Sunday, February 10, 2013

கடல் தோல்வியைத் தழுவியதேன்...

 

மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ்மேனன் ஒளிப்பதிவில்,ஜெயமோகன் கதை வசனத்தில், .ஆர்.ரஹ்மானின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் இசையில்,கவிப்பேரரசின் வைரவரிகளில் ஒரு படம் வெளிவருகிறது எனில் அப்படம் மக்களிடம் எப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பார்ப்பில் இருக்கும்.

தவிர்த்து, முன்னதாகவே வந்து விட்ட பாடல்களின் இனிமை வேறு..ஒரு ரசிகனை அதிக எதிர்ப்பார்ப்பில் வைத்ததூ.

கார்த்திக் மகனும், ராதாவின் மகளும் அறிமுகப் படம் என்றதும்....

மண்வாசனையைக் குழைத்துத் தரும் பாரதிராஜாவின் 'அலைகள் ஒய்வதில்லை' போல, சராசரி ரசிகன் எதிர்பார்த்திருந்திருப்பான். ஏமாற்றம்..

மணியின் , மாஸ்டர் பீஸ்,'அலைபாயுதே' போல ஜிலு ஜிலு என இருக்கும்..என இளவட்ட ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கும்..ஏமாற்றம்..

'கடல்' என்ற தலைப்பு என்பதால்..'மீனவர்கள் வாழ்வு..பிரச்னை இவற்றை அலசி இருப்பார்..' என கன்னத்தில் முத்தமிட்டால் பட ஞாபகம் உள்ளவன் எதிர்ப்பார்த்திருப்பான்.அதுவும் ஏமாற்றம்.(தவிர்த்து அர்ஜுன், ஒருவனை கொன்றுவிட்டு..இவனை தூக்கிக் கடலில் எறியுங்கள்..பக்கத்து நாட்டான் சுட்டான் என எண்ணிக்கொள்ளட்டும்..என்ற அர்த்தம் வரும் வகையில் ஒரு வசனம் வேறு

மீன் பிடிப்பதும்..அதைக் கூக்குரலிட்டு விற்பதும் தான் மீனவர் பற்றி கடல் சொல்வது.

நீங்களும் படத்தை மூன்று மணி நேரம் எடுத்துவிட்டு..அதை 2 மணி 25 நிமிஷமாக்க பல காட்சிகளை வெட்டி இருப்பீர்களோ..ஆங்காங்கே தொக்கி நிற்கும் காட்சிகள் இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சம்பந்தா சம்பந்தமில்லாமல்..உப்புப் பெறாத காரணத்திற்கு..வில்லனுக்கு ..அரவிந்தசாமியை பழி வாங்கும் எண்ணம் வருகிறதாம்..அவனை சிறைக்கு அனுப்பி..அவன் திருத்தி வரும் பையனை தன் கோஷ்டியில் சேர்த்து பெரிய ரௌடி ஆக்கி..அந்த பையன் காதலிக்கிற பெண் ..சற்று மனவளர்ச்சி குன்றியவள் என்றும்..அதற்குக் காரணம் அவ்வில்லனின் மகள் அவள் என்றும் அவன் செய்யும் செயல்கள் அவள் மூளைவளர்ச்சியைப் பாதித்தது என்றும்..போதுமடா சாமி..என்று ஆக்கிவிட்டது.

இந்தக் கதைக்கு ஜெமோ வோ மணியோ தேவையில்லை.

1970 களில் வந்த படங்களைப் பார்த்து..வெறுத்து..நல்ல படங்களைக் கொடுக்கவே திரையுலகில் நுழை

ந்தேன் என நீங்கள் பேசியதில் தவறில்லை, ஆனால், அதை செயலிலும் காட்ட வேண்டும்.

ஆனால் ..செய்தீர்களா..

இப்படம்...மூன்றாம்தரப் படத்திற்கான கதையமைப்பைக்கூட கொண்டிருக்கவில்லையே..

ராஜீவ் மேனனும், ரக்மானும், வைரமுத்து உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிவிட்டீர்களே..

கோபம் ..கோபமாய் வருவதைத் தடுக்கமுடியவில்லை மணீ..சாரி..என்ன ஆச்சு உங்களுக்கு..

உங்களிடமிருந்து பம்பாய்,நாயகன்,ரோஜா,அக்னி நட்சத்திரம், மௌனராகம், கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயிதே போன்ற படத்தையே மக்கள் எதிப்பார்க்கின்றனர்..

அந்த எதிர்ப்பார்ப்பே..இப்படத் தோல்விக்குக் காரணம்.

4 comments:

ப.கந்தசாமி said...

எங்கள் வீட்டில் பூதக் கண்ணாடி இல்லாததால் பதிவை சரியாக படிக்க முடியவில்லை. ஆனாலும் பதிவு மிகச் சிறப்பாக இருக்கிறது.

சிங்கம் said...

நான் நெனச்சேன்.... நீங்க சொல்லீட்டீங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பழனி. கந்தசாமி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிங்கம்