Showing posts with label சினிமா கமல். Show all posts
Showing posts with label சினிமா கமல். Show all posts

Wednesday, September 23, 2009

காமன்மேன் என்பவன் யார்..


உன்னைப்போல் ஒருவன் ..வந்தாலும் வந்தது.வழக்கம் போல அதிக எண்ணிக்கையில் இணையத்தில் விமரிசனங்களும் வந்து விட்டது.

கமல் தாடி,உடை,பூணூல்,செருப்பு,சாண்ட்விச் என அனைத்துப் பற்றியும் எழுதியாய் விட்டது.

கமல் ரசிகர்கள் விமரிசனம்,கமல் மேல் (குறிப்பாக சாதியிடம்) காழ்ப்புணர்ச்சி கொண்டவர் விமரிசனம்,நடுநிலை விமரிசனம் என..அடடா..எவ்வளவு ரகங்கள் .

பிரமிட் சாய்மீராவே பரவாயில்லை என்று ஆகிவிட்டது.

சரி தலைப்புக்கு வருவோம்..

நம்மில் பலருக்கு காமன்மேன் என்றால்..

கார்ட்டூன்களில் வரும் உருவம் போல் இருக்க வேண்டும்..ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூனில் வரும் பொதுஜனம் போல் இருக்க வேண்டும்..அதை விடுத்து பேண்ட்,ஷர்ட் போட்டுக் கொண்டு...கொஞ்சமாவது ஒத்துப்போக வெண்டாம்.

நமக்குத் தெரிந்த காமன்மேன்..காய்கறி விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்...விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டும்..குண்டுவெடிப்புக் குறித்து..நாலு பேருடன்..விவாதிக்க வேண்டும்..நாடு கெட்டுப் போயிற்று என அங்கலாய்க்க வெண்டும்..

அதைவிடுத்து கட்டடத்தின் மொட்டை மாடியில் நிற்கிறாராம்..தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறாராம்..அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறாராம்...இதையெல்லாம் காமன்மேன் செய்தான் என்பதை எந்த **யனும் ஒப்புக்கொள்ளமாட்டான்..இது கமலுக்கு ஏன் தெரியாமல் போயிற்று.

ஹிந்தி படங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்றால்.. ஒப்புக் கொள்வோம்..மலையாளப் படத்தில் சொன்னால் ஒப்புக் கொள்வோம்.அந்தந்த மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

ஆனால்..தமிழன்..தன்னைத் தவிர மற்றவர்களை மதிப்பான்..ஆகவேதான் கச்சையைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கடைசியாக கமலுக்கு ஒரு வார்த்தை...

நீங்கள் ஏன் சார்..பரிட்சார்த்த முயற்சிகள் செய்து..அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களை எடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை..கதாநாயகன் சோனியாய் இருந்தாலும்..வில்லனுடன் இரண்டு சண்டை, ஒரு குத்துப்பாட்டு, அம்மா அப்பா சென்டிமென்ட் இப்படி படம் கொடுத்தால் போதும்.

எங்கள் கலைத்தாகத்தை மற்ற மலையாளம், வங்காளப் படங்களைப் பார்த்து தீர்த்துக் கொள்கிறோம்.ஆனால்..அவ்வப்போது..தமிழில் ஏன் வித்தியாசமாக முயற்சி செய்வதில்லை என அங்கலாய்ப்போம்.அதை உண்மை என்று எண்ணாதீர்கள்.

இப்பதிவை படித்து விட்டு..என்னைக் காய்ச்ச நினைப்பவர்கள்..எனது இந்த பதிவையும் படித்து விட்டு வாருங்கள்.

Friday, September 4, 2009

எதிலும் 'முதல்வன்' கமல்


(புகைப்படம் ஆதியின் பதிவிலிருந்து சுடப்பட்டது.நன்றி ஆதி.)

தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன்தான்.

தொலைக்காட்சியே வேண்டாம் என்று கோஷம் போட்டு ஊர்வலம் போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். அன்று தன்னந்தனி கலைஞனாக நின்று, தொலைக்காட்சி எதிர்கால சினிமாவின் இன்னொரு வடிவம் என்றும், திரைப்பட வளர்ச்சிக்கு அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோஷம் போடுவது அறிவீனம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தவர் கமல்.

அவர் சொன்னதுதான் நிஜமானது. இன்று தமிழ் சினிமாவுக்கு பெரும் உறுதுணையாக நிற்பவை தொலைக்காட்சிகள் தான். படத்தில் போட்ட முதலில் பெரும் பகுதியை இன்று தொலைக்காட்சிகள்தான் தருகின்றன, தயாரிப்பாளர்களுக்கு!

