Showing posts with label சினிமா சிவாஜி. Show all posts
Showing posts with label சினிமா சிவாஜி. Show all posts

Sunday, July 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 19

1973ல் வந்த சிவாஜி படங்கள்

பாரதவிலாஸ்
ராஜ ராஜ சோழன்
பொன்னூஞ்சல்
எங்கள் தங்க ராஜா
கௌரவம்
மனிதரில் மாணிக்கம்
ராஜ பார்ட் ரங்கதுரை

இவற்றுள்..பாரதவிலாஸ்,ராஜ ராஜ சோழன்,எங்கள் தங்க ராஜா,கௌரவம்,ராஜபார்ட் ரங்கதுரை ஆகிய ஐந்து படங்கள் 100 நாட்களை கடந்து ஓடியவை.

பாரதவிலாஸ் படம் தேசிய ஒருமைப்பாட்டை சித்தரிக்கும் படம்.முதன் முதலாக இந்திய அரசே..ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய படம் இது.நட்சத்திர பட்டாளமே இதில் உண்டு.

ராஜ ராஜ சோழன்..அரு.ராமனாதன் எழுத்து.டி.கே.எஸ்., பிரதர்ஸ் மேடையேற்றிய நாடகம்.அதை ஆனந்த் தியேட்டர் அதிபர் உமாபதி படமாக்க விரும்பினார்.முதன் முதல் சினிமாஸ்கோப் படம் இது.

கௌரவம்..கண்ணன் வந்தான் என்ற பெயரில்..வியட்நாம் வீடு சுந்தரம் எழுத நாடகமாக நடிக்கப்பட்டது ஒய்.ஜி.பி.,குழுவினரால்.பின் கௌரவம் என்ற பெயரில் திரைப்படமானது.

நாடகங்கள் திரைப்படமானால் வெற்றி பெரும் என நிரூபித்தவர் நடிகர்திலகம்.கட்டபொம்மன்,வியட்நாம் வீடு,ஞானஒளி,ராஜ ராஜ சோழன்,கௌரவம்..(தங்கப்பதக்கம்,பரீட்சைக்கு நேரமாச்சு,ஆனந்தக்கண்ணீர்..ஆகியவையும் நாடகங்களே)

கௌரவம் 56 நாட்கள் ஒரு திரை அரங்கில்..ஹவுஸ் ஃபுல் ஆகி சாதனைப் படைத்தது.குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்

எங்கள் தங்க ராஜா..சிவாஜி 3 வேடங்கள்.பி.மாதவன் இயக்கம்.'யாரை நம்பி நான் பிறந்தேன்" பாடல் ஹிட்.

ராஜ பார்ட் ரங்கதுரை..நாடக நடிகனின் கதை.இப்படத்தில் நடிகர் திலகம் 14 கெட்டப்பில் வருவார்.

இனி..அடுத்தபதிவில் 1974ல் வந்த படங்களைக் காணலாம்.

Thursday, June 11, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 14

1968ல் வந்த படங்கள்

திருமால் பெருமை
ஹரிசந்திரா
கலாட்டா கல்யாணம்
என் தம்பி
தில்லானா மோகனாம்பாள்
எங்க ஊர் ராஜா
லட்சுமி கல்யாணம்
உயர்ந்த மனிதன்

கலாட்டா கல்யாணம்...சிவாஜி..ஜெயலலிதா நடித்து வந்த ஒரு நகைச்சுவை படம்..சி.வி.ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம்.100 நாள் படம்

என் தம்பி...பாலாஜியின் சொந்த படம்..சிவாஜி, சரோஜாதேவி..100 நாள் படம்

தில்லானா மோகனாம்பாள்...கொத்தமங்கலம் சுப்பு விகடனில் கலைமணி என்ற பெயரில் வந்த தொடர்கதை.சிவாஜி நாதஸ்வர வித்வான். சேதுராமன் சிவாஜிக்கு நாதஸ்வரம் பிண்ணனியில் வாசித்தார்.ஆனால்..உண்மையில் சிவாஜியே வாசிப்பது போல் நடிகர் திலகம் அருமையாக ..அற்புதமாக நடித்தார்..பத்மினி...மோகனாம்பாள் என்ற நடன மங்கை யாக ஈடுகொடுத்தார்.பாலையாவின் நடிப்பும் அருமையாக அமைந்தது.கே.வி.மகாதேவன் இசையில் அனைத்து பாட்டும் அருமை.ஜில் ஜில் ரமாமணியாக மனோரமா..நடித்து..பொம்பளை சிவாஜி என பெயரெடுத்தார்.திரைக்கதை,வசனம்,இயக்கம்..ஏ.பி.நாகராஜன்.மகத்தான வெற்றி படம்.

