Showing posts with label வள்ளுவன் - இன்பத்துப்பால். Show all posts
Showing posts with label வள்ளுவன் - இன்பத்துப்பால். Show all posts

Monday, August 22, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -3




காலா வாடா உன்னை காலால் மிதிக்கிறேன் என்றார் பாரதி..
அந்த காலன்,எமன் எப்படியிருப்பான்...
ஆஜானுபாகுவாய்..காளை வாகனத்தில்..பாசக்கயிறுடன்..உயிர்களைப் பறிக்க வருவான்..என்றெல்லாம் பாட்டிக் கதைகள் உண்டு..
ஆனால் வள்ளுவன் எமன் எப்படிப்பட்டவன் என்று சொல்கிறார் ..தெரியுமா..?

எமன் என்பவன் பெண்ணுருவில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவனாம்.

சாதாரணமாக விஷமம் செய்யும் குழந்தைகளை பெற்றோர்கள் 'பொல்லாத எமன் ' என்று கொஞ்சுவார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதுபோலத்தான் காதலியை கொஞ்சுகிறது இக் குறள்.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)

முன்பெல்லாம் கூற்றுவன் என்கின்ற எமனை எனக்குத் தெரியாது.இப்போது தெரிந்துக் கொண்டேன்..அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

நம்மை விரும்பும் பெண்ணின் விழிப்பார்வை நம் உயிரையே எடுத்துவிடும் அளவிற்கான சக்தியைக் கொண்டது..

அடுத்த குறளிலும் கண்கள் உயிரைப் பறிக்கக் கூடியவை என்றார்..

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண் (1084)

பெண்மையின் வார்ப்படமாகத் திகழும் இப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே..ஏன்?

பெண்ணின் கண்கள் சக்தி வாய்ந்தவையாம்..

Tuesday, July 26, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?..இப்படித் தொடங்கும் ஒரு பழைய சினிமா பாடல்..
என்ன பார்வை உந்தன் பார்வை..எனை மறந்தேன் அந்த வேளை..என்ற கண்ணதாசன் வரிகளும் பிரசித்தம்.
மங்கையரின் பார்வையே ஆயிரம் கதைகள் சொல்லுமாம்..
ஆனால் வள்ளுவனுக்கு மங்கையரின் பார்வை எப்படியிருக்கிறதாம்..தெரியுமா..?
காதலியின் பார்வை ஒரு படையே தன்னைத் தாகுவது போல இருக்கிறதாம்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடம் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்பி நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு சேனையுடன் வந்து என்னைத் தாக்குவது போல இருந்தது..

Wednesday, July 20, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் - 1






உனதழகு

வாட்டுது

என்னை


வண்ண

மயிலாள்


உனைக்

காணின்


மயங்கா

மனமும்


மயங்கிடும்

எனில்


நான்

எம்மாட்டு


இது

சாதாரணன் எழுதுவது...


இதைத்தான்

வள்ளுவன் இன்பத்துப் பாலில் முதல் அதிகாரமான தகை அணங்குறுத்தல் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்லியுள்ளார்.



அணங்குகொல் ஆய்மயில்  கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ!! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்)