தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா என்றார் நாமக்கல் கவிஞர்..ஆனால் இன்று ..
அண்டை நாடுகளில் அவன் பிரச்னை..அகதிகளாக..அவன் வரும் நிலை..இவையெல்லாம் இருக்கட்டும்..
சொந்த நாட்டிலேயே அவன் இரண்டாம் தர குடிமகனாகவே இருக்கிறான்..என்பது..மறுக்கமுடியாத உண்மை.
பாருங்கள்..1974ல் முடிந்த ஒப்பந்தம்..புதுப்பிக்காததால்..காவிரி தண்ணீர் பிரச்னை..இன்றுவரை தீர்ந்தபாடில்லை.நாட்டின் உச்ச மன்ற தீர்ப்புக்குக்கூட அடிபணியாத மாநில அரசுகள்..நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வருகிறதாம்..பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
அடுத்து..கேரளா..முல்லைப்பெரியாறு அணை விவகாரம்..இதிலும் இதுவரை தமிழன் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
சற்று..யோசித்துப்பார்த்தால்...ஹிந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம்.நமது..
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட..எம்மாநிலத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கும் போது..அங்கும் தமிழன் தனித்து விடப்படுகிறான்.
இதெற்கெல்லாம் காரணம்..அரசியல்..
இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் 'தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லடா'என்ற நிலை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படத்தான்செய்கிறது