உயர்ந்த மனிதன்..சிவாஜியின் 125 ம் படம்..16 ஆண்டுகளில் இந்த சாதனை.

125 படம் எடுத்த ஏ.வி.ஏம்., இயக்கிய கிருஷ்ணன்-பஞ்சு ஆகியவர்களே..நடிகர் திலகத்தின் முதல்படமான பராசக்தியிலும் பங்கு கொண்டவர்கள் என்பது தனிச் சிறப்பு.சிவாஜி,வாணிஸ்ரீ, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்தனர். 100 நாள் படம்.

மற்றபடி..திருமால் பெருமையில்..சிவாஜி நடிப்பு அருமையாய் இருந்தும்...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

ஹரிசந்திரா தோல்வி படம்.

எங்க ஊர் ராஜா...பி.மாதவன் இயக்கம்..படம் சுமாரான வெற்றி.

லட்சுமி கல்யாணம்..கண்ணதாசன் படம்..பாட்டுகள் அனைத்தும் அருமை.ராமன் எத்தனை ராமனடி..இன்னமும் காதில் ஒலிக்கிறது.சிவாஜிக்கு ஜோடி இல்லை இப்படத்தில்.

1969 படங்கள் அடுத்த பதிவில்.

Saturday, June 6, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -13

1967ல்வந்த படங்கள்
கந்த கருணை
நெஞ்சிருக்கும்வரை
பேசும் தெய்வம்
தங்கை
பாலாடை
திருவருட்ச்செல்வர்
இரு மலர்கள்
ஊட்டி வரை உறவு

நாலு படங்கள் நூறு நாட்கள் ஓடின.

கந்தன் கருணை..இதில் வீரபாகு என்ற உப பாத்திரம்..ஆனாலும்..சிவாஜியின் நடிப்பே படத்தை ஆக்கிரமித்து இருக்கும்.

இந்த வருடம்...தீபாவளிக்கு வந்த படங்கள்..இரு மலர்கள், ஊட்டி வரை உறவு..இரண்டும் வெற்றி..

இருமலர்கள் படத்தில்...வாலியின்..மாதவிப் பொன் மயிலாள்..பாட்டுக்கு..விஸ்வநாதனின் இசையும்..டி.எம்.எஸ்.குரலும்.,பத்மினியின் நடனமும்..நடிகர் திலகத்தின் நடிப்பும்..மனதை விட்டு நீங்காதவை.

திருவருட்ச்செல்வர்..ஏ.பி.என்.,படம்...அப்பர் நடிப்பு அருமை.


மற்றபடி ஸ்ரீதரின்..நெஞ்சிருக்கும்வரை..வெளியான போது சரியாக ஓடாவிடினும்..பின்னர் செகண்ட் ரன்னில் ஓடிற்று.இதில் சிவாஜி..மற்றும் அனைத்து கலைஞர்களும் ஒப்பனை இன்றி நடித்திருப்பர்.

பாலாஜி..சிவாஜியை வைத்து தயாரித்த முதல் படம் தங்கை..படம் சுமாராக ஓடியது..திருலோகசந்தர் இயக்கம்.பின்னர் இவர்கள் காம்பினேஷன் பின்னர் நல்ல படங்களைக் கொடுத்தன.பாலாஜி சிவாஜியை வைத்து 17 படங்கள் எடுத்தார்..பெரும்பான்மை திருலோகசந்தர் இயக்கமே.

பேசும்தெய்வம்..கே.எஸ்.ஜி., படம்.நல்ல படம்..ஆனால் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாலாடை நீண்ட நாட்கள் தயாரிப்பில்..இருந்த் படம்..தோல்வி.

1968 படங்கள் அடுத்த பதிவில்.

Friday, May 22, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 11

1964ல் வந்த சிவாஜி படங்கள்.

கர்ணன்
பச்சை விளக்கு
ஆண்டவன் கட்டளை
கை கொடுத்த தெய்வம்
புதிய பறவை
முரடன் முத்து
நவராத்திரி

ஒரே வருடம்..வந்த .ஒரே நடிகனின் 5 படங்கள் 100 நாட்கள் சாதனை நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.இச் சாதனை .வேறு எவராலும் இதை முறியடிக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது என்றே தோன்றுகிறது.

மேலும்..5 ..100 நாட்கள் படங்களும் மொத்தம் 15 திரையரங்குகளில் சென்னையில் ஓடின.அவை..
கர்ணன்,பச்சை விளக்கு,கை கொடுத்த தெய்வம்,புதிய பறவை,நவராத்திரி.

