கவிஞர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்..கி.பி.2000 பற்றி கவியரசு என்ன எழுதினார் தெரியுமா?
கி.பி.2000
__________
ஒருநூறு கோடியாய்
மக்கட் தொகைகூடி
உணவுக்கு தத்தளிக்கும்
ஓராயிரம் கட்சி
பேதங்கள் தோன்றியே
உள்நாட்டுயுத்தம் மூளும்
பொருள்நூறு கொண்டவர்
பூட்டை உடைக்கின்ற
புரட்சியை நாடுகாணும்
பூஞ்சோலை காடுகள்
ஏதுமில்லா திந்தப்
பூமியை மக்கள் சூழும்
உருவான தொழிலெல்லாம்
உதவாது போய் எங்கும்
உற்சாக மற்றுவிடுமே
ஒளிதொன்றும் நெஞ்சிலே
இருள் தோன்று கின்றதே
உணர்கபா ரததேச மே!