இந்த படத்திற்கு மிகவும் தாமதித்து விமரிசிக்கக் காரணம்..
ஒரு வாரப் பத்திரிகை மதிப்பெண் குறைவாகப் போட்டதால் அவ்விதழ் அலுவலகத்திற்கே போய் நீதி கேட்டதால் ,சற்றே இப்படத்தை என் வலைப்பூவில் விமரிசிக்க பயம்..
இனி..பல இடங்களில் படத்தைப் பார்த்து விட்டதாலும்..சில இடங்களில் படத்தை எடுத்து விட்டதாலும் , இனி எழுதலாம் என்று எழுதியுள்ளேன்.
மகள்..படிப்பில் சற்று திறமைக் குறைவு...அதற்குக் காரணம் ஆசிரியையும், பள்ளி நிர்வாகத்தின் அடாவடி செயல்களும் என்கிறார்கள், சரி .
பள்ளியில் பணத்தைக் கட்ட, தந்தை தயாராய் இருந்தும், அப்பணத்தை வாங்க மறுக்கும் நாயகன்..மகளின் மீது அதீத பாசம் கொண்டவனா?
சம்பளம் கிடைக்கவில்லை என்பதால்...குடும்பத்தை விரோதித்துக் கொண்டு அண்டை மாநிலம் சென்று அங்கு வேலை செய்கிறானாம்...மகள்..ஆசைப்பட்டுக் கேட்ட நாய்குட்டிக்காக..ரைன்மேகர்..என்னும் ஆதிமக்கள் பயன்படுத்தும் கருவி தேடி..நாய் வாங்க 25000 ரூபாய்க்காக (??!!) செல்கிறானாம்.அவர்கள் அதைக் கொடுக்க மறுக்க ..அந்த ஆதிவாசியின் காலில் விழுகிறானாம்.
தந்தையிடம் போலி கௌரவம், பள்ளி முதல்வரிடம் போலிகௌரவம், ஆசிரியரிடம் போலி கௌரவம்...ஆனால்..சற்றும் தேவையில்லாத நாய்குட்டிக்கு தகுதிக்கு மீறி செலவு செய்வது என்ன நியாயம்.அதுவும் முன்பின் தெரியாதவர் காலில் விழுந்து கௌரவத்தை இழப்பானேன்.அதுதான் மகள் மீது பாசம் என்றால், அந்த தப்பான பாசம் தேவையில்லையே.
கடைசியில்...செய்தி சொல்ல வேண்டும் என்பதற்காக....அரசு பள்ளியில் படித்தாலேயே சிறக்கலாம்...எனகிறார்.இந்த ஞானோதயத்தை முதலிலேயே செயல் படுத்தியிருந்தால் பல அவமானங்களைத் தவிர்த்திருக்கலாமே.
ஒன்றே ஒன்று எனக்கு புரிந்தது...
வண்ணதாசன் மீது அளவற்ற பற்று கொண்டதால் நாயகனுக்கு படத்தில் 'கல்யாணி;' என்ற பெயர் என்று.
(பி.கு. படத்தின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்றால்..என் வீட்டிற்கு வந்து விமரிசனத்திற்கு தகராறு செய்தால் என்ன செய்வது? எளியோன் தாங்க மாட்டேன். அதனால்தான்.)
No comments:
Post a Comment