Monday, January 26, 2009

சென்னை பதிவர் சந்திப்பு..25-1-09

நான் சென்ற முதல் பதிவர் சந்திப்பு..நண்பர் கோவி.யும் சிங்கையிலிருந்து வந்ததால்..தவற விடாமல் சென்றேன்.

முதலில்..எதிர்பாராது..லக்கிலுக்..உங்க நாடக அனுபவத்தை சொல்லுங்க..என சொல்லிவிட...அதற்கு தயாராக போகாத நான்..இன்று சபாக்க்ளும்..நாடகக் குழுக்களும் உள்ள நிலைச் சொன்னேன்.மேலும்..எனது 'சொல்லக்கொதிக்குது நெஞ்சம்' என்ற விருது பெற்ற நாடகம் பற்றி சொல்லி..அதுவும் சாதாரணமாகத்தான் போயிற்று..என்றும்..அதை புத்தகமாக வெளியிட முயன்றும்..பதிப்பாளர்களிடமிருந்து..சரியான பதில் இல்லை என்றும் தெரிவித்தேன்.

உடன் பத்ரி..சரியான மார்கெட்டிங்க் வேண்டும் என்றார். அமைச்சூர் குழுக்கள் நாடகம் போடுவதே சிரமம்...இதில்..மார்கெட்டிங்கிற்கு செலவு பண்ணமுடியா நிலை.

தமிழ் நாடக மேடைப் பற்றி..ஒரு விரிவான பதிவிட உள்ளேன்.

அடுத்து..புத்தக கண்காட்சியில் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பற்றி பேச்சு வந்த போது..அந்த இடம் பபாசி இடம்..ஆகவே பிரச்னை பண்ண விரும்பவில்லை..என்றார் பத்ரி.

இந்த சந்திப்பில்..தெரிந்துக் கொண்ட ஒரு விஷயம்...சுனாமி வரும் அறிகுறி தெரிந்ததும்..கடல் கரையை விட்டு..ஒரு கிலோ தள்ளிப் பொய்விடவேண்டும்..என்றும்...மீனவர்கள்..கடலில் ஒன்று அல்லது இரண்டு கிலோ மீட்டர் சென்று விட்டால்..பாதிப்பு இருக்காதாம்.சுனாமியில் உழைத்த சுகாதாரத்துறைyai அமெரிக்கா பாராடி..அங்கே கத்ரீனா புயல்,வெள்ளம் வந்தபோது..இவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இந்த சந்திப்புக்கு வந்திருந்த பதிவர்கள்
லக்கிலுக்,பத்ரி,அதிஷா,நர்சிம்,வெண்பூ,அக்னிபார்வை,முரளிகண்ணன்,கேபிள் ஷங்கர்,பாலபாரதி,லக்ஷ்மி,டோண்டு,கோவி,புரூனோ..விஜய் ஆனந்த்..(என் நினைவிற்கு வந்தவரை)மற்றும் வந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)

வந்தவர்களுக்கு..கோக்..கொடுக்கப்பட்டது.பின் அதிஷா..அனைவருக்கும் சாக்லெட் கொடுத்தார்.சந்திப்பு முடிந்ததும்,,அனைவரும்..டீ சாப்பிட்டுவிட்டு கலைந்தோம்.

இந்த சந்திப்பில் ஒரு முக்கிய விஷயம்..அறிந்தேன்..

கூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று.

27 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்துறை கணேஷ் வந்திருந்தார்

கோவி.கண்ணன் said...

//கூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று.//

இந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ? :)

அட என்ன எல்லோரும் கீழே இறங்கிப் போறாங்களேன்னு சென்று பார்த்தால் எல்லோரும் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
:)

Cable சங்கர் said...

பின்னூட்டம் போட்டுட்டன் சார்..

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நான் கலந்துக்காத முதல் பதிவர் சந்திப்பு இது :(

எம்.எம்.அப்துல்லா said...

//..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)
//

க்கும் நீங்களுமாஆஆஆஆ??

முரளிகண்ணன் said...

நல்ல தொகுப்பு

dondu(#11168674346665545885) said...

//அட என்ன எல்லோரும் கீழே இறங்கிப் போறாங்களேன்னு சென்று பார்த்தால் எல்லோரும் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
:)//
அதுவும் இது சம்பந்தமாக என்னை கேள்வி கேட்டு மாட்டிக் கொண்டவர் பண்டோரா பெட்டியை திறந்தவர் ரேஞ்சில் பேய்முழி முழித்தார். :))))))))
பார்க்க: http://en.wikipedia.org/wiki/Pandora's_box

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

டோண்டு சார் அடுத்த முறை இஸ்ரேலை விட்டு விட்டு "சோ" பற்றி சொல்லிப்பாருங்கள். :-))

SP.VR. SUBBIAH said...