புதியபறவைக்கு..எங்கே நிம்மதி பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வனாதன்..100க்கும் மேற்பட்ட இசை கருவிகளை பயன்படுத்தினார்.

நவராத்திரி படத்தில் 9 வேடங்களில்..சிவாஜி நடித்தார்.

1952 தீபாவளியன்று முதல் படம் பராசக்தி வந்தது..12 ஆண்டுகளுக்குப் பின் 1964 தீபாவளிக்கு வந்த நவராத்திரி சிவாஜியின் 100 ஆவது படம்.

இந்த தீபாவளிக்கும் நடிகர் திலகத்தின்..நவராத்திரி, முரடன் முத்து ஆகிய இரண்டு படங்கள் வந்தன.

1965 படங்கள் அடுத்த பதிவில்.

Friday, April 10, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 7

1960 ல் வெளியான படங்கள்
இரும்புத்திரை
குறவஞ்சி
தெய்வப்பிறவி
ராஜபக்தி
படிக்காதமேதை
பாவை விளக்கு
பெற்றமனம்
விடிவெள்ளி

சென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.

தெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,

படிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.

விடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.

தெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.

குறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.

பாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.

பெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.

அடுத்த பதிவில் 1961 படங்கள்.

Friday, April 3, 2009

சிவாஜி ஒரு சகாப்தம்-6

1959ல் வந்த சிவாஜியின் படங்கள்

தங்கப்பதுமை
நான் சொல்லும் ரகசியம்
வீரபாண்டிய கட்டபொம்மன்
மரகதம்
அவள்யார்
பாகப்பிரிவினை

சிவாஜியுடன் பத்மினி கதாநாயகியாய் நடித்த படம் தங்கப்பதுமை.ஜி.ராமனாதன் இசையில் பல பிரபலமான பாடல்கள் இடம் பெற்ற படம்.

நான் சொல்லும் ரகசியம்...இப்படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை..தோல்வி படம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன்- சிவாஜி நாடக மன்றத்தால் முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று பின் படமானது. வெள்ளிவிழா படம்.ஜெய்ப்பூர் அரண்மனையில் முதன்முதலாய் படமாக்கப்பட்ட திரைப்படம்.முதல் டெக்னிக் கலர் படம்.லண்டனில் கலர் பிரதிகள் எடுக்கப்பட்ட படம்.முதன் முதலாக 26 திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்.1960...கெய்ரோவில் ந்டைப்பெற்ற ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விழாவில்..சிறந்த திரைப்படம், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற படம்.

மரகதம்...மீண்டும் சிவாஜி, பத்மினி..100 நாட்கள் ஓடிய படம்.கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற மர்ம நாவலை தழுவி எடுத்த படம்.வீணை மேதை எஸ்.பாலசந்தர் உடன் நடித்துள்ளார்.

அவள்யார்? சிவாஜி, பண்டரிபாய்...சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம்..எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

பாகப்பிரிவினை...இப்படத்தை பார்க்காத முந்தைய தலைமுறையினர் இருக்கமாட்டார்கள்.சிவாஜி,சரோஜாதேவி,எம்.ஆர்.ராதா என பல பிரபலங்கள் நடித்த படம்.'தங்கத்திலே' ஏன் பிறந்தாய், போன்ற அருமையான பாடல்கள்.வெள்ளிவிழா கண்ட படம்.

இந்த வருடம் 6 படங்கள் வந்தாலும்...வியாபார ரிதியாக ஒன்றிரெண்டு தோல்வியுற்றாலும்...எல்லாம் நல்ல படங்கள் என்றே சொல்லலாம்.

அடுத்த வாரம் 1960 படங்கள்.

Wednesday, March 18, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -4

1957ல் வந்த சிவாஜியின் படங்கள்.

மக்களைப் பெற்ற மகராசி...பானுமதி ஜோடி. மருதகாசியின் தேனினும் இனிய பாடல்களுடன்...கிராமத்து விவசாயியாக சிவாஜி வாழ்ந்த படம். மாபெரும் வெற்றி.(மணப்பாற மாடு கட்டி, போறவளே போறவளே போன்ற பாடல்கள்)

வணங்காமுடி..சிவாஜி, சாவித்ரி, தங்கவேலு..நடித்தது.அருமையான கதை அமைப்பு, அளவான நடிப்பு, ஆரவாரமில்லா அருமையான பாடல்கள். (ஓங்காரமாய் விளங்கும் நாதம்...இன்றூம் ஓங்காரமாய் நம்
காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது)

புதையல்...சிவாஜி பட்மினி நடித்த வெற்றி படம். விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம்பெற்ற படம்.

