Showing posts with label சினிமா - செய்திகள். Show all posts
Showing posts with label சினிமா - செய்திகள். Show all posts

Wednesday, September 8, 2010

சிந்து சமவெளி - போலீசார் விசாரணை



சிந்து சமவெளி பட விவகாரத்தால் தனது கார் உடைக்கப்பட்டதாகவும், இந்தப் படத்தில் விவகாரமான கேரக்டரில் நடித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாகக் கூறிய நடிகை அனகாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கார் உடைக்கப்பட்டது தொடர்பாக அவர் போதிய விவரங்ளைத் தரவில்லை என்றும், அவரை செல்போனில் மிரட்டியதாகக் கூறப்படும் விஷயத்திலும் அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிகிறது.

படத்தை ஓட வைக்க சாமியே திட்டமிட்டு இந்த பரபரப்பை கிளப்புகிறாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரோ, இந்த மிரட்டல் பற்றி இயக்குநருக்குத்தான் தெரியும் என்று நழுவிவிட்டார்.

மிரட்டல் ஆசாமிகள் குறித்து முன்னுக்குப்பின் முரனாண தகவல் கொடுத்து வருவதால் படத்துக்கு பப்ளிசிட்டி தேட சாமி இப்படிச் செய்தாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் தவறு செய்தது உறுதியானால் அவரையே கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் படத்தில் மாமனாருடன் கள்ளக் காதலில் ஈடுபடும் மருமகள் கேரக்டரில் நடித்ததால் தனக்கும் மிரட்டல்க் வந்ததாகக் கூறிய அனகாவிடமும் சென்னை கே.கே.நகர் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த மிரட்டல்கள் குறித்து இயக்குனருக்குத்தான் தெரியும் என்று அவர் நழுவியுள்ளார்.

தனக்கு பலரிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் போனிலும் மிரட்டல்கள் வருவதாகவும் அனகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(நன்றி தட்ஸ்தமிழ் )