Showing posts with label சிவாஜி சினிமா. Show all posts
Showing posts with label சிவாஜி சினிமா. Show all posts

Friday, September 18, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் _ 27

1988ல் வந்த படங்கள்
என் தமிழ் என் மக்கள்
புதிய வானம்

1987ல் எம்.ஜி.ஆர்., மறைவு,

காங்கிரஸிலிருந்து சிவாஜி விலகல், புதுகட்சி தொடக்கம் என தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததால் 1988 முதல் படங்களைக் குறைத்துக் கொண்டார்.

என் தமிழ்..என் மக்கள் சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பு.சிவாஜி, வடிவுக்கரசி நடிக்க சந்தான பாரதி இயக்கம்.கங்கை அமரன் இசை


புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த சத்யா மூவிஸ் படம்.ஆர்.வி.உதயகுமார் இயக்கம்.இது 100 நாள் படம்.இது சிவாஜியின் 275 ஆவது படம்.சிவாஜியுடன் சத்யராஜ்,ரூபினி, கௌதமி நடிக்க ஹம்சலேகா இசையமைத்தார்


1991 - ஞானப்பறவை..மனோரமா ஜோடி.வியட்நாம் வீடு சுந்தரம் கதை, வசனம், இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை


1992 ல் வந்த படங்கள்
நாங்கள்
சின்ன மருமகள்
முதல் குரல்
தேவர் மகன்.

நாங்கள் - சிவாஜியுடன் பிரபு, ஜீவிதா,ஸ்ரீவித்யா நடிக்க ஹசன் இயக்கினார்.இளையராஜா இசை

சின்ன மருமகள் - கே ஆர் தயாரிப்பு.பிரசாந்த் குமார் இயக்கம்.சிவாஜியுடன் சிவா, மோகினி நடித்திருந்தனர்.

முதல் குரல்- வி சி குகநாதன் இயக்கம்.சிவாஜி, கனகா நடிக்க சந்திர போஸ் இசை

கமலுடன் நீண்ட காலம் கழித்து சிவாஜி இணைந்த படம் தேவர்மகன்.வெள்ளிவிழா படம்.பரதன் இயக்கம்.ரேவதி, கௌதமி ஆகியோரும் நடித்திருந்தனர்.1992 தீபாவளி வெளீயீடான இப்படம் 200 நாட்கள் ஓடியது.தெலுங்கில் க்ஷேத்ரிய புத்ரூடு என மொழிமாற்றம் செய்யப்பட்டது.நடிகர் திலகத்திற்கு ஸ்பெஷல் ஜூரி  தேசிய விருது வழங்கப்பட்டது

1993 - பாரம்பரியம்...மனோபாலா இயக்கம். சிவாஜியுடன் சரோஜா தெவி,நிரோஷா நடித்தனர்.இளையராஜா இசை

1995- பசும்பொன்...பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த படம்.சிவாஜி, சிவகுமார்,பிரபு, சரண்யா ஆகியோர் நடிக்க வித்யாசாகர் இசை

1997 ல் படங்கள்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) - மோகன்லாலுடன் இணைந்த படம்.
பிரியதர்ஷன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இசை இளையராஜா.வெற்றி படம்

ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாதேவி நடித்த இருவர் உள்ளம் காட்சிகளின் தொடர்ச்சியாக ஒரு கிளைக்கதையைக் கொண்ட படம்.100 நாள் படம்..எஸ் ஏ சந்திர சேகர் இயக்கம்.தேவா இசை

1998- என் ஆசை  ராசாவே- ஃபேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலையில்..தான் ஏற்காத கரகாட்டக்கார பாத்திரம் என்பதால் நடித்த படம்.கஸ்தூரிராஜா இயக்கம்.தேவா இசை



1999-மன்னவரு சின்னவரு

சிவாஜி, கே ஆர் விஜயா,சௌந்தர்யா, அர்ஜுன் நடித்திருந்தனர்.பி என் ராக் குமார் இயக்கம்.கீதாபிரியன் இசை.கலைப்புலி இன்டெர்னேஷனல் தயாரிப்பு

படையப்பா..ரஜினியுடன் நடித்த படம்..கேஎஸ்.ரவிகுமார் இயக்கம்..வெள்ளிவிழா படம். ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா,லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இருந்தது.வசூலில் சாதனை.உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியான முதல் படம்.தெலுங்கில் நரசிம்மா எம மொழி மாற்றம் செய்யப்பட்டு 49 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.ஏ ஆர் ரஹ்மான் இசை.

