மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை செய்வோர்..புண்ணியமான வேலையைச் செய்கிறார்கள்..என்று நரேந்திர மோடி சொன்னதும்...அதற்கு எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் சொன்னது சரியா..தவறா..என்ற கேள்விக்கே இடமில்லை.அப்படிப்பட்ட வார்த்தையை..ஒரு பார்ப்பன மோடி சொன்னார் என்பதால் வந்த எதிர்ப்பல்ல அது.அதே வார்த்தைகளை யார் கூறியிருந்தாலும் மனித நேயம் உள்ளவர் அனைவருமே பொங்கி எழுவர்.
ஆனால்...தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர் களுக்காகவே வாழ்கிறேன். என் நெஞ்சில் தைத்த முள் ..என்றெல்லாம் பேசும் தமிழக முதல்வர் ஆளும் தமிழ்நாட்டின் நிலை என்ன?
மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளியெடுக்கும் கொடுமையை ஒழித்து..,அத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரிதாப ஜீவன்களுக்கு மறுவாழ்வு தரும் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை தமிழகம் முழுமையாக பயன்படுத்தி இருக்கிறதா?
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவரான சந்தோஷ் சவுத்ரி..தமிழகத்துக்கு 54 கோடிக்கும் மேலாக ஒதுக்கப்பட்ட நிதியில் ,கணிசமான நிதி இதுவரை பயன்படுத்தப் படவில்லை என்ற புகாரைக் கூறியிருக்கிறார்.
முதல்வர் வழக்கம்போலவே,,முந்தைய ஆட்சியைக் குறை சொல்வதுபோல..'92ம் ஆண்டு இத் திட்டம் அமுலுக்கு வந்தது முதல் ,இன்றுவரை பெரும்பகுதியை மனிதக் கழிவு அள்ளுவோரின் மறுவாழ்வுக்கு தி.மு.க.பயன் படுத்தி இருக்கிறது.'.என புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்துள்ளார்.
இப்படி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது நிறுத்தப்படும்வரை..இது போன்ற நல்காரியங்களுக்கு விமோசனமே இல்லை என்பதே சாமான்யரின் கருத்து.
அரசும்...தேர்தலை மாட்டும் மனதில் கொண்டு..இலவசங்களை வாரி வழங்குவதை விட்டு விட்டு..எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
அதை விட்டு விட்டு...தாழ்த்தப்பட்டோர் நலன் பற்றி பேசுவது..ஏட்டு சுரைக்காய் போலத்தான்.