Showing posts with label சினிமா தீபாவளி. Show all posts
Showing posts with label சினிமா தீபாவளி. Show all posts

Tuesday, November 11, 2008

தீபாவளி படங்கள் என் பார்வையில்....

லக்கிலுக் ஒரு பதிவில் தீபாவளிக்கு வந்த படங்கள் பற்றி எழுதி இருந்தார்.அவர் முன்னர் தீபாவளிக்கு 18 படங்கள் கூட வந்தது உண்டு..என்றும் ..ஆனால் இந்த தீபாவளிக்கு 3 படங்கள்தான் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்..

அது உண்மைதான்..ஆனால்..அப்போது எல்லாம் தீபாவளி ஒரு பெரிய பண்டிகையாக..விமரிசையாக கொண்டாடப்பட்டது..குடும்பத் தலைவர்களுக்கு தீபாவளி போனஸ் வரும்..குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் புத்தாடை..பட்டாசு..என அமர்க்களப்படும்.விடியற்காலை 3 மணிக்கே..எழுந்திருந்து...எண்ணெய் குளியல் முடித்து..புத்தாடை அணிந்து..பட்டாசு கொளுத்துவது
என கோலாகலமாய் இருக்கும்..பிறகு..உறவினர்கள் வருவதும்..நாம் போவதும்...என அமர்க்களப்படும்..வரும் திரைப்படங்கள் எதாவது பார்த்துவிடும் துடிப்பு இருக்கும்.

ஆனால்...இன்று..தீபாவளி ஒரு சாதாரண நாள்போல ஆகிவிட்டது...

பட்டாசுகள் கூட காலை 6 மணிக்கு மேல் தான் வெடிக்க வேண்டும் என்ற அரசு ஆணை வேறு..எண்ணெய் விற்கும் விலையில் எண்ணெய் குளியல் ஏது..பெரும்பாலோருக்கு போனஸும் கிடையாது..அதற்கேற்றார் போல திரைபடத் துறையினரும்..இப்போது அந்த நாளை..சாதாரணமாக வெள்ளிக்கிழமை படம் வரும் நாளாக நினைத்து விட்டனர்போலும்.

அப்போது..தீபாவளி அன்று சிவாஜி படங்கள்..சில சமயம் இரண்டு கூட வெளிவரும்.நவராத்திரியும்..முரடன் முத்து வும் ஒரு தீபாவளிக்கு வந்தது..
எங்கிருந்தோ வந்தாள்..சொர்க்கம் ஒரு தீபாவளிக்கு வந்தது.ஆனால் அப்போதும் யார் நடித்த படமாய் இருந்தாலும்..மக்களுக்கு எத்ர்பார்த்தது இல்லை எனில் படம் தோல்விதான்..பாசமலர் எடுத்த தயாரிப்பாளர்களின் அடுத்த படம் குங்குமம் ஒரு தீபாவளிக்கு வந்தது..படம் ஃப்ளாப் (பிறகு செகண்ட் ரன்..தேர்ட் ரன் படம் சுமாராக போயிற்று)

இனி அப்படிப்பட்ட தீபாவளி என்று வருகிறதோ ..அன்று..நிறைய படங்களும் வரக்கூடும்.