Showing posts with label தமிழகம் -அரசியல் -வை.கோ. Show all posts
Showing posts with label தமிழகம் -அரசியல் -வை.கோ. Show all posts

Wednesday, March 16, 2011

இனி வைகோ என்ன செய்ய வேண்டும்..





அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ம.தி.மு.க.விற்கு இடமில்லை..

இதற்கு மேல் வைகோ இறங்கி வந்து...கொடுத்த தொகுதிகளை ஒப்புக் கொள்வார் என்று தோன்றவில்லை.அப்படியே ஒப்புக் கொண்டாலும் அது அவரது தன்மானத்திற்கு இழுக்கு.

ஆக..இந்நிலையில் வை.கோ., செய்ய வேண்டியது என்ன..

தமிழனின் முதல் எதிரி காங்கிரஸ்..காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ..அங்கெல்லாம் அதைத் தோற்கடிக்க வேண்டும்.

வை.கோ.,வின் முயற்சி அதுவாய் இருக்கட்டும்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து..அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தட்டும்..வெற்றி முக்கியமல்ல..காங்கிரஸ் தோல்வி முக்கியம்..அதைத் தன்னால் ஓரளவு செய்ய முடியும் என நிரூபிக்கட்டும்.

அப்படி போட்டியிடும் தொகுதியில்..வாங்கும் ஒவ்வொரு ஓட்டும்..விலை மதிப்பற்றது.

வை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால்..கருத்து ஒருமித்த சில சிறு கட்சிகளுடன் வை.கோ., கூட்டு சேர்வதில் தவறில்லை.

Monday, March 14, 2011

வை.கோ., என்னும் மாமனிதன்..


அரசியலில் பல தலைவர்கள், குட்டித் தலைவர்களையெல்லாம் நாம் நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால்..தான் கொண்ட கொள்கைகளை எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கும் தலைவர்களைப் பார்ப்பது அபூர்வம்.
அப்படிப்பட்ட ஒரு தலைவர் வை.கோ., எனலாம்.
அவர் எம்.பி.யாய் இருந்த போதும் சரி..இல்லாத போதும் சரி மத்திய அரசு பிரதமர்களால் மதிக்கப் பட்டவர்.வாஜ்பாயி ஆனாலும் சரி..இன்றைய மன் மோஹன் சிங்கும் சரி வைகோ வை மதிப்பவர்கள்.
வை.கோ., வும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட்ட கூட்டணி தலைமைமையில் தான் இருந்த போதும் அக்கூட்டணியை மதிப்பவர்.
அதனால் தானோ என்னவோ.. அவர் அதிகம் அவர்களால் அலைக்கழிக்கப் படுகிறார்.
2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஒதுக்கிய தொகுதி போதாது..என ஒரு சில தொகுதிகளை அ.தி.மு.க., தந்ததால் அந்த கூட்டணியில் இணைந்தார்.இன்றுவரை ஒரு சில கட்சித் தலைவர்களைப் போல இல்லாமல் தான் சார்ந்த கூட்டணித் தலைமைக்கு உண்மையாய் இருக்கிறார்.
ஆனால்..அதற்கு பலன்..இந்த நிமிடம்வரை அவருக்கு அ.தி.முக.,, உடன் தொகுதி உடன் பாடு ஏற்படவில்லை.
கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனாற் போல போனமுறை 35 தொகுதிகள் பெற்றவர்..இப்போது 25..18..12 என 10தொகுதிகளே கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.
வை.கோ.,வின் பிரச்சாரம் இந்த முறை அவசியம் தேவை என்பதை கூட்டணித் தலைமை உணரவில்லை.
வை.கோ., இப்போது என்ன செய்ய வேண்டும்..
கொடுத்த 10 தொகுதிகளை வாங்கிக் கொண்டு..அந்த 10 தொகுதிகளிலும் வென்று காட்ட வேண்டும்.
தனது முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.
எந்த கூட்டணியாய் இருந்தாலும்..ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்.இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும்..
வை.கோ., என்ற பண்பாளர், மாமனிதன் இதைச் செய்வாரா?