Showing posts with label அன்னையர் தினம். Show all posts
Showing posts with label அன்னையர் தினம். Show all posts

Sunday, May 12, 2013

அம்மா...

                 



அன்னையைப் போல் தெய்வம் இல்லையாம்
 நாத்திகனையும் சற்று மாற்றுகிறாள் 
அன்னையை எண்ணியதும் 
தெய்வம் உண்டென்கிறான் 
அவளே தெய்வம் என்கிறான்
 கருவறையில் அவள் இல்லையாயினும் 
கருவில் அவனைச் சுமந்தவளாயிற்றே...

Saturday, May 12, 2012

அன்னையர் தினம்...இப்பாடலைக் கேட்டீர்களா?



இதைவிட அன்னையின் பெருமைச் சொல்ல வேறு என்ன இருக்கிறது.
பாடலின் ஒரிஜினலும்..பிரகதி பாடிய (சூபர் சிங்கர் ஜூனியர் 2012)தும்.






Monday, May 9, 2011

பெண்...







நேற்று அன்னையர் தினமாம்..

அதற்கென தனி தினம் எதற்கு..

அன்று மட்டும் தான் அன்னையைப் போற்ற வேண்டுமா?

நம் வாழ்வில்..எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்..துன்பங்கள் இருந்தாலும்..அவற்றையெல்லாம் மறந்து..தினமும் ஒரு முறையேனும்..எங்காவது நான் அன்னையை நினைக்கிறோம்.

அப்படியில்லையென்றாலும்...காலிலோ கையிலோ சற்று வலி ஏற்படுமாறு அடி ஏற்பட்டால்..நம்மை அறியாது..நாம்  அழைப்பது அன்னையைத்தான்.

அம்மா...

அந்த சொல்லுக்குத்தான்...எவ்வளவு வலிமை..

அந்த சொல்தான் எத்தனை இனிமை..

அந்த சொல்லில்தான் சுயநலம் தெரிவதில்லை..



அம்மா மட்டுமா..

ஒரு பெண் நம் வாழ்வில்.....எங்கெங்கு தேவையோ ..அங்கெங்கு நமக்கு தோள் கொடுக்கிறாள்..

நான் சமீபத்தில் படித்தது..இது...



When I was born, A woman was there to hold me - my mother

When I grew as a child, A woman was there to care me, to play with me - my sister

When I went to school, a woman was there to help me to learn - my teacher

When I became depressed, whenever I lost, a woman was there to offer a shoulder - my wife

When I became tough, a woman was there to melt me - my Daughter

When I die, a woman is there to obsorb me in - my motherland

Sunday, May 10, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(அன்னையர்தின ஸ்பெஷல்)

1.வெண்ணைய்க்குள் நெய்யைப்போல்
விறகுக்குள்ளே தீயைப்போல்
மலருக்குள்ளே மணத்தைப்போல்
எள்ளுக்குள்ளே எண்ணைய்ப்போல்
பெண்ணுக்குள்ளே தாய்ப்பாசம்

2.தென்றலாய் இருந்தால்..தீண்டிப்பார்ப்பார்கள்..புயலாக மாறுங்கள்..பயந்து ஓடுவார்கள்

3.ஒரு பெண்ணின் ரோஷம்தான்..மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் ஆகியவை தோன்ற காரணம்,

4.பெண்களுக்கான சம அந்தஸ்து இருக்கிறதா? பெண்களுக்கும் ஒரு மனம் இருப்பதை பலர் உணர மறுக்கிறார்களே ..ஏன்?

5.பெண் ஆணைவிடத் தாழ்ந்தவளும் இல்லை..உயர்ந்தவளும் இல்லை..பெண் ஆணிலிருந்து வேறானவள்.ஆகவே பெண்களுக்கென பல சிறப்புச் சலுகைகள் கண்டிப்பாக வேண்டும்.

6.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை..தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை.அதுபோல..தாயை பழிப்பவன் வாழ்ந்ததும் இல்லை.


நமக்கு முகவரி தந்தவள்..முகத்தைத் தந்தவள்..தரணியில் வாழவிட்டவள்..அன்னையே..உன்னை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் இந்நாளில்.