பூ பறிக்க வருகிறோம் - வெங்கடேஷ் இயக்கத்தில்..திரையுலக காமெரா சிவாஜியின் நடிப்பை கடைசியாய் வாங்கிக் கொண்ட படம்.மாளவிகா உடன் நடித்தார்.வித்யாசாகர் இசை

கௌரவ நடிகராக சிவாஜி நடித்த படங்கள்
மர்மவீரன்
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
குழந்தைகள் கண்ட குடியரசு
தாயே உனக்காக
சினிமா பைத்தியம்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்

1999க்கு பிறகு அவர் படங்கள் வரவில்லை என்றாலும்...அவர் படங்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை.நடிப்புக் கல்லூரிகளில்..பயிலுபவர்கள் பார்க்க வேண்டியவை.

அடுத்து இரு பதிவுகளில் சிவாஜி பெற்ற விருதுகள்..விருது பெற்ற படங்கள் ஆகியவை வெளிவரும்

Thursday, September 10, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 26

1986ல் வந்த படங்கள்
சாதனை
மருமகள்
ஆனந்தகண்ணீர்
விடுதலை
தாய்க்கு ஒரு தாலாட்டு
லட்சுமி வந்தாச்சு
மண்ணுக்குள் வைரம்

சாதனை..பேராசிரியர் பிரகாசம் தயாரிப்பு,இயக்கம்., இதில் சிவாஜி ஒரு இயக்குநராகவே வருவார்.

சாதனை,மருமகள்,விடுதலை மூன்றும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.

மருமகள் படத்தில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நடிகர் திலகம் படுத்துக் கொண்டே நடித்த படம்.

ஆனந்தகண்ணீர்..மீண்டும் ஒரு மேடை நாடகம் படமானது.(இங்கு ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும்..'புதியதோர் உலகம்' என்று பரத் எழுதிய நாடகம் எனது 'சௌம்யா' நாடகக் குழுவால் மேடை நாடகமாக சென்னை நாடகமேடைகளில் ந்டத்தப்பட்டது.அதுவே ஆனந்தகண்ணீர் என படமானது.)

இனி...

சாதனை-  சிவாஜி, பிரபு, கே ஆர் விஜயா, நளினி நடித்தனர்.பேராசிரியர் பிரகாசம் இயக்கம்.இசை இளையராஜா

மருமகள் - கார்த்திக் ரகுநாத் இயக்கம்.பாலாஜி தயாரிக்க, வசனம் ஆரூர்தாஸ்.சிவாஜி, ரேவதி நடிப்பு.இசை சந்திர போஸ்

ஆனந்தகண்ணீர் - சிவாஜி, லட்சுமி.ஷங்கர் கனேஷ் இசை.கே விஜயன் இயக்கம்

விடுதலை - கே விஜயன் இயக்கம்.ஆரூர்தாஸ் வசனம்.சிவாஜியுடன், ரஜினி காந்த், மாதவி நடித்தனர்.இசை சந்திர போஸ்.குர்பானி ஹிந்திப் பட மறுஆக்கம்

தாய்க்கு ஒரு தாலாட்டு - பாலச்ந்திர மேனன் இயக்கம்.இசை இளையராஜா.சிவாஜியுடன் பத்மினி நடித்திருந்தார்

லட்சுமி வந்தாச்சு - குப்சூரத் என ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்.ராஜசேகர் இயக்கத்தில், சிவாஜி, பத்மினி, ரேவதி  நடிப்பு.மீனா குழந்தை  நட்ச்சத்திரமாக  நடித்த படம்.ரவீந்திரன் இசை

மண்ணுக்குள் வைரம் - கோவை த்தம்பியின் மதர் லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு..சிவாஜியுடன் சுஜாதா.மனோஜ் குமார் இயக்கம்.தேவேந்திரன் இசை.படம் 75 நாட்கள் ஓடினாலும், சிவாஜி வைத்து தான் ஒரு படம் தயாரித்ததை பெருமையாகச் சொல்வார் கோவைத் தம்பி

1987ல் வந்த படங்கள்
ராஜமரியாதை
குடும்பம் ஒரு கோவில்
முத்துக்கள் மூன்று
வீர பாண்டியன்
விஸ்வனாத நாயக்குடு (தெலுங்கு)
அன்புள்ள அப்பா
ஜல்லிக்கட்டு
கிருஷ்ணன் வந்தான்
தாம்பத்யம்
அக்னிபுத்ருடு (தெலுங்கு)