//////கூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று. //////

அடப்பாவமே! அவருக்கு இப்படி ஒரு கெட்ட பெயரா?
எதைப் பேசினாலும் அவர் சுவையாகப் பேசுவார் என்று அல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்!

ஏன் இப்படி வாரி விட்டிருக்கிறீர்கள் நண்பரே!:-)))))0

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
//கூட்டம் கலைய வேண்டுமானால்..டோண்டுவை இஸ்ரேல்..பற்றி பேச சொன்னால் போதும் என்று.//

இந்த மேட்டர் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ? :)

அட என்ன எல்லோரும் கீழே இறங்கிப் போறாங்களேன்னு சென்று பார்த்தால் எல்லோரும் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.//
:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Cable Sankar said...
பின்னூட்டம் போட்டுட்டன் சார்..//

நன்றி Cable Sankar

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நான் கலந்துக்காத முதல் பதிவர் சந்திப்பு இது :(//


ஆமாங்க..உங்களையும்..போண்டாவையும் ரொம்ப எதிர்ப்பார்த்தேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எம்.எம்.அப்துல்லா said...
//..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)
//

க்கும் நீங்களுமாஆஆஆஆ??//


என்ன செய்யறது..ஊருடன் ஒத்து வாழ ஆசை அதுதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி முரளிகண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// dondu(#11168674346665545885) said...
//அட என்ன எல்லோரும் கீழே இறங்கிப் போறாங்களேன்னு சென்று பார்த்தால் எல்லோரும் அதைத்தான் சொல்லிக் கொண்டு இருந்தனர்.
:)//
அதுவும் இது சம்பந்தமாக என்னை கேள்வி கேட்டு மாட்டிக் கொண்டவர் பண்டோரா பெட்டியை திறந்தவர் ரேஞ்சில் பேய்முழி முழித்தார். :))))))))
பார்க்க: http://en.wikipedia.org/wiki/Pandora's_box

அன்புடன்,///


விக்கீபீடியா போய் பண்டோரா பாக்ஸ் பத்தி படிச்சேன்.நன்றி டோண்டு சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வடுவூர் குமார் said...
டோண்டு சார் அடுத்த முறை இஸ்ரேலை விட்டு விட்டு "சோ" பற்றி சொல்லிப்பாருங்கள். :-))///


குமார் ,உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கொலைவெறி...பதிவர் சந்திப்பு...இரவு முழுதும் நடக்கணும்னு ஆசையா?
:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SP.VR. SUBBIAH said... அடப்பாவமே! அவருக்கு இப்படி ஒரு கெட்ட பெயரா?
எதைப் பேசினாலும் அவர் சுவையாகப் பேசுவார் என்று அல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன்!//

நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன்..

Athisha said...

:-)
நன்றி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// அதிஷா said...
:-)
நன்றி சார்//

வருகைக்கு நன்றி அதிஷா

மங்களூர் சிவா said...

போண்டா இல்லையா சந்திப்பில்????

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
போண்டா இல்லையா சந்திப்பில்????//

:-(((((((((

வால்பையன் said...

//வந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)//

நான் சந்திப்பிற்கு வரவில்லை
(பின்னூட்டம் போட இதுவும் ஒரு வழி)

குடுகுடுப்பை said...

ஏன் இஸ்ரேல் மேல எல்லாருக்கும் அவ்வளவு பாசமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வால்பையன் said...
//வந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்..(பின்னூட்டம் வர இது ஒரு வழி)//

நான் சந்திப்பிற்கு வரவில்லை
(பின்னூட்டம் போட இதுவும் ஒரு வழி)//
நன்றி வால்பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
ஏன் இஸ்ரேல் மேல எல்லாருக்கும் அவ்வளவு பாசமா?//
எல்லோருக்கும் டோண்டுமேல பாசம்

அ.மு.செய்யது said...

இஸ்ரேலைப் பற்றி முதன் முதலில் டோண்டுவிடம் கேள்வி கேட்டது
நான் தான்.

புதிய பதிவர் என்பதால் ஒரு ஆர்வக் கோளாறில் கேட்டுவிட்டேன்.
இது இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று எனக்கு அப்போது
தெரியாது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அடடா..அவ்வளவு சீரியஸ் ஆனவரா நீங்க?இது எல்லாம் வெறும் ஜோக்கா எடுத்துக்கங்க..அ.மு.செய்யது