Showing posts with label நிகழ்வு -அரசியல். Show all posts
Showing posts with label நிகழ்வு -அரசியல். Show all posts

Wednesday, March 23, 2011

நீங்க கோடீஸ்வரர் ஆக வேண்டுமா..?





பணத்தாசை இல்லாத மனிதன் இல்லை..

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது சொலவடை.

பரம்பரை சொத்து இல்லாமல்..ஒருவர் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆக முடியுமா?

அவர் எந்த படிப்பு படித்திருந்தாலும்..எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும்..அதிகபட்சம் இரண்டு பெட்ரூம் கொண்ட அடுக்ககக் குடியிருப்பும்..வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதில் வைப்பு நிதியிருந்து சில லட்சங்களும் கிடைக்கும்.இதனிடையே அந்த பணத்திலும் அட்வான்ஸ் வாங்கி..மகன்/மகள் படிப்பு...அவர்கள் திருமணம் ஆகியவை நடத்தியிருப்பார்.

இந்நிலையில்..ஒருவரால் தன் வாழ்நாளில்..கோடீஸ்வரனாய் ஆக முடியுமா? என்ற வினாவிற்கு..பதில்..

முடியும்...என்பதே..

எப்படியென பார்த்தோமானால்..நம் கண்ணெதிரேயே பலரை உதாரணமாகக் காட்டமுடியும்.

வாழ்நாள் என்பது அவர்களுக்கு அதிகம்..

ஐந்து வருடங்கள் போதும்..

என்ன ஒன்று..அவர்கள்..அந்தக் காலத்தில் அரசியலில் ஒரு பெரிய கட்சியில் ஈடுபட்டு..தலைமையிடம் நல்ல பெயர் வாங்கி..ஒரு எம்.பி.ஆகவோ..எம்.எல்.ஏ., ஆகவோ..அல்லது குறைந்த பட்ச மாவட்ட செயலாளராகவோ ஆனால் போதும்..

அடுத்த ஐந்து வருடங்களில் அவர் கோடீஸ்வரர் தான்..

இதைத்தான்..வேட்பு மனு தாக்கும் பல வேட்பாளர்கள் தெரிவிக்கும் சொத்து கணக்குத் தெரிவிக்கிறது.

ஐந்து வருடம் முன் ஓரிரு லட்சம் கையிருப்பு வைத்திருந்தவரின் இன்றைய சொத்து மதிப்பு...பல கோடிகள்..ஊர் பக்கம் ஏக்கர் கணக்கில் நிலம்...மனைவி..மக்கள் என அனைவருமே கோடீஸ்வரர்கள்,லேண்ட் லார்ட்ஸ் தான்.

சில நூறு ரூபாய் வருமான வரி கட்டாவிடின்..சாமான்யனை ஆயிரம் கேள்விகள் கேட்கும் வருமானவரித் துறை இவர்களை என்ன செய்யும்?

விடை தெரியாத கேள்வி தான்..

இன்னும் கொஞ்சம் நீங்கள் சாமர்த்தியசாலி என்றால்..ஒரு டீ.வி.,சேனலுக்கே உங்களால் உரிமையாளராக முடியும்.

ஆகவே நண்பர்களே..உங்கள் வாழ்நாளில் கோடீஸ்வரர் ஆகும் வழியைச் சொல்லிவிட்டேன்.

இனி மகனே உன் சமர்த்து.