ராஜமரியாதை -

இதில் தெலுங்கு படங்கள் இரண்டும் நூறு நாட்கள் ஓடின.
மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு நூறு நாள் படம்.
தேங்காய் சீனிவாசன் எடுத்த படம் கிருஷ்ணன் வந்தான்.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா முதலும், கடைசியுமாய் எம்.ஜி.ஆர்., கலந்துக் கொண்ட சிவாஜி விழா.
பாலாஜி தயாரித்த சிவாஜி கடைசி படம் குடும்பம் ஒரு கோவில்
முத்துக்கள் மூன்று..டி.ராஜேந்தர் இசையில் வந்தது.
சத்யராஜ்,பாண்டியராஜ் சிவாஜியுடன் இணைந்த படம் முத்துக்கள் மூன்று
கார்த்திக் சிவாஜியுடன் இணைந்தது ராஜமரியாதை
விஜய்காந்த்,நடிகர் திலகத்துடன் இணைந்த படம் வீரபாண்டியன்.நீண்ட நாட்கள் கழித்து..சிவாஜியை வைத்து ஏவிஎம் எடுத்த படம் அன்புள்ள அப்பா.
நடிகர் திலகத்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய திருலோகசந்தர் இயக்கிய கடைசி படம் அன்புள்ள அப்பா.

இனி படங்களின் விவரம்

ராஜ மரியாதை - கார்த்திக் ரகுநாத் இயக்கம்.சிவாஜி, ஜீவிதா நடிக்க திரைக்கதை, வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.ஷங்கர் கணேஷ் இசை

குடும்பம் ஒரு கோயில் - ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.எம் ரங்காராவ் இசை.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு.சிவாஜியுடன் ,லட்சுமி நடித்திருந்தார்

முத்துக்கள் மூன்று - ஏ ஜகன்னாதன் இயக்க்ம்.சிவாஜி, சத்யராஜ், ரஞ்சனி நடிப்பு.இசை டி ராஜேந்தர்

வீர பாண்டியன் _  கார்த்தி ரகுநாத் இயக்கம்.துரை கதை வசனம்.சிவாஜியுடன், விஜய் காந்த், ராதிகா நடிக்க, இசை ஷங்கர் கணேஷ்

விஸ்வநாத நாயக்குடு - (தெலுங்கு) ஜே வி ராகவலு இசை.கிருஷ்ணம் ராஜு நடிக்க உடன் சிவாஜி, கே ஆர் விஜயா, மோகன் பாபு நடித்தனர்.இயக்கம் தாசரி நாராயண ராவ்

அன்புள்ள அப்பா - ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.ஏ வி எம் தயாரிப்பு.சிவாஜியுடன் நதியா.ஷங்கர் கணேஷ் இசை

ஜல்லிக்கட்டு - மணிவண்ணன் இயக்கம். கதை, வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.இசை இளையராஜா.சிவாஜியுடன் சத்யராஜ், ராதா நடித்தனர்

கிருஷ்ணன் வந்தான் - தேங்காய் ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளர்.கே விஜயன் இயக்கம்.சிவாஜியுடன் கே ஆர் விஜயா.இசை இளையராஜா

தாம்பத்யம் - சிவாஜி அம்பிகா,ராதா நடிக்க மனோஜ்க்யான் இசை யமைக்க கே விஜயன் இயக்கம்

அக்னி புத்ருடு - நாகேஸ்வரராவுடன்  நாகார்ஜுனா, சாரதா மற்றும் நடிகர் திலகம் நடித்தனர்.சக்ரவர்த்தி இசை.கே ராகவேந்திர ராவ் இயக்கம்

நடிகர் திலகம் நடிக்க வந்து 35 ஆண்டுகள் நிறைவு.ஒரே ஆண்டில் பத்து படம்.சாதனையல்லவா?,

1988ல் வந்த படங்கள் அடுத்த பதிவில்

Wednesday, September 2, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 25

1983ல் வந்த படங்கள்
பெஜவாடா பெப்புலி ( தெலுங்கு)
நீதிபதி
இமைகள்
சந்திப்பு
சுமங்கலி
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா

