மானம் குறித்துக் கூறுகையில், இலங்கையில், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே இனியும் ஒத்துப் போகாது. இரு வேறு இனங்களான இவர்கள் தனித் தனியாக வாழ்வதே சரியானதாக இருக்கும். தமிழர்களின் தாயகப் பகுதிகளான கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களைப் பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதாக இருக்கும். எனவே தனித் தமிழ் ஈழம் அமைப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பை ஐநா. பொதுச் சபை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பின்னர் கருணாநிதி பேசுகையில், சிங்களர்களை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்கள் அவர்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பித்தான் நான் கூட சென்னையில் உண்ணாவிரதம் இருந்ததை வாபஸ் பெற்றேன். ஆனால் அவர்கள் பொய்யான உறுதியமொழியை அளித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழர்களையும் கொன்று குவித்தனர்.

இனியும் தமிழ் மக்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது. தமிழர்களுக்கென் தனி் நாடு, தமிழ் ஈழ நாடு அங்கே அமைந்தால் மட்டுமே தமிழ் இனம் அங்கு பிழைக்கும். எனவே இதை ஐ.நா. பொது வாக்கெடுப்பு மூலம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


டெசோ பற்றி தெரிய http://www.envazhi.com/tamil-eelam-supporters-organisation-teso-an-overview/


தகவல் தட்ஸ்தமிழ்


Tuesday, April 24, 2012

அன்புடன் அழைக்கிறேன்...




எனது நாடகம் 'மழையுதிர் காலம்' 28ஆம் நாள் அரங்கேறுகிறது.அதற்கு அன்புடன் உங்களை அழைக்கிறேன்


Monday, April 23, 2012

திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை:




திமுகவில் கட்சிக் கட்டுப்பாட்டை காப்பாற்றுவதற்கு 'அறுவை சிகிச்சை' தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை காப்பதற்கு இயக்க பாசம், கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து மற்ற பாசங்கள் (பிள்ளை பாசம்) குறுக்கிடாமல் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவில் பொருளாளரும், இளைஞரணியின் பொறுப்பாளருமான மு.க.ஸ்டாலினுக்கும், மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க. அழகிரிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந் கி.வீரமணி திமுக தலைமைக்கு "மிக அவசரம் அவசியம்' என்ற தலைப்பில் ஒரு வேண்டுகோள் ஒன்றை அறிக்கை மூலம் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

திராவிடர் இயக்க நூறாவது ஆண்டு நடக்கும் இந்த முக்கியமான காலகட்டத்தில், திமுகவின் பொறுப்பாளர்களாக உள்ள பலரின் நடவடிக்கைகளைப் பற்றி ஏடுகளில், ஊடகங்களில் வரும் பல்வேறு செய்திகள் நம்மைப் போன்ற தாய்க் கழகத்திற்கும், உண்மையான திராவிடர் இயக்கப் பற்றாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அளவற்ற, வார்த்தைகளில் வடிக்க முடியாத துன்பத்தையும், மனவேதனையும் தருகிறது.

ஏற்கனவே திமுகவை அழிப்பதே தமது பிறவிப்பயன் என்ற ஊடகங்களுக்கு அவல் பாயாசம் சாப்பிட்டதுபோல சில நிகழ்வுகள் கிடைப்பதோடு விரிசல் என்று ஏகமாக விளம்பரப்படுத்தி, கட்டடத்தையே, கட்டுமானத்தையே காணாமல் போகச் செய்ய இத்தருணத்தை விட்டால் வேறு நல்ல தருணம் வாய்க்காது என்று கருதி, பரபரப்புப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.

அய்யா அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் கூறிய அறிவுரை கல்லில் செதுக்கியதாகும். ''திமுகவை எதிரிகளால் அழிக்க முடியாது. இவர்களே ஒருவருக்கொருவர் அழித்துக் கொண்டால் தான் முடியும். திமுக கெட்டியான பூட்டு, அதற்குக் கள்ளச்சாவி போட்டுவிட யாரையும் அனுமதிக்கக் கூடாது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் முன்னிரண்டும்கூட முக்கியமில்லை. கட்டுப்பாடுதான் முக்கியம். மிகவும் முக்கியம். எனவே இயக்கத்தை, கட்சியைக் காப்பாற்ற தயவு தாட்சண்யம் காட்டாமல் கட்டுப்பாட்டிற்காக தேவையான நடவடிக்கை எடுக்கத் தயங்கக் கூடாது'' என்றார்கள்.

இனமானப் பேராசிரியர் அன்பழகன், அப்போது தலைமையை எதிர்த்துக் கூறிய ஒரு கருத்துக்காக அவர் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, அவரை கண்டித்து அறிக்கைவிடத் தயங்கவில்லை தந்தை பெரியார்.

அப்போது அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள். ''எனக்கு அன்பழகன் மீது கோபமோ, வெறுப்போ இல்லை. கழகக் கட்டுப்பாட்டிற்காகத்தான் இப்படி எழுதிட வேண்டியுள்ளது. தலைமை இடத்தில் அன்பழகன் இருந்து கருணாநிதி இப்படி கூறியிருந்தால் அவர் மீதும் கட்டுப்பாட்டை மீறிக் கருத்துக் கூறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் எழுதியிருப்பேன்'' என்று விளக்கமாக அவ்வறிக்கையில் குறிப்பிட்டார்கள்.

