Showing posts with label நிகழ்வு..அஞ்சலி. Show all posts
Showing posts with label நிகழ்வு..அஞ்சலி. Show all posts

Saturday, November 29, 2008

மும்பையில் அமைதி திரும்பியது

மும்பையில்..60 மணி நேர த்திற்கு பின்..அமைதி திரும்பியுள்ளது..தாஜ் ஓட்டல்.ஒபேராய் ஒட்டல் அனைத்தும் மீட்கப்பட்டன.

பயங்கரவாதிகளை பிடிக்க கமாண்டோ படை தில்லியிலிருந்து வந்தது.அவர்களுக்கு ராணுவ வீரர்களும்,கடற்கரை வீரர்களும் உதவினர்.

இத் தாக்குதலால் 183 பேர் பலியாயினர்..9 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.20 போலீசார்,மற்றும் 22 வெளிநாட்டவர் இறந்தவர்களில் அடக்கம்.ஒரு பயங்கரவாதி பிடிபட்டான்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் அதே நேரத்தில்...இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம்..

உயிரை பயணம் வைத்து போராடிய கமாண்டோ வீரர்கள்,ராணுவத்தினர்,கடற்படையினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறோம்..

இவர்களை அனைத்து இணைய பதிவினரும் தங்களது பதிவில் வாழ்த்த வேண்டுகிறேன்.