Showing posts with label அனுபவம் நிகழ்வு. Show all posts
Showing posts with label அனுபவம் நிகழ்வு. Show all posts

Saturday, November 22, 2008

வண்ணதாசன்..என்னும் கல்யாண்ஜியும்...நானும்..

வடகரை வேலனின்..கதம்பத்தில்..கல்யாண்ஜியின் கவிதைப் பற்றி எழுதி இருந்தார்..

அதைப்படித்ததும்...என் முன்னால்..ஒரு நீர்ச்சுழல்..(எவ்வளவுநாள்தான்..கொசுவத்தி..என்று எழுதுவது?)

கல்யாணசுந்தரமும்..நானும்..ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்கள்..அவரும்..நானும்..ஒன்றாக 3 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோம்.அந்த சமயங்களில் அவருடன் இலக்கியம்..கவிதைகள் உள்பட பல விஷயங்களை விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் படைப்புகள்..பத்திரிகைகளில் வருவதற்கு முன் கைப்பட எழுதியதை..எனக்கு படிக்க கொடுத்து..நான் படித்த பேறு பெற்றவன்..அந்த சமயங்களில்..என் கதைகள் பல கலைமகள் இதழில் வரும்...அதைப்படித்துவிட்டு..இப்படி எழுதியிருந்தால்..இன்னும் நன்றாக இருந்திருக்கும்..என..என் எழுத்துக்களை..பட்டை தீட்டியவர்.அதன் பயன்தான்..நான் எழுதிய 'பாரத ரத்னா' என்ற என் நாடக நூலுக்கு..2005க்கான சிறந்த நூல் என்று..இலக்கிய சிந்தனை பரிசைப் பெற்று தந்தது.

சாகித்ய அகாடமி..பரிசுக்காக..முதல்வரிசையில் உள்ளவர்..விரைவில் கிடைத்து விடும் என எண்ணுகிறேன்.

தமிழக அரசின்..கலைமாமணி விருது பெற்றவர்..

இன்றும்..அவ்வப்போது..திருநெல்வேலியில் உள்ள அவருடன்..தொலைபேசியில் உரையாடுவேன்..எங்கள் நட்பு தொடர்கிறது..

இந்த நிகழ்ச்சிகளை அசை போட உதவிய வேலனுக்கு நன்றி