Showing posts with label அரசியல் -சமுகம்-vijaykaanhdh. Show all posts
Showing posts with label அரசியல் -சமுகம்-vijaykaanhdh. Show all posts

Thursday, October 9, 2008

விஜய்காந்த்திற்கு ஒரு கடிதம்

விஜய்காந்த் அவர்களுக்கு
வணக்கம்.,
நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து...எம்.எல்.ஏ.,ஆகவும் ஆகிவிட்டீர்கள்.அதை பாராட்டும் அதே நேரத்தில்..இப்போதெல்லாம் உங்கள் பேச்சில் ஆணவம் தொனிக்க ஆரம்பித்து விட்டது.,
அதற்கேற்றாற்போல லாயோலா கல்லூரியினர் எடுத்த கருத்துக்கணிப்பில் உங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு 3ம் இடத்தில் இருக்கிறது என்றதும்..உங்களுக்கு சனி உச்சத்தில் வந்துவிட்டது.,கருத்துக்கணிப்பெல்லாம் தவறாக ஆகி விடுவதுண்டு.கோடிக்கணக்கான வாக்காளர்களில் ஒரு சில ஆயிரம் பேரிடமே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அதை மறக்க வேண்டாம்.,
தேர்தலில் கட்சிகள் ஜெயிப்பது என்பது..அக்கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி.,எந்த கட்சியும் சேராத வாக்காளர்களின்..தேர்தல் நாளன்று எடுக்கும் முடிவு ஆகியவை பொறுத்தே இருக்கிறது.,இதை உணராமல் பெரிய தலைகள் கூட தவறு செய்வதுண்டு.,2001ல்..தனது முந்தைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால்..இம்முறை ஜெயித்து விடலாம் என்ற கலைஞரின் எண்ணம் பொய்த்தது.,அ.தி.மு.க., கூட்டணி பலம் பொருந்தியதாய் இருந்ததால் வென்றது.,இதை அறிந்த கலைஞர் 2006ல் பலமான கூட்டணி அமைத்தார்.தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.,இதை ஏன் சொல்கிறேன் என்றால்..உங்களுக்கு யானை பலம் இருப்பதாக கனவு கண்டால் அது தவறு.,மக்களிடம் தான் பலம் இருக்கிறது. அவர்கள் ஆதரவு பெற அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.,

கலைஞருடன் பலருக்கு கருத்து வேறுபாடு உண்டு.,அவரால் தூற்றப்படும் பார்ப்பனர்கள் வாக்குகள் கூட தி.மு.க.விற்கு பெருமளவில் விழுகிறது.,இது நான் முன்னமே சொன்னபடி...தேர்தல் அன்று..மக்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு.,கலைஞரின் நிர்வாகத் திறமை.,கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திறன் இவைகளுக்கு விழும் வாக்குகள்.அவர் ஒரு ராஜதந்திரி.,70 வருஷங்கள் பொது வாழ்வில் இருந்தவர்.,பல தில்லி தலைவர்களையும்..மாநில தலைவர்களையும் பார்த்தவர்.,

அப்படிப்பட்டவர்..நேற்று முளைத்த உங்களை அழிக்க வடிவேலு போன்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்..என்று நீங்கள் சொல்வதைப்பார்த்து..சிரிப்புத்தான் வருகிறது.,இது உங்கள் அனுபவக் குறைவையே காட்டுகிறது.
தமிழுக்காக தண்டவாளத்திலே தலை வைக்கிறேன் என்று ரயில் நிற்கும் போது த்லையை நீட்டறதெல்லாம் பெரிய விஷயமா?என்று எள்ளி நகையாடுகிறீர்கள்.
தமிழன்னை அக்கலைஞனுக்கு..கவிதை எழும் திறன்,கதை,வசனம்,எழுதும் திறன்,பிறமொழி காவியத்தை தமிழ் படுத்தும் திறன்,பேச்சுத் திறன் என வாரி வழங்கியிருக்கிறார்.ஒரு சிலரிப்போல 'ழ"க்கூட உச்சரிக்கத் தெரியாதவர் அல்ல இவர்.
தி.மு.க.,இரண்டுமுறை பிளவுப்பட்டும்..(முதல்முறை அ.தி.மு.க.உருவானது அடுத்த முறை ம.தி.மு.க.) அதற்கான தொண்டர்களை இழக்கவில்லை.,
கலைஞரின் நள்ளிரவு கைதுக்கூட கேலி செய்யப்பட்டாலும்(ஐயயோ..கொலை பண்றாங்கப்பா)..அதிலிருந்தது கலைஞரின் ராஜதந்திரம்.அவர் கைதைப் பார்த்த அனைத்து மக்களும் கட்சி வேறுபாடின்றி இதைக் கண்டனம் செய்து...தங்கள் ஆதரவை கலைஞருக்கு காட்டினர்.
அப்படிப்பட்ட ஒரு தலைவனை..வயதிற்குக்கூட மரியாதைத் தராமல்...இனி கலைஞர் இல்லை கருணாநிதின்னு தான் கூப்பிடப்போறேன் என்கிறீர்கள் ஆணவத்தோடு.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்....
கடைசியாக ஒன்று சொல்ல விழைகிறேன்..
'பெருக்கத்து வேண்டும் பணிவு"

இப்படிக்கு
அப்பாவி தமிழன்