சமீபத்திய மூத்த பதிவரின் பதிவு ஒன்றில்...நால்வருடைய பதிவுகள்..சூடான இடுகையில் வருவது மட்டுறுத்தப் பட்டுள்ளதாக சொல்லி இருந்தார்.அவர்கள்..லக்கிலுக்,டோண்டு,கோவி.கண்ணன்,செந்தழல் ரவி என்றும் மற்றவர்களின் பதிவு மூலம் தெரிகிறது.
இவர்களில் கோவி..சொறி நாய் பற்றி ஒரு பதிவு எழுதி 'இது சூடான இடுகையில் வரும்" என்று கூறியதுடன் நில்லாது..சூடான இடுகையில்..கீழிருந்து..மேல் நோக்கி செல்வதை..இரண்டு,மூன்று ஸ்கிரீன் புகைப்படத்தை பதில் இட்டு காண்பித்தார்.
இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.
அடுத்து..சிங்கையில் தெரு நாய் என்ற ரவியின் பதிவும் சூடான இடுகையில் வந்தது.
டோண்டு, தன் பங்கிற்கு..பெயரிலிடன் ஆன ஒரு சர்ச்சையே ..தன் இடுகை சூடாவதில்லை என்பதாகக் கூறி இருந்தார்.
இவை எல்லாம் தான் உண்மையான காரணங்களா எனத்தெரியாது.
ஒரு வேளை..மூத்த பதிவர்களான இவர்கள் எது எழுதினாலும், படிக்க வருவோர் எண்ணிக்கை..அதிகமாய் இருப்பதால்,(டோண்டு சில சமயங்களில் தன் பதிவை பார்வையிடுவோர் சில வேளைகளில் 1000 தாண்டியிருக்கிறது என கூறியுள்ளார்) புது பதிவர்களுக்கு வருகை குறைவாய் இருப்பதால்..புதியவர்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தமிழ்மணம் இப்படிப்பட்ட முடிவு எடுத்திருக்குமேயாயின்....
தமிழ்மணத்திற்கு ஒரு யோசனை...
சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)
இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...
இந்த முடிவை அனைவரும் வரவேற்பர் என எண்ணுகிறேன்.