திமுக என்ற இயக்கம் காப்பாற்றப்பட வேண்டிய அவசியத்தை அன்று 1969-ல் தந்தை பெரியார் விளக்கியதை இப்போது அவர் தம் தொண்டன் என்ற முறையில் அதேபோல் திமுக என்ற மகத்தான திராவிடர் இயக்கத்தை அதற்கு சோதனை ஏற்படும் கட்டத்தில் அதனை நினைவூட்டும் கடமையும், பொறுப்பும் உண்டு நமக்கு என்பதால் இதனை எழுத நேரிட்டு விட்டது.

ஆளும் கட்சியின் மீது பலவகைகளிலும் அதிருப்திகள் தலை எடுக்கும் இக்காலகட்டத்தில் அவற்றை மனமாற்றம் செய்யும் வகையில் திமுகவில் உள்கட்சி பிரச்சனை என்பதை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதை அரசியலில் அனைத்தும் அறிந்த கலைஞருக்கு தெரியாததல்ல.

மேலும் அந்த அறிக்கையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். ''கலைஞர் தலைமையை நான் ஏற்கமாட்டேன் என்று கூட்டத்திற்கு தலைமை வகித்த க.அன்பழகன் என்று சொல்லியிருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். இது மிகவும் கண்டிக்கத்தக்கதோடு, இதற்கு ஒழுங்கு நடவடிக்கையை திமுக கட்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் எழுத வேண்டும் என்பதுபோல கட்சியின் மரியாதை குறையுமானால் தலைக்கு தலை தன் இஷ்டப்படி பேச நடக்க இடம் கொடுத்து வந்தால் பொதுத் தொண்டுக்கு கண்டிப்பாய் அதில் இடம் இருக்காது. கட்சித் தலைவரின் முதற்கடமை கட்சியின் கவுரவத்தை காப்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் கட்சி சாதாரண கட்சியானாலும் நான் உப தலைவரை நீக்கினேன். காரியதரிசியை நீக்கினேன். அதனால் எனக்கோ, கட்சிக்கோ ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை.

பொதுமக்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன். தி.மு.கழகத்திற்கு உழுது பயிரிட்டவர் அறிஞர் அண்ணாதான். இதற்கு நீர்பாய்ச்சி நல்ல விளைச்சலை உண்டாக்கியவர் கலைஞர்தான். கட்சிக்கு கலைஞர் இல்லாவிட்டால் பதவிக்கு ஏராளமான மெம்பர்கள் கிடைக்கலாமே ஒழிய, கட்சியை கட்டிக் காக்க கட்சி அங்கத்தினர்களில் பத்து பேர் ஆதரவை உடைய அங்கத்தினர் யாருமில்லை என்பதுதான் என் கருத்து.

இதை நான் திமுக அங்கத்தினர்களுக்கே சொல்கிறேன். எனவே இன்று திமுகவிற்கு வேண்டிய கட்டுப்பாடு, ஒழுங்குமுறை நடவடிக்கைதான். திமுகவினால் மக்களுக்கு ஆக வேண்டிய காரியம் ஏராளம் இருப்பதால் இதை நானாக எனது சொந்த முறையில் கடமையை முன்னிட்டு எழுதுகிறேன். அங்கத்தினர்கள் மன்னிப்பார்களாக''.

14.3.1969 அன்றைய விடுதலையில் கையொப்பமிட்டு தந்தை பெரியார் அறிக்கையில் காணப்படும் ஒரு சிறு பகுதி இது. மறுநாளும் இதுகுறித்த நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பெரியார்.

திமுக என்பது வெறும் கண்ணீரால் மட்டுமே வளர்ந்த இயக்கம் அல்ல. செந்நீர் விட்டும், பல்லாயிரம் தொண்டர்கள், தோழர்கள் தியாகத்தால் வளர்ந்தோங்கிய மகத்தான ஆலமரம் ஆகும். விழுதுகள் அதனை காப்பாற்றிட மட்டுமே பயன்பட வேண்டும். அதன் வேரினை அசைக்க என்றும் வீணர்களுக்கு விழுதுகளே துணை போகக்கூடாது.

தெரிந்தோ, தெரியாமலோ நோயாளியை காப்பாற்றிட அறுவை சிகிச்சை அவசியம். சில நேரங்களில் இயக்க கட்டுப்பாட்டை காப்பாற்றிட, கடும் சிகிச்சை, அது அறுவை சிகிச்சையானாலும் செய்துதானே தீரவேண்டும். நோயாளியை நோயிலிருந்து காப்பாற்றிட.

இயக்கமே எப்போதும் பிரதானமானது என்பதை அறியாதவர் அல்ல அதன் தலைவர் கலைஞர். இயக்கம் இருந்தால்தான் எவருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த எண்ணம் எல்லோருக்கும் புரியும். எனவே கட்டுப்பாட்டை காப்பாற்ற இயக்க பாசம்- கொள்கை பாசத்திற்கு மட்டுமே முக்கியத்தவம் கொடுத்து மற்ற பாசங்கள் குறுக்கிட இடந்தராமல் காப்பாற்றிட முன்வரவேண்டும் என உரிமையுடன் உண்மை உணர்வுடன் தந்தை பெரியாரின் சிந்தனை வழிபட்ட நிலையில் கேட்டுக் கொள்கிறோம்.

