கடந்த இரண்டு நாட்களில்..நான்..3 ஹிந்தி படங்கள் பார்த்தேன்..அந்த மூன்று படங்களுமே..மும்பையும்...குண்டுவெடிப்பு சம்பந்தபட்டதுதான்..
1.ஆமிர் - லண்டனிலிருந்து..திருப்பி அனுப்பப்பட்ட..டாக்டர் ஆமிர்..மும்பை ஏர்போர்ட்டில்..வந்ததுமே..அவனையும் அறியாமல்..ஒரு இஸ்லாம்..தீவிரவாத இயக்கத்தின் வலையில் வீழ்கிறான்..அவனது குடும்பத்தை தங்கள் கைவசம்..பிடித்து வைத்திருப்பவர்கள்..அவர்கள் விடுதலை ஆக வேண்டுமானால்..தாங்கள் சொல்படி..ஆமிர் கேட்க வேண்டும் என்கிறார்கள்.பேருந்தில்..தான் கொண்டுவந்து வைத்த பெட்டியில் வெடிகுண்டு இருக்கிறது என அறிந்து...அதை..தடுக்கும்..ஆமிர், அது வெடித்து இறக்கிறான்.
2.வெட்னஸ்டே- நஸ்ருடீன் ஷா,அனுபம் கீர்..நடித்த படம்..மும்பை வெடிகுண்டு..பல்வேறு..கட்டங்களில்..வைத்தவர்களை பழிவாங்கும் கதை..அருமையான..திரைக்கதை அமைப்பு.(இப்படத்தை.நான் பார்த்தது..புதன்கிழமை..படம் பெயர் புதன்கிழமை,மும்பையில் அன்று குண்டுவெடிப்பு)
3.மும்பை..மேரி ஜான்- மும்பை..ரயிலில் குண்டு வெடிப்பு...யார் வாழ்ந்தால் என்ன..யார் செத்தால் என்ன..வாழ்வு தொடர்கிறது..என்னும் கதை..
பொதுவாக பார்த்தால்..தீவிரவாதம்..என்றாலே..இஸ்லாமியர் சம்பந்தபட்டதாய் இருக்கிறது..இதையே..தினமலர்..சில தினங்களுக்குமுன்..தீவிரவாதம்..பற்றி எழுதும் போது..ஒரு இஸ்லாமியர் படத்தை போட்டதற்கு..பத்திரிகை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..நடந்தது..
ஆனால்..திரைப்படங்களில்..இவை..சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.
மொத்தத்தில்..இப்படி குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..
ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..
இவை தவிர்க்கப்பட வேண்டும்..
எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம்.