Showing posts with label மொக்கை - நையாண்டி. Show all posts
Showing posts with label மொக்கை - நையாண்டி. Show all posts

Thursday, October 16, 2008

சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி?

பதிவர்கள் பதிவிடும் போதே ..அப்பதிவு சூடான இடுகையில் வர..என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிப்பதுண்டு.பதிவில் எழுதும் விஷயங்கள் பற்றி கவலைப் படுவதில்லை.மலையாள படம் தமிழில் டப் செய்யும் போது..வைக்கப்படும் தலைப்புகள் போல்..'அவளுடைய இரவுகள்''மாமனாரின் மன்மத லீலைகள்' இப்படி வைக்கலாம்.தமிழ்மணம் அனுமதிக்குமா தெரியவில்லை.ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.
எனது இடுகைகள் சில சூடான இடுகையில் வருவதுண்டு..ஆனால் அப்படி வர..இடுகை இட்டு சில மணி நேரங்கள் ஆகின்றன.ஆனால்..சில நட்சத்திர பதிவர்கள்..என்ன எழுதினாலும்..அடுத்த பத்தாவது நிமிடம் ..சூடாகி விடுகிறது.
சூடான இடுகையில் வர பதிவர்களுக்கு ஏன் ஆசை?
இப்பொழுதெல்லாம்..நாளொன்றுக்கு சராசரி 270 இடுகைகள்
இடப்படுகின்றன.நம் பதிவு வந்த அரை மணி நேரத்தில் முகப்பில் இருப்பதில்லை.யாராவது பின்னூட்டமிட்டால்..வலப்பக்கத்தில் சில நேரம் இருக்கும்..இல்லையேல் அதுவும் இல்லை.அதுவே ..பின்னூட்டம் இல்லையென்றாலும்..அதிகம் பேர் பார்த்தால்..அது சூடான இடுகை.சிறிது நேரம் பதிவு இருந்துக் கொண்டே இருக்கும்.அந்த ஆசை தான் ஒவ்வொரு பதிவரையும் அதற்கு இழுக்கிறது.
அடுத்தது..பதிவிடும் நேரம் மிக முக்கியம்.நமது மென் பொருள் வல்லுநர்களுக்கு அது அலுவலக நேரமாய் இருக்க வேண்டும்.இவர்கள்தான் பதிவுலக அச்சாணிகள்.இவர்கள் படிக்காவிட்டால்..எந்த பதிவாய் இருந்தாலும் கோவிந்தா தான்.
சிலருக்கு..தொடர்ந்து பழைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இருந்துக் கொண்டேயிருக்கின்றன.அவை..நூறு நாட்கள் 3 காட்சிகளுடன் ஓடும் படங்களாயில்லாமல்...1000 நாட்கள் பகல் காட்சி மட்டுமே ஓடும் படங்கள் போல.
என் பதிவுகள் எல்லாம் மினிமம் காரண்டி பதிவுகள் ..
இப்படி ஒரு பதிவு போட்டு...சூடான இடுக்கைக்கான தலைப்பும் வைத்து விட்டேன்.
பார்ப்போம் இது சூடான இடுகையில் வருகின்றதா என்று.