
இணையதளத்தில்..என்னைக் கவர்ந்த பதிவர்களில் முதல் சில இடங்களில் இருப்பவர் கோவையைச் சேர்ந்த வாத்தியார் என அனைவராலும் அழைக்கப்படும் SP.VR.சுப்பையா ஆகும்.
இவர் வலைப்பூ..வகுப்பறை..
ஒவ்வொருவரும்...எனக்கு நூறு ஃபாலோயர்ஸ்..இருநூறு ஃபாலோயர்ஸ் என்றெல்லாம் பதிவிடுகையில்..அமைதியாக 806 பின்தொடர்பவர்களுடன் .வருகை புருந்தோர் ஐந்து லட்சம் பேர்களுடன் இவர் வகுப்பறை அமைதியாய் நடந்துக் கொண்டிருக்கிறது.
எனக்கு..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பதால்..இவர் வலைப்பூ பக்கம் போகாமலேயே இருந்தேன்.தற்செயலாய் ஒருமுறை நுழைந்த போதுதான்..அதில் கொட்டிக் கிடக்கும் மாணிக்கங்களைப் பார்த்தேன்.எவ்வளவு சின்ன..சின்ன..நீதிக் கதைகள்..கவிதைகள்..சிறுகதைகள்..கேலிச் சித்திரங்கள்..நகைச்ச்வை துணுக்குகள்..
ஜாதகம்..என்ற பன்னிரெண்டு கட்டங்களை வைத்துக் கொண்டு..எவ்வளவு சாதனைகள்..ஆங்காங்கே ஆங்கிலப் புலமையையும் காட்டி.. அமர்க்களமே இல்லாமல்..
சுப்பையா சார்..ஹேட்ஸ் ஆஃப்
இவரது சிறுகதை நூல்கள் இரண்டு வந்துள்ளது.செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்..பகுதி ஒன்று,பகுதி இரண்டு.முதல் பகுதி 20 கதைகள்.இரண்டாம் பகுதி 20 கதைகள்.இதைத் தவிர நவம்பர் முதல் வாரத்தில்..ஜோதிட நூல்கள் வருகின்றன.நாலு பாகங்கள்..
ஆம்..இதுதான் இவர் தொழிலா...
இல்லை..
செயற்கை இழைகளை சந்தைப் படுத்தும் முகவர் தொழில்(Textile marketing)...எழுத்து இவருக்கு கை வந்த கலையாய் இருப்பதால்..அதை 'சிக்' என பிடித்துக் கொண்டார்.
சூரியனுக்கு..டார்ச் அடிக்கிறேன்..என்றாலும்..ஒரு முக்கிய விஷயத்தை இங்கே கூறியே ஆக வேண்டும்..
இதுவரை இவர் இட்டுள்ள பதிவுகள் 379..அதற்கு வந்துள்ள கமெண்ட்ஸ் 14653...அடேங்கப்பா....
வாத்தியார் ..விரைவில் வகுப்பறை மாணவர்கள் 1000த்தை கடக்க வாழ்த்துகிறேன்.