திமுக வரலாற்றில் அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியின் உழைப்பு பல சோதனைகளை வென்று அவ்வியக்கத்தை காப்பாற்றி இருக்கிறது. இப்போதும் விரைந்த விவேகமான முடியும் நடவடிக்கையும்தான் இன எதிரிகளை வாயடைக்க செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.

(தட்ஸ் தமிழ்)

செய்திகள் -அரசியல் -வீரமணி

Sunday, April 22, 2012

விதவைகளாக தமிழ் இளம்பெண்கள்





தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து அனைவருமே கண்ணீர் விட்டோம் என்று இலங்கை சென்று திரும்பியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.

அண்மையில் 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு சென்று அங்குள்ள தமிழர் நிலைக்குறித்து ஆராய்ந்தது.
அதில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கடந்த 16ம்தேதி முதல் 21ம்தேதி மதியம் வரை இலங்கையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும், குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது என்றார்.

எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் விதவைகளை பார்த்தோம்.

அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட குழுவினர் அனைவரும் கண்ணீர் விட்டோம்.

யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் ராணுவங்கள் முகாமிட்டுள்ளதை திரும்ப பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள்.

நாங்களும் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினோம்.

தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை திரும்ப பெற்று விட்டு ஆட்சியாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

கடந்த முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது.

இவ்வாறு டிகே.ரங்கராஜன் கூறினார்.


(வெப்துனியா)

செய்திகள் - இலங்கை- நிகழ்வு

Thursday, April 19, 2012

அணை உடையும் அபாயம்; 1 லட்சம் பேர் வெளியேற்றம்




அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

சீனாவில் உள்ள த்ரீ ஜார்ஜஸ் அணை உடையும் அபாயம் அதிகரித்து வருவதால் அப்பகுதியிலிருந்து மேலும் ஒரு லட்சம் பேர் வேறு இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய நீர்மின்சாரத் திட்டம் செயல்பட்டு வரும் இந்த அணையின் கரைப்பகுதிகளில் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதால் அந்த அணை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய இந்த ராட்சத அணையின் 5,386 இடங்கள் அபாய இடங்களாக அதாவது உடையும் பகுதிகளாக சீன அரசு அடையாளம் கண்டுள்ளது.

நிலச்சரிவை தடுக்க 355 இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். ஆனால் நிலைமை மோசமாகவே உள்ளது. அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால் ஒரு வேளை அணை உடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த பகுதியில் உள்ள 1 லட்சம் மக்களை நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளனர்.

உலகிலேயே பெரிய அணையான இது யாங்சி ஆற்றில் 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து 22 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை கட்டுமான பணி 1994-ம் ஆண்டு தொடங்கி 2006-ல் முடிவடைந்தது.

இந்த அணையை கட்டி முடிக்க ரூ.2லட்சம் கோடி செலவிடப்பட்டது. அப்போது அணை பகுதியில் இருந்த 14 பெரிய நகரங்கள், 133 சிறு நகரங்கள், 1350 கிராமங்கள் காலி செய்யப்பட்டு 14 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த அணையைக் கட்டி முடித்தவுடன் பல நூற்றாண்டுகளாக யாங்சீ நதியின் பயங்கர வெள்ளத்தினால் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் இவ்வளவு தண்ணீரை தேக்கிவைப்பது பெரிய நிலநடுக்கங்களுக்கு வழி வகுக்கும் என்றும் இதனால் ஆற்றுச் சூழலில் நீண்ட நாளைய சேதத்தையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தனர்.

மற்றொரு சுற்றுச்சூழல் குழுவான புரோப் இன்டெர்னேஷனல், சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையில், யாங்சீ நதியில் கட்டப்பட்டுள்ள 20 அணைகளால் பிரச்சனை ஏற்படும் என்றும் அப்பகுதி நிலநடுக்கப்பகுதி என்பதும் உறுதியான விஷயம் என்றும் தெரிவித்திருந்தனர்.

தகவல் வெப்துனியா

ஜார்ஜஸ் அணை -செய்திகள்

Monday, April 16, 2012

கேம்பஸ் இன்டெர்வியூவுக்கு தடை நீட்டிப்பு






கல்லூரிகளில் நேர்காணல் நடத்தி மாணவர்களை நேரடியாக தேர்வு செய்ய அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக சென்று கேம்பஸ் இன்டெர்வியூ எனப்படும் வளாக நேர்காணல் மூலம் மாணவர்களை தேர்வு செய்கின்றன.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளதால், வளாக நேர்காணலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பழனிமுத்து மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுத்துறை நிறுவனங்கள் நேர்காணல் நடத்தி நேரடியாக ஊழியர்களை தேர்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது.

தற்போது இந்த தடையை நீட்டித்துள்ள உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கேம்பஸ் வேலை தேர்வு

Saturday, April 14, 2012

உச்சி துன்பம்





துன்பத்தின் உச்சியில்

சுற்றமும்..நட்பும் அன்றி

என் நிழலும்

என்னை விட்டு விலகியதேன்

நான் பிராமணன்...' - சாதியைக் கையிலெடுக்கும் ராகுல்காந்தி!






உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடவைச் சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சி நிலையான வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக "சாதி" ஆயுதத்தை கையிலெடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் தலித்துகளின் நண்பனாக, இஸ்லாமியர்களின் நண்பனாக வேஷம் போட்டு காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து பார்த்தது. கட்சியின் "நம்பிக்கை நட்சத்திரம்" என அழைக்கப்படும் ராகுல்காந்தி தலித்துகளின் குடிசைகளுக்குள் ஓடி, உட்கார்ந்து சாப்பிட்டு போட்டுக் காண்பித்த அத்தனை காட்சிகளுமே அட்டர் பிளாப்பில்தான் முடிந்தது!

பிற்படுத்தப்பட்ட மக்களும் இஸ்லாமியர்களும் சமாஜ்வாதி கட்சியை நம்புகின்றனர். தலித்துகள் மாயாவதி பக்கம் சாய்கின்றனர். இதனால் உத்தரப்பிரதேசத்தில் "பிராமணர்கள்" வாக்குகளைக் கவர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இதன் முன்னோட்டமாக டெல்லியில் அண்மையில் ராகுல்காந்தி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த சாதி ஆயுதம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ராகுல்காந்தி சட்டென " நான் ஒரு பிராமின்... அப்புறம்தான் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்" என்று கூறியது கட்சியினரின் பிற்படுத்தப்பட்ட, தலித் பிரிவினரிடையே அதிர்வலைகளை உருவாக்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கென பாரம்பரிய வாக்காளர்களாக இருந்தவர்கள் பிராமணர்களே என்பதால் பிராமின் லாபி இத்தகைய ஒரு சூழலை காங்கிரசுக்குள் உருவாக்கி உள்ளது.

ராகுல்காந்தியின் இத்தகைய வெளிப்படையான ஒப்புதலால் காங்கிரஸ் கட்சியால் பிராமணர்களின் வாக்குகளைத் தக்க வைத்து அப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என்ற கனவில் அம்மாநில காங்கிரஸ் பெருந்தலைகள் இலவுகாத்துக் கொண்டிருக்கின்றன.

இதேபோல் கடந்த ஆண்டும் ராகுல்காந்தி தம்மை இப்படி பிராமின் என்று கூறியபோதே பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தலித்துகள், பிராமணர்களை ஒன்றிணைத்து மாயாவதி ஆட்சியைப் பிடித்த பார்முலாவை காப்பியடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.. தங்களுக்கு தலித்துகள், பிராமணர்கள் மற்றும் கணிசமான பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் சேர்ந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என எண்ணுகிறது காங்கிரஸ்.

ராகுல் தலைகீழாக நின்று போராடிப் பார்க்கிறார்.. எதைத் தின்றால் பித்தம் தெளியும் நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருப்பதாகவே அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன.

இதனிடையே ராகுலின் இத்தகைய ஒரு கருத்து இணையதளங்களில் கடுமையாக அலசலையும் உருவாக்கியுள்ளது. ராஜீவ் ஒரு பார்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் தம்மை பிராமணர் என்று சொல்வது சரியா ? என்ற ரேஞ்சில் தொடங்கும் விமர்சனம் இத்தாலிய குடியுரிமை வரை நீண்டு கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட இனத்தின் காவலன் என்று தம்மை காங்கிரஸ் கூறிக் கொள்வது பொய்தானே என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உபி பிராமணர்களுக்காக, நாடு முழுவதும் உள்ள தலித் - பிற்பட்ட மக்களின் விரோதியாகப் போகிறதா காங்கிரஸ்?

தகவல் தட்ஸ்தமிழ்

காங்கிரஸ்-ராகுல்-செய்திகள்

Friday, April 13, 2012

ஏப்ரல் 28 ஆம் நாள் மழையுதிர்காலம் ஆரம்பம்




ஏப்ரல் 28 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு சென்னை நாரத கான சபா அரங்கில் மழையுதிர்காலம் தொடங்குகிறது.

என்ன..ஒன்றும் புரியவில்லையா?

அன்று எனது புதிய நாடகம் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் ..கோடை நாடக விழாவில்..என் எண்ணம் , எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் 'மழையுதிர் காலம்' நாடகம் அரங்கேறுகிறது.

பதிவுலக நண்பர்களை அன்புடன் நாடகத்திற்கு அழைக்கிறேன்..

நன்றி


நாடகம் - மழையுதிர்காலம்

Tuesday, April 10, 2012

பேருந்து கட்டண உயர்வும்..பயணிகள் படும் பாடும்...




பல ஆண்டுகளாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவில்லையென...எல்லா ஆண்டுகளையும் சேர்த்து ஒரேயடியாக கட்டணங்களை உயர்த்தியுள்ளது ஒரு பக்கம் என்றாலும்..அப்பாவி மக்கள் நடத்துநர்களிடம் படும் அவஸ்தை இருக்கிறதே..அதைச் சொல்லி மாளாது.

கட்டண உயர்வுக்கு முன் நடத்துநர்கள் 50 காசு சில்லறையை பெரும்பாலும் கொடுத்ததில்லை.பயணிகளும் கேட்கத் தயங்கி விட்டுக் கொடுப்பதும் உண்டு.மீறிக் கேட்டால்..இறக்கி விட்டுவிடுவார்களோ என்ற பயம்.சில நடத்துநர்கள் பயணிகளை அர்ச்சனை செய்வதும் உண்டு.அப்போதெல்லாம் கட்டணத்தை 50 காசுக்கு பதிலாக ஒரு ரூபாய் என அமைத்தால் அதிகக் கட்டணம் அரசுக்காவது போகுமே என பெரும்பாலானவர்கள் சொன்னதுண்டு.