அடுத்து விசிடி - டிவிடியை அடியோடு தடை செய்ய வேண்டும் என்றார்கள். அன்றும் கமல்தான் முதல் குரல் எழுப்பியவர்... 'திருட்டு விசிடி வரும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள்... நீங்களே உங்கள் படத்தை சிடியாகப் போட்டு அதிகாரப்பூர்வமாக விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தியேட்டராக இருந்தாலென்ன, சிடியாக இருந்தாலென்ன.. உங்கள் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தால் சரிதானே. இது அதிக சினிமா எடுக்கவும் உதவும்' என்று உறைக்கும் படி கேட்டவரும் இவர்தான்.

அடுத்து டிஜிட்டல் சினிமாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு பதில் தர வெறும் பேச்சோடு நிற்காமல் ஒரு டிஜிட்டல் திரைப்படமே எடுத்து அனைவரது வாயையும் அடைத்தவர் கமல்.

இன்று ஆன்லைன் மீடியாவுக்கே சில தயாரிப்பாளர்களும், சில திரைத்துறை பிஆர்ஓக்களும் தடைவிதிக்க வேண்டும் என கொக்கரித்து வருகிறார்கள்.

இன்றும் கமல் ஒருவர்தான் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். அதுவும் பேச்சோடு நிற்கவில்லை மனிதர். தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரைலரை இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இணைய தளங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

எவ்வளவு ஸ்டில்கள் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், எத்தனை பேட்டிகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என தனது மீடியா மேனேஜர் நிகில் மூலம் தகவலும் அனுப்பி வைத்துள்ளார்.

அடுத்த கட்ட சினிமா வை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.

இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.

இதில்கூட ஒரு சிறப்பைப் பாருங்கள்... உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சியில் ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லால், தீவிரவாதியின் படத்தை பேக்ஸில் அனுப்புங்கள் என்று கூறி, அடுத்த கணமே, 'வேண்டாம்... இமெயில் பண்ணுங்கள்!' என்பார். அங்குதான் நிற்கிறார் 'இன்டர்நெட்' கமல் !

கலை செய்யத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது... அந்தக் கலையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரியாகக் கொண்டு சேர்க்கும் அத்தனை உத்திகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது கமலின் அழுத்தமான கருத்து.

கமலின் கருத்துக்கள் ஆரம்பத்தில் யோசிக்க வைக்கும்... வாதங்கள் கிளப்பும்... இறுதியில் அவையே ஜெயிக்கும்... அவரது படங்களைப் போலவே!
இதையும் பார்க்கவும்

(நன்றி தட்ஸ்தமிழ்)

Friday, May 1, 2009

பத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் தயாரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் மோகன்லால் நடிப்பது தெரிந்த விஷயம்.

இது பற்றி கமல் கூறுகையில்..'மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டன.இம்மாத இறுதிக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும்.உடனுக்குடன் எடிட்டிங்கும் முடிந்துவிடுகிறது.என்னை அறிமுகப்படுத்திய களத்தூர் கண்ணம்மா ஆகஸ்டில் பொன்விழா கொண்டாடுகிறது.அதே மாதத்தில் இப்படத்தை வெளியிட ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.'என்றார்.

இப்படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலை ஏன் நடிக்க வைத்துள்ளீர்கள் எனக் கேட்கிறார்கள்.என்னை தமிழன் என மலையாள ரசிகர்கள் பிரித்துப் பார்ப்பதில்லை.அப்படியிருந்திருந்தால்..என்னால் அங்கு 40 படங்கள் நடித்திருக்க முடியாது.மோகன்லால் சிறந்த நடிகர்..a wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் இது.இப்படம் அனைத்து ரசிகர்களையும் சென்று அடையுமா எனத் தெரியாது.அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்துவது எளிதல்ல.எம்.ஜி.ஆர்., நடித்த பாசம் படம் பரமக்குடியில் 10நாட்கள் தான் ஓடியது என்றும் கூறினார்.

இப்படத்திற்கு ஸ்ருதி ஹாசன் இசை அமைக்கிறார்.இரா.முருகன் வசனங்களை எழுத..மனுஷ்யபுத்திரன் பாடல்களை எழுதிகிறார்.

உன்னைப்போல் ஒருவன்...ஜெயகாந்தனின் ஒரு நாவல் பெயர்..இப்பெயரிலேயே ஜெயகாந்தன் படம் எடுத்து...தேசியவிருது பெற்றார்..என்பது ஒரு உபரி செய்தி.