பெஜவாடா பெப்புலி, கிருஷ்ணா நடிக்க விஜயநிர்மலா இயக்கம்.இப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ராதிகா ஆகியோரும் நடித்துள்ளனர்

நீதிபதி...- சிவாஜியுடன் கே ஆர் விஜயா நடிக்க இயக்கம் ஆர் கிருஷ்ண மூர்த்தி.இசை கங்கை அமரன்

இமைகள்- நீதிபதி இயக்கிய ஆர் கிருஷ்ணமூர்த்தியே இப்படத்தின் இயக்குநரும் ஆவார்.இசையும் கங்கை அமரன்.விஜயாவிற்கு பதில் நாயகி சரிதா

சந்திப்பு  -- சிவாஜி, ஸ்ரீதேவி நடிக்க சிவி ராஜேந்திரன் இயக்கம்.திரிசூலம் படத்திற்குப் பின் அதிக வசூலைப் பெற்ற படம்.

சுமங்கலி - சுஜாதா நாயகி.யோகானந்த் இயக்கம்.விஸ்வநாதன் இசை

மிருதங்க சக்கரவர்த்தி -  கே ஆர் விஜயா நாயகி.இயக்கம் கே ஷங்கர்.இசை எம் எஸ் விஸ்வநாதன்.வாணிஸ்ரீ பாடிய சுகமான ராகங்களே பாடல் ஹிட்

ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் சிவாஜி ,அம்பிகா நடிக்க வந்த படம்.இசை இளையராஜா.போஸ்ட் மார்த்தம் என்ற மலையாளப்படத்தின் மறு ஆக்கமாகும்

இவற்றுள் தெலுங்கு படமும்,மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளைரோஜா ஆகியவை 100 நாட்கள் ஓடின.வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடங்கள்.ஜோடியோ,டூயட்டோ கிடையாது.(இவை இல்லா முதல் படம் சரஸ்வதி சபதம்)

நீதிபதி,சந்திப்பு ஆகியவை வெள்ளிவிழா படங்கள்.

பாலாஜி தயாரிப்பில்..சிவாஜி தந்த வெள்ளிவிழா படங்கள் மூன்று..தியாகம்,தீர்ப்பு,நீதிபதி

1984ல் வந்த படங்கள்
திருப்பம்
சிரஞ்சீவி
தராசு
வாழ்க்கை
சரித்திர நாயகன்
சிம்ம சொப்பனம்
எழுதாத சட்டங்கள்
இரு மேதைகள்
தாவணி கனவுகள்
வம்ச விளக்கு

இவற்றுள் திருப்பம்,வாழ்க்கை,தாவணி கனவுகள் ஆகியவை 100 நாள் படங்கள்.
சிரஞ்சீவி...முதன் முதலாக கப்பலிலேயே படமாக்கப்பட்ட படம்.18 நாட்களில் எடுக்கப்பட்டது கே.சங்கர் இயக்கம்.
சிவாஜியுடன்..பாக்கியராஜ் இணைந்த படம் தாவணி கனவுகள்.

திருப்பம்-
 சிவாஜியுடன், சுஜாதா, பிரபு நடித்த படம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கம்.கே கங்காதரன் கேஜி ஆர் ஃபில்ம் செர்க்யூட் சார்பில் எடுக்கப்பட்ட படம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை

சிரஞ்சீவி..கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா.விஸ்வநாத்ன் இசை.

தராசு...ராஜகணபதி இயக்கம்.நாயகி கே ஆர் விஜயா.விஸ்வநாத்ன் இசை

வாழ்க்கை-  அவ்தார் ஹிந்திபடத்தின் மறு ஆக்கம்.சிவாஜி, அம்பிகா நடிக்க இளையராஜா இசை.சி வி ராஜேந்திரன் இயக்கம்.

சரித்திர நாயகன்- சிவாஜி, சாரதா, பிரபு.. டி யோகானந்த் இயக்கம்.விஸ்வநாதன் இசை

சிம்ம சொப்பனம் - கிருஷ்ணன் இயக்கம்.சிவாஜி, விஜயா, பிரபு நடிப்பு.கே வி மகாதேவன் இசை

எழுதாத சட்டங்கள்- கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, ஊர்வசி, பிரபு நடிப்பு.இளையராஜா இசை

இருமேதைகள்- முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.சிவாஜி, சரிதா, பிரபு நடிக்க இளையராஜா இசை

