Saturday, May 12, 2012

யானைக்கு உதவிய ஈ




ஒரு காட்டில் யானை ஒன்று..குறுகிய பாலத்தைக் கடக்க முயற்சித்தது.பாலம் குறுகலாக இருந்ததால்..அது அதைக் கடக்க பயந்து என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்தது.அப்போது அதன் முதுகில் சில கொசுக்கள் அமர்ந்திருந்தன.இந் நிலையில் ..ஒரு ஈ வந்து அதன் மீது அமர்ந்து..'யானையாரே..நான் இருக்கிறேன்..தைரியமாக பாலத்தைக் கடங்கள்' என்றது.

யானையும் ஈயின் நகைச்சுவையை ரசித்தபடியே..பாலத்தை அதி எச்சரிக்கையாகக் கடந்தது.

பின் ஈ. எல்லோரிடமும்..'என் பலத்தால்தான் யானையால் பாலத்தைக் கடந்தது' என பீற்றிக் கொண்டு திரிய ஆரம்பித்தது.


3 comments:

MARI The Great said...

சிரிக்கவைத்து சிந்திக்கவும் வைத்தது ..!

ஹேமா said...

இங்கே இருவரது மனநிலை,குணத்தைக் குட்டிக்கதையில்
சொல்லியிருக்கிறீர்கள் !

மாதேவி said...

சிந்திக்க வைக்க நல்ல ஓர் கதை.