ஆனால் இப்போது எல்லாக் கட்டணமும்  ரூபாயளவிற்கு உயர்த்தப்பட்டாலும்..இப்போதும் சில்லறைப் பிரச்னை வேறு விதத்தில் தொடர்கிறது.

ஆறு ரூபாய் டிக்கட்டிற்கு 10 ரூபாய் கொடுத்தால்..நடத்துநர் ஒரு ரூபாய் இருக்கிறதா..என்கிறார்..அப்போதுதான் 5 ரூபாயாக திருப்ப முடியுமாம்.இல்லை என்றால் அர்ச்சனை தான்.அல்லது ஒரு 2 ரூபாயைக் கொடுத்துவிட்டு, இறங்கும் போது மற்ற ஒரு பயணிக்கு ஒரு ரூபாய் கொடுக்கச் சொல்லிவிடுகிறார்கள்.

தவிர்த்து..இது போன்ற அட்டூழியங்கள்...அதிகமாக..சென்ட்ரலிலிருந்து கிளம்பும் பேருந்துகளில் நடக்கிறது.பாவம்..பெட்டி படுக்கையுடன் ஏறும் பயணி மீதம் கேட்பதே இல்லை.

இதையெல்லாம் விடுங்கள் ஜம்பிங்க் ஸ்டேஜ் கேள்விபட்டிருக்கிறீர்களா...இல்லையா..இப்போது தெரிந்து கொள்ளுங்கள்..

உதாரணத்திற்கு..12நம்பர் பேருந்தில்..விவேகானந்தா காலேஜ் நிறுத்தத்தில் ஏறி..அடுத்த நிறுத்தமான வள்ளுவர் சிலை ஸ்டாப்பிற்கு..கட்டணம் 4 ரூபாய்..அடுத்த ஸ்டாப்பில் இறங்க நாலு ரூபாயா..என நடத்துநரிடம் கேட்டால்..லஸ் ஒரு ஸ்டேஜ் என்கிறார்.லஸ் தான் இந்த பஸ் போகாதே என்றால்..போகாதுதான்..ஆனால் அது ஒரு ஜம்பிங் ஸ்டேஜ் என்கிறார்,

பெசண்ட் நகர் சர்ச் ஸ்டாப்பிங்கில் 6டி பேருந்தில் ஏறி பீச் ஸ்டேஷன் டிக்கெட் வாங்கினால் (சொகுசு) முதல் நாள் ஒருவர் 13 ரூபாய் வாங்கினார்.அடுத்த நாள் வேறு ஒரு நடத்துநர் 15 ரூபாய் வாங்குகிறார்.

இதுபோல இன்னமும் பல வினோதங்கள் இந்த பஸ் கட்டண உயர்வில் நடைபெறுகிறது.

எதிர்த்து கேட்க பொதுஜனம் பயப்படுகிறது.

பேருந்து கட்டணம்

Monday, April 9, 2012

600 குழந்தைகளுக்கு தந்தையான விஞ்ஞானி




இங்கிலாந்து விஞ்ஞானி ஒருவரிடமிருந்து பெறப்பட்ட உயிரணுவிலிருந்து சுமார் 600 குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பெர்டோல்ட் வியஸ்னர் என்ற விஞ்ஞானி அவரது மனைவி மேரி பார்டன் உடன் சேர்ந்து மகப்பேறு மருத்துவமனை ஒன்றை நிறுவி இருந்தார்.

லண்டனில் 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை மூலம் உயிரணு தானம் பெற்று பெண்கள் குழந்தை பேறு பெற்றுள்ளனர்.
அதில், 1940 முதல் 1960 களின் இடைப்பட்ட காலம் வரை சுமார் 1500 குழந்தைகள் பிறந்துள்ளன.

அவ்வாறு பிறந்த குழந்தைகளில் 600 குழந்தைகள் அந்த மருத்துவமனை நிறுவனரும் விஞ்ஞானியுமான பெர்டோல்ட் வியஸ்னரின் உயிரணு மூலம் பிறந்துள்ளது என தற்போது தெரிய வந்துள்ளது.

இவர் ஆண்டொன்றுக்கு 20 முறை உயிரணு தானம் செய்துள்ளார்.

இவர் உண்மையிலே 600 குழந்தைகளுக்கு உயிரியல் தந்தை என்றால், இவர் இதற்குமுன்னர் உள்ள சாதனைகளை முறியடித்தவர் என்ற பெருமையை அடைகிறார்.

அதாவது, அமெரிக்காவை சேர்ந்த உயிரணு கொடையாளர் ஒருவர் 150 குழந்தைகளுக்கு தந்தை என்ற பெருமையை பெற்று வந்தார். இப்போது அதனை முறியடித்தவராக வியஸ்னர் இருக்கிறார்.

600 குழந்தைகளுக்கு தந்தையான வியஸ்னர் கடந்த 1972 ஆம் ஆண்டு மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் வெப்துனியா

செய்திகள்

இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அல்ல






இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பினர் சென்னை மெரீனா கடற்கரையில் பிரசாரம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்பதை குஜராத் உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தி தீர்ப்பளித்துள்ளது.