தாவணிக்கனவுகள்...தயாரிப்பு, இயக்கம் கே பாக்கியராஜ்.சிவாஜிக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாத்திரம்.பார்த்திபன் ஒரு காட்சியில் மட்டும் நடிகராய் அறிமுகம்.அற்புதமான நடிப்பை சிறு பாத்திரத்திலும் கொண்டுவருவார் திலகம். இளையராஜா இசை

வம்ச விளக்கு- பிரபு, கே ஆர் விஜயாவுடன் சிவாஜி.கங்கை அமரன் இசை. விதாதா என்ற ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கம்

நடிக்க வந்து 32 ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் பத்து படங்கள்..சிவாஜியின் சாதனை இது எனலாம்



1985ல் வந்தவை
பந்தம்
நாமிருவர்
படிக்காத பண்னையார்
நீதியின் நிழல் (கௌரவ தோற்றம்)
நேர்மை
முதல் மரியாதை
ராஜரிஷி
படிக்காதவன் (கௌரவ தோற்றம்)

பந்தம் நூறு நாள் படம்.முதல் மரியாதை..வெள்ளி விழா படம்.பாரதிராஜா இயக்கம்.
படிக்காதவன் ரஜினியுடன் திலகம்.வெள்ளிவிழா.
மனோகரின்..விஸ்வாமித்திரர் நாடகமே ராஜரிஷி.
33 ஆண்டுகளில் 250 படங்கள்.250 ஆவது படம் நாம் இருவர்.

முதல் மரியாதை..கோவையில் தொடர்ந்து 450 அரங்கு நிறைந்த காட்சிகள் ஒரு சாதனை.

பந்தம் - சிவாஜியுடன் ஜெயஷங்கர் சேர்ந்து நடிக்க ஷங்கர் கணேஷ் இசையில் கே விஜயன் இயக்கிய படம்

நாம் இருவர் -  ஏ வி எம் தயாரிப்பு.சிவாஜியுடன் ஊர்வசி.ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கம்.இசை கங்கை அமரன்

படிக்காத பண்ணையார் -  கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க இளையராஜா இசை,தயாரிப்பும் கோபாலகிருஷ்ணன்

நீதியின் நிழல் _ சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு. பிரபு ராதா நடிக்க குகநாதன் கதை வசனம்.திரைக்கதை, இயக்கம் பாரதி வாசு.சிவாஜி இதில் கௌரவத்தோற்றம்

நேர்மை - கே ஆர் ஜி தயாரிப்பு.இயக்கம் ஆர் கிருஷ்ணமூர்த்தி.சிவாஜி, சுஜாதா ,பிரபு நடிக்க எம் எஸ் விஸ்வநாதன் இசை.bulundi என்ற ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்

முதல் மரியாதை- தாயாரிப்பு, இயக்கம் பாரதிராஜா.நடிகர் திலகத்துடன் ராதா, சத்தியராஜ், வடிவுக்கரசி நடித்தனர் இளைய ராஜா இசை.

பூங்காற்று திரும்புமா
வெட்டி வேரு வாசம்
ராசாவே உன்னை நம்பி
நான் தானா அந்த குயில்

ஆகிய பாடல்கள் அனைத்தும் ஹிட்.

பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு  சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதும், சிறந்த தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது பாரதிராஜாவிற்கும் கிடைத்தது

ராஜரிஷி- கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, பிரபு, நளினி.இசை இளையராஜா

படிக்காதவன் - சிவாஜியுடன் ரஜினி. ராஜசேகர் இயக்கம்.நாயகி அம்பிகா

குட்டார் என்ற ஹிந்திப் படத்தின் மறு ஆக்கம்


1986 படங்கள் அடுத்த பதிவில்.

Tuesday, June 30, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 16

1970ல் சிவாஜி நடித்து வெளிவந்த படங்கள்

எங்க மாமா
தர்த்தி (சிவந்தமண்-ஹிந்தி பதிப்பு)
விளையாட்டுப் பிள்ளை
வியட்நாம் வீடு
எதிரொலி
ராமன் எத்தனை ராமனடி
எங்கிருந்தோ வந்தாள்
சொர்க்கம்
பாதுகாப்பு

இவற்றுள் வியட்நாம் வீடு,ராமன் எத்தனை ராமனடி,எங்கிருந்தோ வந்தாள்,சொர்க்கம் ஆகிய படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஒடியவை.

