எந்திரன் திரைப்படக் கதை தன்னுடையது என 'அமுதா'தமிழ் நாடன் என்னும் எழுத்தாளர் உரிமை கொண்டாடுகிறார்.இவர் உதயம் என்னும் தமிழ் பத்திரிகையில் ஏப்ரல் மாதம் 1996ஆம் ஆண்டு எழுதிய ஜுகிபா என்னும் கதையே எந்திரன் கதை என்கிறார்.
(www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/october/291010c.asp)
இதை பைத்தியக்காரன் bazz ல் போட்டப்போது அதில் யுவகிருஷ்ணா இப்படி ஒரு பதிலைப் போடுகிறார்.
யுவ கிருஷ்ணா - எந்திரன் படத்தின் பாதி கதையின் கரு இதுதான்.
அப்படியானால் சுட்டது யார்?
ஷங்கரா - சுஜாதாவா
இது தேவையில்லை என்பதே என் கருத்து.
எந்திரன் படத்தின் கதை பல ஆண்டுகளாக தன் மனதில் இருந்தது என ஷங்கர் முன்னமேயே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
எந்திரன் படத்தில் வசனம் மட்டுமே சுஜாதா..அதுவும் மூவரில் ஒருவர். ரோபோ பற்றிய சில நுணுக்கங்களைத் தெரிந்துக் கொள்ள சுஜாதா பயன்பட்டிருப்பார் ..அவரின் பங்களிப்பு அதற்கு மேல் அப்படத்தில் இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
இந்நிலையில் இன்று நம்மிடையே இல்லாத ஒரு ஜீனியஸ்ஸை இழுத்திருக்க வேண்டாம்.
சுஜாதா தொடாத சப்ஜெக்ட் இல்லை..இன்று எந்த எழுத்தாளரிடமும்..அவர் பாதிப்பு இருப்பதை மறைக்கமுடிவதில்லை.
தவிர்த்து..சுஜாதாவின் சில படைப்புகளை..ஆங்கிலக் கதைகள் சாயல் இருப்பதாகக் கூறுவர் உண்டு.
சாயல் இருக்கும்..ஏதேனும் பாதிப்பு இருக்கும்..ஆனால் அவரிடம் 'காபி' இருக்காது.
ஆகவே, நண்பர்களே! எந்திரன் சர்ச்சையில்..அவர் பெயரை இழுக்க வேண்டாம்