இந்தி மொழி பெரும்பாலான மக்களால் இந்தியாவின் பல மாநிலங்களில் பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறவில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் சுரேஷ் கச்சாடியா என்பவர் 2009 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் இந்தி மொழி, இந்தியாவின் தேசிய மொழி என்பதால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்கள் அடைக்கப்பட்ட பெட்டிகளின் மேல் அப்பொருளினைப் பற்றிய விலை, உள்ளடக்கம், தரம் ஆகிய விவரம் குறித்த தகவல்களை இந்தி மொழியில்தான் அச்சிட வேண்டும்.

இது தொடர்பான உத்தரவை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பிறப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோபாத்யாயா தலைமையிலான நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல. இந்தியாவின் பெரும்பாலான மக்களால் இந்தி மொழி பேசப்பட்டாலும் அதனை தேசிய மொழி என்று வாதிடுவதை ஏற்க முடியாது.

இந்திய அரசமைப்புச் சட்டம், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக அறிவிக்கவில்லை. அவ்வாறு எந்த அறிவிப்பும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கான ஆதாரங்களும் ஏதுமில்லை.

எனவே இந்தி என்பது ஆட்சி மொழி மட்டுமே தவிர அது தேசிய மொழி அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறோம் என்று தெரிவித்தனர் என்று அந்த அறிக்கையில் தமிழர் பண்பாட்டு நடுவம் தெரிவித்துள்ளது.

தகவல் வெப்துனியா

செய்திகள்- நிகழ்வு

Thursday, April 5, 2012

படிச்சுட்டு இங்கிலாந்தில் வேலையா..? நோ சான்ஸ்





இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு முடித்த உடன் சொந்த நாடு திரும்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து மாணவ விசாவில் இங்கிலாந்திற்கு வந்து உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த உடன், மேலும் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கி வேலையும் செய்யலாம்.

இந்த வசதியால் சுயநிதியில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு செலவை ஈடுகட்ட 2 ஆண்டுகள் வேலை செய்து சரிக்கட்டலாம்.

அதுமட்டுமல்லாது, இங்கிலாந்தில் வேலை செய்த அனுபவம், இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற பெரிதும் உதவும்.

ஆனால், இந்த சலுகைகளை நாளை (6-4-2012) முதல் நிறுத்தப்படுவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதனால், மாணவ விசாவில் வந்தவர்கள் படித்து முடித்து உடனே நாடு திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு  இங்கிலாந்து நாட்டு பல்கலைக்கழகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

செய்திகள் - இங்கிலாந்த்

Wednesday, April 4, 2012

புதிய தலைமை செயலக கட்டிடம் அரைகுறையாக கட்டப்பட்டது: -ஜெயலலிதா



திமுக ஆட்சியில் எல்லாமே அரைகுறையாக இருந்தது. புதிய தலைமை செயலக கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்....

துரைமுருகன் பேசும்போது ஏதோ இந்த சட்டமன்றத்தில் இட நெருக்கடி இருந்ததாகவும், அதனால் வேறு இடம் பார்த்ததாகவும் கூறினார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்து இந்த அரசு வீணடிப்பதாக கூறினார். அவர் சொல்லும் அடிப்படையே தவறு. இந்த சட்டசபையில் இட நெருக்கடி என்று நான் சொல்லவில்லை. ஒட்டு மொத்த தலைமை செயலகத்தில் தான் இட நெருக்கடி என்று கூறினோம். சரி, திமுக ஆட்சியில் விசாலமான இடத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் முழுமையாக தலைமை செயலகத்துக்கு பயன்பட்டதுபோல் துரைமுருகன் குறிப்பிட்டார்.

தமிழக அரசில் மொத்தம் 36 துறைகள் உள்ளன. புதிய தலைமை செயலகத்துக்கு கடைசி வரை 6 துறைகள் தான் மாற்றப்பட்டு செயல்பட்டன. மீதி 30 துறைகள் கோட்டையில் தான் செயல்பட்டன. இவர்கள் அரைகுறையாக கட்டிவிட்டு அங்குமிங்குமாக அதிகாரிகள் அலைய வேண்டிய நிலையை உருவாக்கினர். அங்கு 36 துறைகளின் அமைச்சர்கள் இருப்பார்கள். ஆனால் 6 துறைகளுக்கு மட்டுமே இடம் இருக்கும். மீதி 30 துறைகளுக்கு அலுவலகம் கிடையாது. இதனால்தான் நிர்வாகத்தில் குழப்பம், தாமதம் ஏற்பட்டது.

கோட்டையில் இருந்து அலுவலகத்தை மாற்ற வேண்டுமானாலும் ஒரே ஒரு துறைக்கு மட்டுமே இடம் இருந்தது. எல்லாமே அரைகுறையாக இருந்தது. அந்தக் கட்டிடமும் அரைகுறையாகவே கட்டப்பட்டுள்ளது என்றார்.

செய்திகள் - நிகழ்வு

Tuesday, April 3, 2012

கேள்விக்கு பாக்கியராஜ் பதில்...




இந்த வார பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்விக்கு பாக்கியராஜின் பதில் ரசிக்கும்படி இருந்தது..அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

கேள்வி - சிந்தித்துப் பார்ப்பதற்கான ஒரு கேள்வி பதிலைக் கூறுங்கள்..பார்ப்போம்?

