Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Tuesday, December 6, 2011

ஆள் மாறட்ட கேஸும்...கல்யாண சுந்தரமும்..




பத்தாம் வகுப்புத் தேர்வில்..வேறு ஒருவரை தனக்கு பதில் தேர்வு எழுத வைத்தார் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம்.அது தெரிய வர அடுத்த நாள் பரிட்சைக்கு ஆள் வரவில்லை.

அவர்மீது புகார் வர..அமைச்சர் தலைமறைவானார்..

புதுவை சட்டசபையிலும் இதனால் எதிர்க்கட்சிகள் கலாட்ட செய்தனர்.

அவருக்கு பாவம்..அமைச்சர் பதவியும் பறி போனது.தன்னை கைது செய்யாமல் இருக்க நீதி மன்றங்களை நாடி..கடைசியில் ஒரு வழியாக உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

அவரை காவல்துறை விசாரித்தது..மொத்தம் 300 கேள்விகள் கேட்கப்பட..அவர் பதில் சொன்னார்.

ஆமாம்..அவர் 300 கேள்விகளுக்கு பதில் சொன்னாரே..ஒழுங்காக பரிட்சைக்குப் போயிருந்தால்..அதிக பட்சம் 30 கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதுமே...என்று நண்பர் ஒருவர் கேட்க..நான் சொன்னேன்..

'போலீஸ் விசாரணையில் அதிகப் பட்சக் கேள்விகளுக்கு..'தெரியாது..தெரியாது' என்று பதில் சொன்னார்..அதே பதிலை அவர் தேர்வில் சொல்லியிருக்க முடியுமா? என்றேன்.

(ஆமாம்...உங்கள் பெயர்தானே கல்யாணசுந்தரம் ..என்று கேட்டிருந்தால் அதற்கும் அவர் தெரியாது என்று பதில் சொல்லியிருப்பாரோ!)

(டிஸ்கி...இந்நிலையில் பல ரர க்கள் தங்கள் தலைவரை திருவள்ளுவர் ரேஞ்சிற்கு உயர்த்துகிறார்களாம்..கேட்டால்..வள்ளுவன் எழுதிய குறள்கள் 1330..ஆனால் எங்கள் தலையிடம் கேட்கப்பட்டது 1339 கேள்விகள் என்று..அட போங்கப்பா..எதை எத்தோடு ஒப்பிடுவது...வள்ளுவனின் கற்பனையில் உதித்தவை 1330..ஆனால் இங்கோ....)


Thursday, March 31, 2011

வடிவேலு அமைச்சராகிறார்..





கடந்த சிலநாட்களாக தமிழக தேர்தல் களத்தில்..பல அரசியல் கட்சியைச் சார்ந்த தலைவர்கள், பேச்சாளர்கள் பேசினாலும்...முதன்முறையாக தேர்தல் மேடைகளில் பேச ஆரம்பித்துள்ள வைகைப்புயல் வடிவேலுவின் பேச்சைக் கேட்க கூடும் மக்களைக் கண்டு..கோபாலபுரமும், போயஸ் கார்டனும் வியப்பில் வாயைப் பிளக்கின்றனராம்.

தி.மு.க., தலைமையும்..தங்கள் கட்சிக்கு ஒரு தங்கச் சுரங்கம் கிடைத்துவிட்டாற்போல மகிழ்கிறார்களாம்.

தி.மு.க., ஆட்சி அமைத்தால்..வடிவேலு மேலவை உறுப்பினர் ஆகலாம் எனத் தெரிகிறது.

தவிர்த்து..அவர் ஆதரவை விடாமல் பற்றிக் கொள்ள நினைக்கும் தி.மு.க., அவரை சினிமாத் துறை அமைச்சராக ஆக்கவும் முடிவு செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச் செய்தியைக் கேள்விப்பட்ட விஜய்காந்த் வயிற்றெரிச்சலில்..தன் தேர்தல் பணியை நிறுத்தி வைத்துள்ளாராம்.



டிஸ்கி- ஹி..ஹி..இன்று தேதி ஏப்ரல் ஒன்னு  ..

Friday, December 5, 2008

பிரனாப் முகர்ஜியும்..இலங்கை பயணமும்..

கலைஞருடன் தில்லி சென்ற அனைத்துகட்சித் தலைவர்களும் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி பிரதமரிடம் பேசினர்.வழக்கம் போல விளக்கெண்ணெய் தரத்துடன்..நாத்தழு தழுக்க பிரதமர் அனைத்தையும் கேட்டார்.பின் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.இது செய்தி..இலங்கையில்,ப்ரனாப் ,ராஜபக்க்ஷே சந்திப்பு எப்படி என நமது சரடு நிருபர்.

ராஜ- வாங்க பிரனாப்..நாம இப்பத்தானே 15 நாட்களுக்கு முன் இந்தியாவில் சந்தித்தோம்.

பிர-ஆமாம்..ஆனாலும்..கலைஞர் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்..அவருக்காகத்தான் பிரதமர் உங்களிடம் என்னை இப்போது அனுப்பியிருக்கிறார்.

ராஜ_மும்பையில் குண்டுவெடிப்பு...(என இழுக்க)

பிர-ஆம்..அப்பாவி மக்கள் 197 பேர் மரணம்..500க்கும் மேற்பட்டோர் காயம்

ராஜ-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி..

பிர_ஆமாம்..ஆமாம்..உலநாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தூள்ளார்களே..

ராஜ-இன்னொரு நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் உங்கள் நாட்டில் புகுந்து அப்பாவி மண்ணின் மைந்தர்களை கொன்றிருக்கிறார்களே..

பிர-ஆமாம்..அது போகட்டும்..நான் வந்த வேலை..

ராஜ-தெரியும்..முதலில் வேற்று நாட்டான் உங்கள் நாட்டுக்குள் வந்து..உங்கள் மக்களை கொன்றிருக்கிறான்.அதைப்பற்றி முதலில் கவலைப் படுங்கள்.விடுத்து எங்கள் நாட்டுக்குள் தமிழர்
அழிவது பற்றி..பிறகு பேசலாம்

பிர-நீங்கள் சொல்வதும் சரி..ஆனால் பிரதமரிடம் என்ன சொல்ல..

ராஜ-போர் நிறுத்தம் இல்லை என்று சொல்லுங்கள்

பிர-கலைஞர் கேட்டால்....

ராஜ-40வருட போராட்டம் 14 நாட்களில் முடியுமா? என்று சொல்லிவிடுங்கள்.

பிர-அப்போது நான் வருகிறேன்..நம் சந்திப்பு இவ்வளவு வெற்றி அடையும் என நான் எதிர்பார்க்கவில்லை..

(பிரனாப் விடைபெறுகிறார்0

Monday, December 1, 2008

மிதக்கும் சென்னை..ஜெ தான் காரணம்..

சமீபத்தில் 4 நாட்களாக பெய்த மழையால்..சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

அதற்கான காரணம் யார் என சன் டீ.வி.நிபுணர் குழு ஆராய்ந்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அவ்வறிக்கையில் ஜெ ஆட்சியில் இருந்த காலங்களில்தான் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருந்த ஏரிகள் எல்லாம் ஆக்கிரப்பு செய்யப்பட்டு அங்கு கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன என்றும்,வடிகால்கள் பல அடைக்கப்பட்டு விட்டன என்றும் தெரிந்துள்ளது.மேலும் அம்மையார் ஒருமுறை தனக்கு தண்ணீர் ராசி உள்ளது என்று சொன்னதையும் நிருபர் குழு ஆராய்ந்து,கலைஞர் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே லாரிகணக்கில் தண்ணீரை வாங்கி கொட்டிவிட்டு ஜெ நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளது.

(கலைஞர் குடும்பமும்,சன் டி.வி.சகோதரர்களும் சுமுகமானப்பின் சன் நியூஸ் செய்தியில் இப்படி சொன்னால் ஆச்சர்யப் படத் தேவையில்லை)