கருப்பு..வெள்ளை படம் ஒன்று 107 அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து நடைபெற்றது வியட்நாம் வீடு படத்திற்குத் தான்.இதுவும் ஒரு சாதனை ஆகும்.மலேஷியாவில் முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் இது.சிவாஜி நாடக மன்றத்தினரால்..சிவாஜி,ஜி.சகுந்தலா நடிக்க நாடகமாக நடிக்கப் பெற்றது இது.சாதாரண சுந்தரம்..இப்படத்திற்கு கதை, வசனம் எழுத..வியட்நாம் வீடு சுந்தரமானார்.படத்தில்..ஜி.சகுந்தலா ஏற்ற வேடத்தை பத்மினி ஏற்றார்.

இவ்வருட தீபாவளீக்கு வந்தவை..எங்கிருந்தோ வந்தாள் (பாலாஜி..தயாரிப்பாளர்) மற்றும் சொர்க்கம் (டி.ஆர்.ராமண்ணா).இரண்டு படங்களும் வெற்றி.அத்துடன் இல்லாது..வெற்றி விழாவை..இரு தயாரிப்பாளர்களும் சேர்ந்து ஒரே மேடையில் நடத்தினர்.இதுவும் சாதனை.

ராமன் எத்தனை ராமன்..பி.மாதவன் இயக்கத்தில் வந்த படம்..சிவாஜி இதில் ஒரு நடிகனாக வருவார்.

தர்த்தி..சிவந்தமண் ஹிந்தி பதிப்பு.தமிழில் முத்துராமன் ஏற்ற வேடத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்.

கே.பாலசந்தரும் ,சிவாஜியும் முதலும்..கடைசியுமாய் இணைந்த படம் எதிரொலி...படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.

அடுத்த பதிவில் 1971 படங்களைப் பார்க்கலாம்.

Wednesday, June 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 15

1969ல் வந்த படங்கள்

அன்பளிப்பு
தங்கச்சுரங்கம்
காவல்தெய்வம்
குருதட்சணை
அஞ்சல் பெட்டி 520
நிறைகுடம்
தெய்வமகன்
திருடன்
சிவந்த மண்

சிவாஜி,சரோஜாதேவி நடித்த படம்..அன்பளிப்பு..படம் தோல்வி.'வள்ளிமலை மாங்குட்டி எங்கே போறே' என்ற நல்லதொரு பாடல் இடம் பெற்ற படம்.

பாரதி நாயகியாய் நடித்தபடம் த்ங்கச்சுரங்கம்..சிவாஜி ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் துப்பறிபவராய் வருவார்.ராமமூர்த்தி  இசை அமைத்த முதல் படம்.

காவ்ல்தெய்வம்...படத்தில் பெரும்பகுதி சிவாஜி வந்தாலும்...இதில் நட்புக்காக நடித்திருப்பார்.எஸ்.வி.சுப்பையா சொந்த படம்.அவருக்கு உதவும் பொருட்டு..பணம் பெறாது நடித்தார்.

குருதட்சணை..ஏ.பி.என்., படம்
அஞ்சல்பெட்டி 520...இயக்குநர் டி.என்.பாலு நாடகமாக போட்டு..பின் அவர் இயக்கத்திலேயே படமானது.சரோஜாதேவி நாயகி.

நிறைகுடம்..முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.

கடைசியாக வந்த 3 படங்களே..வெற்றிப்படங்கள் எனலாம்.அவையே 100 நாட்கள் ஓடியவை.

தெய்வமகன்..சிவாஜி 3 வேடங்களில் நடித்திருப்பார்.

திருடன்..பாலாஜி படம்..விஜயா நாயகி.நல்ல வசூல் இப்படத்திற்கு.பாடல்கள் அனைத்தும் அருமை.

சிவந்தமண்..ஸ்ரீதர் படம்.முதன் முதலாக வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது இப்படத்துக்குத்தான்.பட்டத்து ராணி பாடலுக்கு..அதிகமாய் இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டன.

இந்தியாவின் சார்பில்..ஆஸ்கார் விருதிற்கு அனுப்பப்படும் படங்களில் முதலில் பரிந்துரை செய்யப்பட்ட படம் தெய்வமகன் ஆகும்.

இனி 1970 படங்கள் அடுத்த பதிவில்.

