இரு பெரிய திராவிடக் கட்சிகளுக்கு எதிராக வை.கோ., ம.தி.மு.க., ஆரம்பித்தார்.
அவரின் ஆதரவாளர்கள் அவருடம் சென்றனர்.
அந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இவர் கட்சியும் வரும் என எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால் என்ன வாயிற்று?
தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியா நிலையில் வை.கோ., மீண்டும் தி.மு.க., வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணியில் இணைந்துக் கொண்டார்,கட்சி ஆரம்பித்ததின் நோக்கம் மறைந்தது.சென்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., வைவிட சில தொகுதிகள் அதிகமாய்க் கிடைத்ததால் அ.தி.முக., கூட்டணிக்கு மாறினார்.
மரம்வெட்டிக் கட்சியின் நிலையும் அதே போலத்தான் ஆயிற்று..தனித்து போட்டி போணியாகாது எனத் தெரிந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் தனக்கு வசதியானக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
ஆனால் இவர்களிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் இருந்தார் விஜய்காந்த்.2001ல் ஜெ ஆட்சிக்கு வந்து பதவி ஏற்றபோது..அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த விஜய்காந்திற்கு அன்றுதான் தானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.
கட்சி ஆரம்பித்ததுமே யாருடனும் கூட்டு கிடையாது..மக்களிடம் தான் என் கூட்டு என்றார்.பலன்..கணிசமான அளவு வாக்குகள் பெற முடிந்தாலும்..அது..தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க உதவாது என உணர்ந்தார்.
பழுத்த மரமே கல்லடி படும் என ஒரு சொலவடை உண்டு.அதுபோல ஆட்சியில் இருக்கும் கலைஞரே ,தன் முதல் எதிரி என்று கூறத் தொடங்கினார்,
வரும் தேர்தலில் தனித்துப் போட்டி என்றால் தேறாது என உணர்ந்து முதலில் கலைஞர் ஆட்சியை ஒழிப்பேன் என கூட்டணி ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்,அப்படி ஒரு நிலை எடுக்காவிடின் தன் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்ற நிலை வேறு.
பாவம்..அவரைச் சொல்லி என்ன பயன்..
இந்நிலையில் 41 தொகுதிகள் ஜெ ஊற்றித்தர, மன்னிக்கவும்..ஒதுக்கித்தர கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுவிட்டார்.
இனி விஜய்காந்தின் கட்சியைப் பொறுத்தவரை , இந்த இடுகையின் தலைப்புதான் .