Showing posts with label சமுகம் -நட்பு -எழுத்து. Show all posts
Showing posts with label சமுகம் -நட்பு -எழுத்து. Show all posts

Saturday, October 11, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் எண்ணங்களையும்...செய்திகளையும் ..நிகழ்வுகளையும் பதித்து வைக்க நமக்கு இப்போது blogsம்..இன்டெர்நெட் உள்ளன.
நல்ல எழுத்துத் திறமை இருந்தும்..நம் எழுத்துக்கள் அச்சேறாததை ..நமது தாகத்தை.. ஓரளவுக்கு தணித்துக்கொண்டிருக்கின்றன இணைய இதழ்களும்...வலைப்பூக்களும்.
அதை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆனால் அப்படியா நடந்துக் கொண்டிருக்கின்றது இன்று?
ஒரு கணினி கையில் கிடைத்து விட்டது..ஒரு blog ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.
ஒரு அரசியல்வாதி..நேர்மையாக செயல் படவில்லையானால்..அதை எழுதுங்கள்.
அவன் ஊழலை எழுதுங்கள்.அவனுக்கு கோடி கோடியாக பணம் எப்படி வந்தது என வினா எழுப்புங்கள்.
அவனது தனிப்பட்ட அவன் வாழ்வை விமரிசிக்காதீர்கள்.
ஒரு நடிகனின் நடிப்பை விமரிசியுங்கள்..அவன் நடிக்கும் போது..தண்ணி அடித்தான்..சிகரட் பிடித்தான் என சொல்லாதீர்கள்.அப்படி செய்தது அவன் ஏற்றுக்கொண்டுள்ள பாத்திரம்.
அவன் கோடியாக சம்பாதிக்கிறான் என்றால்..அது அவன் உழைப்புக்கு கொடுக்கப்படும் கூலி..அதை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
உங்கள் மேலதிகாரி..சாதாரணமாக ..குரலை உயர்த்தி பேசினாலே..மனம் வருந்தும் நாம்...
நடிப்புத் தொழில் செய்பவனை..செருப்பால் அடிப்பேன்..என்றெல்லாம் சொல்வது..பண்பாடற்ற செயல்.
ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்..
ஒரு சமயம் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக.என்.எஸ்.கே.பேசினார்..அவர் பேசும்போது எதிர்க்கட்சி வேட்பாளரை புகழ்ந்தாராம்..
அவர் சிறந்த மருத்துவர்,ஏழைகளிடம் பணம் வாங்காதவர்,இறக்கும் நிலையில் உள்ள பலரை காப்பாற்றி இருக்கிறார்..என்றெல்லாம்.
அனைவருக்கும் குழப்பம்...கடைசியில் சொன்னார்..'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்..ஏன்..பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறீர்கள்'என்று .
அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்பதையும் எவ்வளவு பண்போடு சொன்னார் பாருங்கள்.
ஆகவே ..தயவு செய்து..அநாகரிகமாக எழுதுவதை தவிர்ப்போம்..
நம் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள இந்த வசதியை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வோம்.