மணமகன் தேவை...பானுமதியின் சொந்தபடம்...தோல்வி அடைந்த படம்.

தங்கமலை ரகசியம். சிவாஜி பாதி படத்திற்கு மேல் ..பெசத்தெரியாத...டார்ஜானாக நடித்த படம். கவி சுரதாவின் 'அமுதே பொழியும் நிலவே' ஒலிக்காத இடமே இல்லை அந்த நாட்களில்.ஜமுனா கதாநாயகி.

ராணிலலிதாங்கி, பாக்கியவதி தோல்வி படங்கள்.

அம்பிகாபதி...மீண்டும் சிவாஜி, பானுமதி...வெற்றி படம். மாசிலா நிலவே..பாடல் மறக்கமுடியாதது.இப்படம் தயாரிப்பில் இருந்த போது கலைவாணர் மரணம் அடைந்தார்.அவர் இதில் ஏற்று நடித்த பாத்திரமும்..இறந்து விட்டதாக காட்டப்பட்டது.

தவிர பராசக்தி..தெலுங்கு மொழி படமும் வெளியானது.

1958 படங்கள் அடுத்த பதிவில்..

Thursday, March 5, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 3

1955ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்...

காவேரி,முதல்தேதி,உலகம் பலவிதம்,மங்கையர் திலகம்,கோடீஸ்வரன், கள்வனின் காதலி

மங்கையர் திலகம் ...தவிர மற்ற படங்கள் எதிர்ப்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

காவேரி படத்தில்..குதம்பை சித்தர் பாடலும்..சித்த சுவாதீனமுற்றவர் போல சிவாஜி நடிப்பும் புகழப்பட்டன.

முதல்தேதி...சிவாஜி, அஞ்சலிதேவி, என்.எஸ்.கே.,நடித்தபடம்..கதையம்சம் பாராட்டும்படி இருந்தாலும்...படத்தின் பெரும் பகுதி..கனவு என்று இருந்ததால்..படம் தோல்வி.

உலகம் பலவிதமும், கோடீஸ்வரனும்...சொல்ல ஒன்றும்..இல்லாமல்..வந்து போனது..அவ்வளவே..

கள்வனின் காதலி...கல்கியின் கதை..சிவாஜி, பானுமதி நடித்தது.. அவ்வளவுதான்.

மங்கையர்திலகம்...சிவாஜி,பத்மினி,சுப்பையா நடித்த படம்.'நீல வண்ண கண்ணா வாடா"பாடல் ஹிட்.படமும் ஹிட்.,சிவாஜியின் அண்ணியாக பத்மினி.

மொத்தத்தில்...இவ்வாண்டு சுமாரான..ஆண்டு அவருக்கு.

1956ல் வந்த படங்கள்-

நான் பெற்ற செல்வம்,நல்ல வீடு,நானே ராஜா,தெனாலிராமன்,பெண்ணின் பெருமை,ராஜா ராணி,அமரதீபம்,வாழ்விலே ஒரு நாள், ரங்கோன் ராதா.

நான் பெற்ற செல்வம்...ஜி.வரலட்சுமி ஜோடி.படம் வெற்றி...நான் பெற்ற...பாடல் ஹிட்.

நானே ராஜா படத்தில்..சாம்ராட் அசோகனாக சிவாஜி ஒரு காட்சியில் அட்டகாசமாக நடிப்பார்..படம் ஆனால் தோல்வி.

நல்ல வீடு, தெனாலிராமன் ஆகிய படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றிபெறவில்லை.

பெண்ணின் பெருமை..சாவித்ரி,ஜெமினி உடன் நடித்திருப்பர்.படம் வெற்றி.சிவாஜி வில்லன் போன்ற பாத்திரம்..இந்த மூன்று நடிகர்கள் பின்னாட்களில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தனர்.

அமரதீபம்..ஸ்ரீதர் கதை..வசனம்..சாவித்திரி ஜோடி..பத்மினியும் படத்தில் உண்டு.படம் வெற்றி.ஏ.எம்.ராஜாவின்...தேன் உண்ணும் வண்டு போன்ற பல ஹிட் சாங்க்ஸ் உண்டு இப்படத்தில்.

வாழ்விலே ஒரு நாள்.ஜி.வரலட்சுமி...படம் தோல்வி.

ரங்கோன் ராதா ..அண்ணாவின் கதை..உடன் பானுமதி..எஸ்.எஸ்,ஆர்., கலைஞரின் பாடல்கள்..(பொது நலம்)., படம் வெற்றி.

இனி 1957 படங்கள் அடுத்த வாரம்.