
நம் எண்ணங்களை அச்சில் பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணை..இணையத்தில் திரட்டிகளில் பார்ப்பது.
இந்த அரும் பணியை இலவசமாக பிளாக்கர்களுக்கு செய்து வருகிறது பல திரட்டிகள்.
அவற்றுள் தமிழ்மணம்,இண்ட்லி,சங்கமம்,தமிழ்வெளி,திரட்டி ஆகியவற்றின் பணி பாராட்டிற்கு உரியது.
இந்நிலையில்...சமீபத்தில்..தமழ்மணத்தில் இடுகைகளை இணைப்பதில் எனக்கு சிக்கல் இருந்தது.
அதை தமிழ்மணத்திற்கு மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன்..
செல்வராசு அவர்களிடமிருந்து..சரி பார்ப்பதாக பதில் வந்தது.இப்போது..பின் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வெகுவிரைவில் இடுகைகள் இணைக்கப்படுகின்றன.
நான் அனுப்பிய மின்னஞ்சலை ஞாபகம் வைத்துக் கொண்டு..கீழ்கண்ட மின்னஞ்சல் எனக்கு அனுப்பப்பட்டது.
'உங்களுக்கு இப்போது பிரச்சினை இல்லை என நினைக்கி்றேன்.
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.
இரா. செல்வராசு
தமிழ்மணம் உதவிக்குழு'
பதிவாளர்களுக்கு அரும் பணி ஆற்றிவரும்..தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில்..எனது பிரத்தியேக நன்றியை நண்பர் செல்வராசுவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.