Tuesday, May 12, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 10

1963ல் வந்த படங்கள்

சித்தூர் ராணி பத்மினி
அறிவாளி
இருவர் உள்ளம்
நான் வணங்கும் தெய்வம்
குலமகள் ராதை
பார் மகளே பார்
குங்குமம்
ரத்தத்திலகம்
கல்யாணியின் கணவன்
அன்னை இல்லம்

அறிவாளி நீண்டநாட்கள் வெளிவராமல் இருந்த படமாதலால்..நகைச்சுவை நிறைந்த படமாய்..இருந்தும்..தோல்வியுற்ற படம்.தங்கவேலு,முத்துலக்ஷ்மி சப்பாத்தி நகைச்சுவை வயிறு புண்ணாகும் ஒன்று.

கலைஞர் வசனத்தில்..லக்ஷ்மி அவர்களின் பெண்மனம் நாவல்..இருவர் உள்ளமாக வந்தது.அருமையான பாடல்கள்..சிவாஜி,சரோஜா தேவி நடிப்பு ..படத்திற்கு வெற்றி அளித்தது.100 நாள் படம்.சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் திரையிட்ட போதும் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம்.

குலமகள் ராதை,கல்யாணியின் கணவன் ஆகிய படங்களும்..நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்றன.

ரத்தத்திலகம்..இந்திய..சீனப்போரை வைத்து வந்த படம்.

குங்குமம்...பாசமலர் படத்தை எடுத்த தயாரிப்பாளர் படம்.நல்ல பாடல்கல்..சிவாஜியின் அற்புத நடிப்பு ஆகியவை இருந்தும் தோல்விப்படம்.
அன்னை இல்லம்..சிவாஜி,தேவிகா நடித்த படம்..100 நாள் படம்.

பார் மகளே பார்..பெற்றால் தான் பிள்ளையா? என்ற நாடகம்..படமானது.100 நாள் படம்.

இந்த ஆண்டு 10 படங்கள் வந்தாலும்...4 படங்களே வெற்றி படங்களாக் அ மைந்தன எனலாம்.

1964 படங்கள் அடுத்த பதிவில்.

Saturday, May 2, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 9

1962ல் வெளியான படங்கள்

பார்த்தால் பசி தீரும்
நிச்சயதாம்பூலம்
வளர்பிறை
படித்தால் மட்டும் போதுமா
பலே பாண்டியா
வடிவுக்கு வளைகாப்பு
செந்தாமரை
பந்தபாசம்
ஆலயமணி

சிவாஜி..பீம்சிங் கூட்டணியில்..பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா? இரண்டுமே நூறு நாட்கள் படம்.தொடர்ந்து ஒரு நடிகரும்..இயக்குநரும்..பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்கள்.அவற்றில் 3 படங்கள் வெள்ளிவிழா.இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.

ஆலயமணி..கே.ஷங்கர் இயக்கத்தில்..நடிகர் பி.எஸ்.வீரப்பா எடுத்த படம்.100 நாட்கள் படம்.அருமையான பாடல்கள்.
கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும்,சட்டி சுட்டதடா..போன்ற பாடல்கள்.

இந்த வருடம் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.நயாகரா நகரம்.சிவாஜிக்கு ஒரு நாள் மேயராக பதவி அளித்து கௌரவித்தது.

மற்ற படங்கள் பிரபல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் ஆகியோருடன்..சிவாஜியின் அற்புத நடிப்பும் இருந்தும்..பிரமாத வெற்றி அடையவில்லை.

1963 படங்கள் அடுத்த பதிவில் காணலாம்.

Friday, April 17, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 8

1961ல் வந்த படங்கள்
பாவமன்னிப்பு
புனர்ஜென்மம்
பாசமலர்
எல்லாம் உனக்காக
ஸ்ரீவள்ளி
மருத நாட்டு வீரன்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்

சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி...தமிழ்த் திரை உலகிற்கே மறக்க முடியா ஆண்டு. சிவாஜியின் அமர காவியங்கள் வெளியான ஆண்டு.

பாவமன்னிப்பு...சிவாஜி..பீம்சிங் கூட்டணி...ஜெமினி, சாவித்திரி,தேவிகா,ராதா..என நட்சத்திர கூட்டம்.தவிர அனைத்து பாடல்கலும் தேன்.விஸ்வனாதன்-ராமமூர்த்தி இசை.முதன்முறையாக இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டது..இந்த படத்திற்குத்தான்.சாந்தி திரை அரங்கில் வெள்ளிவிழா கொண்டாட்டம்.தேசிய அளவில் இரண்டாம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிபதக்கம் பரிசு பெற்ற படம்.

