
மணமக்களுக்கு வாழ்த்துகள்
திரையுலக பிரபலங்கள் பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் போது 'ரசிகர்கள் தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள்' என்று கூறுவதுண்டு,
அதே போன்று..தான் நடித்த திரைப்பட வெற்றி விழா,கலந்துக் கொள்ளும் பொது மேடைகள் இவற்றில் எதை மறந்தாலும் ரசிகர்களை மறக்காமல் அவர்களுக்கு நன்றியை சொல்வதுண்டு.
ஆனால்..அதுவே..தங்கள் வீட்டு விசேஷங்கள் நடந்தால்..ரசிகர்களை..அவர்களை..இந்நிலைக்குக் கொண்டுவந்த , அவர்களை வாழ வைத்த ரசிகர்களை சௌகரியமாக மறந்து விடுவதுண்டு..
அல்லது..கூட்டம் அதிகம் வந்தால் ..சட்டம்..ஒழுங்கு ..பாதிக்கப்படும் என ஒன்றைக் கூறி..அவர்களை புறக்கணிப்பதுண்டு.
அதற்கு..தானும் விதி விலக்கல்ல என்று நிரூபித்துள்ளார்..சூபர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தன் மகள் சௌந்தர்யா திருமணத்திற்கு..வரும் ரசிகர்களுக்கு சாப்பாடு போடுவது என்பது ரஜினிக்கு முடியாத செயலல்ல..
ஆனால், அவர் செய்ததோ..திருமணத்திற்கு அவர்கள் வர வேண்டாம்..அவர்கள் ஆசி ஒன்றே போதும் என அறிக்கை விட்டு விட்டார்.
ஆமாம்..மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கூடப்போகும் நிகழ்ச்சிக்கு..'அவன் 'வந்தால் ஒருவேளை கௌரவக்குறைவாகி விடும் என எண்ணினாரோ என்னவோ.
ஆனால்..மாதம் தவறாது ஒரு சிறுதொகையை..லாரன்ஸ் நடத்தும்..மாற்றுதிறனாளிப் பள்ளிக்கு சௌந்தர்யா வழங்கி வருவதால்..அதற்கு நன்றியாக லாரன்ஸ் 5000 பேருக்கு இன்று அன்னதானம் செய்கிறார்.
நடிகர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் படம் வரும் அன்று தோரணம் கட்ட, பால்/பீர் அபிஷேகம் செய்ய மட்டுமே ரசிகர்கள் வேண்டும்.
மீத நேரங்களில்..அவன் தேவையில்லை..
ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன.