உதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.
ஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.
அதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..
தி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்
ஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.
ம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.
மதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.
ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.
அவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.
அதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..
அப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.
தி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்
இன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.