பாசமலர்...அண்ணன் தங்கை பாசம்...இன்று பாசத்துடன் இருக்கும் அண்ணன்-தங்கைகளைப் பார்த்து அவர்கள் பாசமலர்கள்..என்று சொல்லும் அளவு அனைவரையும் பாதித்த படம்.அருமையான பாடல்கள்..வெள்ளிவிழா படம்.தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.சாவித்திரி...சிவாஜி..இருவரும் நடிக்கவில்லை...பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள்.

பாலும் பழமும்...சரோஜாதேவியுடன் நடிகர்திலகம்..நல்ல பாடல்கள்..திறமையான நடிப்பு..ஆகியவற்றிற்காக 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.

கப்பலோட்டியதமிழன்....படம் பார்த்த வா.உ.சி., குடும்பமே சிவாஜி அந்த பாத்திரத்தில்..வா.உ.சி., போலவே இருந்ததாக பாராட்டினர்.படம் ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் தரவில்லை.தோல்வி. ஆனாலும்..தேசிய அளவில் தேசிய ஒற்றுமைக்கான பட விருது பெற்றது.

மற்றபடி...ஸ்ரீதரின் புனர்ஜென்மம்,எல்லாம் உனக்காக,ஸ்ரீவள்ளி, மருதநாட்டுவீரன் ஆகியவை எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.

இந்த ஆண்டு..கடந்த இரு வருடங்களில் 5 வெள்ளிவிழா படத்தைக் கொடுத்த சிவாஜி ஆண்டு
கட்டபொம்மன்,பாகப்பிரிவினை,இரும்புத்திரை,பாவமன்னிப்பு,பாசமலர்.
சிவாஜி படத்திற்கே 3 தேசிய விருதுகள் கிடைத்த ஆண்டு.

1962 படங்கள் அடுத்த பதிவில்.

Friday, March 27, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -5

1958 ஆம் ஆண்டு வெளியான படங்கள்


உத்தமபுத்திரன்
பதிபக்தி
சம்பூர்ண ராமாயணம்
பொம்மைக்கல்யாணம்
அன்னையின் ஆணை
சாரங்கதாரா
சபாஷ் மீனா
காத்தவராயன்
பொம்மல பெள்ளி (தெலுங்கு)

உத்தமபுத்திரன் தான் இரட்டை வேடங்கள் தாங்கி சிவாஜி நடித்த முதல் படம். ஸ்ரீதர் கதை,வசனம்.நம்பியார் வில்லனாக அருமையாக நடித்திருப்பார்.யாரடி நீ மோகினி மறக்க முடியா பாடல்.படம் வெற்றி

பதிபக்தி...பீம்சிங், சிவாஜியின் முதல் கூட்டணி படம்.சாவித்திரி,ஜெமினி,ராஜம் நடித்தது.சிவாஜியின் ஜோடி எம்.என்.ராஜம்..பல அருமையான பாடல்கள்..படம் வெற்றி

சம்பூர்ணராமாயணம்..சிவாஜி நாயகன் இல்லை..என்.டி.ஆர்., ராமராகவும்,சிவாஜி பரதனாகவும் நடித்தனர்.படத்தைப் பார்த்த ராஜாஜி பரதனையேக் கண்டேன்..என சிவாஜியின் நடிப்பைப் புகழ்ந்தார்.

பொம்மைக்கல்யாணம்..ஜமுனாவுடன் நடித்தார்...படம்..தோல்வி

அன்னையின் ஆணை..வில்லனிக் ஹீரோ..சாவித்திரி நாயகி..படம் வெற்றி..அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை அருமையான பாடல் அமைந்த படம்.

சாரங்கதாரா...சிவாஜியின் 50 ஆவது படம்..6 வருடங்களில் 50 படம்..பானுமதி நாயகி..படம் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.

சபாஷ் மீனா...மாலினி கதானாயகி..படம் வெற்றி..சித்திரம் பேசுதடி..போன்ற அருமையான பட பாடல்கள் இடம் பெற்ற படம்

காத்தவராயன்...சிவாஜியின் பட எண்ணிக்கையில் ஒன்று அதிகம்...அவ்வளவுதான்

இதைத்தவிர பொம்மல பெள்ளி என்ற தெலுங்கு படமும் வந்தது.

அடுத்த பதிவு 1959 படங்கள்.