பதில் - ஒருநாள் கிராமத்தின் வழியே ஒரு அறிஞர் போயிட்டிருந்தாரு.மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு கிராம இளஞனைப் பார்த்தாரு.நல்ல அறிவாளிகளே நாம கேள்வி கேட்கிறேன்னாலே பயப்படுவாங்க. இவன் படிப்பறிவில்லாத கிராமத்தான்.இவன் நம்ம கேள்விகளுக்கு பதில் சொல்லாம முழிக்கிறதைப் பார்த்து ரசிக்கணும்னு விரும்பினார்.

அறிஞன் அவன் கிட்டே போய் ;'உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்' ன்னு சொல்ல, மாடு மேய்க்கும் இளைஞன். 'கேளுங்க..என் அறிவுக்கு எட்டின வரைக்கும் முயற்சிக்கிறேன்'னான். 'பரவாயில்லையே! பயமில்லாம இவன் கேள்வி கேளுங்கள்னு சொல்றானே' ங்கற ஆச்சரியத்தோட 'உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?" ன்னாரு.

மாடு மேய்க்கும் இளைஞன்; ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு "சூரிய ஒளிதான்.அதற்கு மேற்பட்ட ஒளி இருக்கிற மாதிரி தெரியலை' ன்னான்.

அறிஞன், 'உலகின் சிறந்த நீர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன் யோசிச்சுட்டு ' கங்கை நீர்தான்.சிவன் தலையிலிருந்தும், விஷ்ணுவின் பாதம் வழியாயும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு புண்ணியத்தைக் கொடுக்குது.அதனால் கங்கை நீரைவிட சிறந்த நீர் இருக்கிறதான்னு தெரியலை' ன்னான்.

சந்தோஷப்பட்ட அறிஞன்' உலகின் சிறந்த மலர் எது?' என்றார்.

மாடு மேய்க்கும் இளைஞன், 'தேவதேவியரும் வீற்றிருக்கும் சிறந்த மலர் தாமரை.அதாத்தான் இருக்கும்' என்றான்.

அறிஞன், 'இவனை படிப்பறிவில்லாதவன்..வெறுங்குடம் என்றெல்லவா நினைச்சேன்..இவன் நிறைகுடம்னு தெரிஞ்சு, 'உன் அறிவை மெச்சுகிறேன்..இந்தா என்னுடைய விலையுயர்ந்த  முத்துமாலை' னு பரிசளித்தான்.

ஆனா மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..நல்லா யோசிச்சுப் பார்த்தா நான் இந்த பரிசுக்குத் தகுதியில்லாதவன்னு தோணுது.அதனால் வேண்டாம்.என்னா நான் சொன்ன பதில்கள் மூன்றுமே தவறோன்னு இப்போ தோணுது' என்றான்.

அறிஞன் திகைச்சு பேச்சின்றி முழிச்சு, 'என்னப்பா சொல்கிறாய்? இதற்கு மேல் இந்தக் கேள்விக்கு பதிலே இல்லையே.." என்றார்.

அதற்கு மாடு மேய்க்கும் இளைஞன், 'ஐயா..சூரியஒளி சிறந்ததுதான்  இருந்தாலும் அந்த ஒளியைப் பார்க்கறதுக்கு நம்ம கண்ணிலே ஒளி வேண்டும் இல்லையா? அதனால் கண்ணொளி தான் சூரியஒளியைவிட உயர்வானதுன்னு தோணுது.

கங்கை நீர் புனிதமானதுதான்..இருந்தாலும் அதனை எல்லா நாட்டினருக்கும்..சமயத்தாருக்கும் கிடைக்குமா? கிடைச்சாலும் தாகத்தோடு ஒருவனுக்கு கிடைக்காத கங்கை நீர், கிடைத்த சிறிதளவு நீராடு ஒப்பிட்டுப் பார்த்தால், கங்கை நீரைவிட அதுதான் உயர்வானதுன்னு தோணுது..

தாமரைமலருக்கு பல சிறப்புகள் இருந்தாலும் நீரை விட்டு வெளியே எடுத்தா..தாமரை வாடிடும்.உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்தி மலர்தான்.ஏன்னா அதிலிருந்து கிடைக்கும் நூல்ல நெய்யப்படும் ஆடைகள்த்தான் மக்கள் மானத்தை நாள்தோறும் காக்குது.ஆக பருத்திமலரைவிட தாமரை எந்தவிதத்தில் மக்களுக்கு பயன்படும் சிறந்த மலராய் இருக்கமுடியும்' ன்னு முடிச்சான்

அறிஞன் தன்னோட கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலைதாழ்த்தி உண்மையை ஒத்துக்கிட்டு புறப்பட்டான்.

பாக்கியராஜ்- பதில்

ஜெய்ராம் ரமேஷ் மூலம் ஜெயலலிதாவுக்கு தூது விடும் காங்கிரஸ்!!




தேசிய ஊரகக் குடிநீர் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியதை பாராட்டி தமிழகத்துக்கு ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. கூடவே இதற்காக முதல்வர் ஜெயலலிதாவை ஏகத்துக்கும் பாராட்டி ஒரு லெட்டரும் அனுப்பியுள்ளார் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்... இது செய்தி.

இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள அரசியல் தான் உண்மையிலேயே 'செய்தி'.

விரைவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் நடக்கவுள்ளன. எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்து நாட்டின் ஜனாதிபதி-துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் இது.

உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட படுதோல்வியால் காங்கிரசிடம் போதிய எம்எல்ஏக்கள் இல்லை. மேலும் கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிப்பாரா என்பது அவருக்கே இதுவரை தெரியாது.

அதே போல பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

ராஜ்யசபாவில் பெரும்பான்மை கூட இல்லாத நிலையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. அங்கு எதிர் தரப்புக்குத் தான் அதிக எம்பிக்கள் உள்ளனர்.

இந் நிலையில், அடுத்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதில் தனது கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவையே காங்கிரஸ் நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதற்காக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கும் வேலையை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தான் ஜெய்ராம் ரமேஷை விட்டு பாராட்டுக் கடிதம் அனுப்பியுள்ளதோடு, தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.98.20 கோடியையும் குடிநீர்த் திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளது. (கடந்த ஆண்டு ரூ. 273.84 கோடி தான் தந்தனர். இப்போது கேட்காமலேயே கூடுதல் நிதி தந்துள்ளனர்).

''Dear Madam Chief Minister” என்று ஆரம்பிக்கும் ஜெய்ராம் ரமேஷின் கடிதம், தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 60 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தமிழகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதனால், மேலும் அதிக மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க உதவியாக மேலும் ரூ.98.20 கோடியை ஒதுக்கியுள்ளோம். மாநிலத்தை எந்தக் கட்சி ஆளுகிறது என்கிற பாரபட்சம் இன்றி கூடுதல் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த வாரத்தில் உங்களை சந்தித்துப் பேசவும் விரும்புகிறேன். நேரம் ஒதுக்கித் தந்தா நல்லாயிருக்கும் என்றரீதியில் போகிறது அந்தக் கடிதம்.

இத்தனைக்கும் மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வரான பின் அவரை முக்கிய மத்திய அமைச்சர்கள் யாருமே சந்தித்துப் பேசவும் இல்லை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அவர் கேட்ட நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.

இந் நிலையில் திடீரென ஜெய்ராம் ரமேஷுக்கு தமிழகத்தின் மீதும் முதல்வர் மீதும் கரிசணம் ஏற்பட்டுவிட்டதோடு சந்திக்கவும் நேரம் கேட்டிருப்பது ஜனாதிபதி தேர்தல் ஓட்டுக்களை மனதில் வைத்தே என்கிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பக்கமாக வந்து கொண்டுள்ள அதிமுகவை திடீரென காங்கிரஸ் குறுக்கே புகுந்து இழுத்துச் செல்ல விட்டுவிடுமா பாஜக.

உடனே ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டார் பாஜக மூத்த தலைவரான அருண் ஜேட்லி. செவ்வாய்க்கிழமை காலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா தரப்பிலிருந்து பதில் வரவே நேற்று மாலையே சென்னைக்கு பறந்து வந்துவிட்டார்.

இன்று காலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை 'மரியாதை நிமித்தமாக' சந்தித்துப் பேசினார்,

இந்த சந்திப்புக்குப் பின், ''ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசினீர்களா?'' என்ற நிருபர்களின் கேள்விக்கு ''இல்லை'' என்று கரெக்டாக பதில் சொல்லிவிட்டுப் போனார் ஜேட்லி.

அடுத்தபடியாக ஜெய்ராம் ரமேஷ் அப்பாயிண்ட்மென்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும் ஜெயலலிதா நேரம் ஒதுக்கித் தந்தால், அது தான் 'அரசியல்' ஐபிஎல் 5.

தகவல் தட்ஸ்தமிழ்

செய்திகள் - நிகழ்வு

Sunday, April 1, 2012

புதுகை அப்து ஐயர் எம்.எல்.ஏ., ஆவாரா?




புதுகை எம்.எல்.ஏ., முத்துகுமரன் அகால மரணம் அடைந்ததற்கு வருந்தும் அதே வேளையில்...புதுகை தொகுதிக்கு மறு தேர்தல் வரும் என்பதால் தான் இந்த இடுகை.

புதுகை அப்து ஐயர் என பதிவர்களாலும், நண்பர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் புதுகை அப்துல்லா விற்கு எம்.எல்.ஏ., ஆகும் வாய்ப்பு இருப்பதாக நான் எண்ணுகிறேன்.

ஏற்கனவே கடந்த வருட சட்டசபைத் தேர்தலில் அவர் விராலிமலை தொகுதிக்கு சீட் கேட்டு...சில..பல..காரணங்களால் கிடைக்காமல் போயிற்று.

ஸ்டாலினின் ஆதரவாளரான அப்துல்லா அவர்களுக்கு..வரும் இடைத்தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதாகத் தெரிகிறது.

விரைவில் புதுகை அப்துல்லா வை ஒரு எம் எல் ஏ வாக பார்க்கலாம்.

பழகுவதற்கு அருமையானவரான இவருக்கு தி.மு.க., சந்தர்ப்பம் அளிக்கும் என எண்ணுகிறேன்..அப்படியாயின்..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்னும் நிலையை இவர் மாற்றிக்காட்டுவார் என்பது உறுதி.

இடைத்தேர்தல்