
தமிழ்த்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே!
அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.
எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலஞன் பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..அப்படியே வந்தாலும்..மன்னிக்கவும்..அவை பிரசுரிக்கப் படமாட்டாது.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.
பதிவில்..சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்.. பிழைகள் சில இருக்கலாம்..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவு திருத்தப்படும்.
ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.
1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.
1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..
1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி
1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்
1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இனி அடுத்த பதிவில்..