Wednesday, January 7, 2009

அப்பா........(சிறுகதை)

'செல்வம்...நீ அலுவலகத்திற்கு கிளம்பறதுக்கு முன்னால ஐநூறு ரூபாய் கொடுத்துட்டுப்போ...மருத்துவர் கிட்டே போகணும்..இராத்திரி ஆரம்பித்த நெஞ்சுவலி இன்னமும் இருக்கு' என்றார் சுந்தரேசன் மகனிடம்.
அப்பா....
'மாதக்கடைசி..பணத்துக்கு நான் எங்கப்பா போவேன்?'சட்டைபையைத் தடவிப்பார்த்துக் கொண்டே சொன்னான் செல்வம்.

நாளைக்கு அவனது திருமணநாள்..திருமணமாகி பத்து ஆண்டுகள் முடிந்திருந்தன.

'புடவை ஒன்று வாங்கிக்கொடுத்து மனைவியை நாளைக்கு இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கவேண்டும்'என்று எண்ணி ஆயிரம் ரூபாயை சட்டைப்பையில் பத்திரமாய் வைத்திருந்தான்.

'என்னடா..செல்வம் இப்படிச்சொல்றே..இனிமே நெஞ்சுவலின்னா..தாமதிக்காம உடனே எங்கிட்டே வரணும்னு..மருத்துவர் போன முறையே சொல்லியிருக்காரே..மறந்துட்டியா?'

'மருத்துவருக்கு என்னப்பா..அப்படித்தான் சொல்வார்.இப்ப எல்லாம் தலைவலின்னு போனால் கூட ..எக்ஸ்ரே எடுன்னு நம்பகிட்டே இருக்கிற பணத்தையெல்லாம் கறந்துடுவார்..கொஞ்சம்
பெருங்காயத்தூளை வாயில் போட்டு..கொஞ்சம் மோர் குடிங்க சரியாகிவிடும்...'என்று கூறியபடியே அலுவலகம் கிளம்பினான் செல்வம்.

மாலை மணி மூணு இருக்கும்.

அலுவலகத்திற்கு செல்வத்தின் மனைவி தொலைபேசினாள்'அப்பா..மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்..உடனே வாங்க..'

அவன் வீடு போய் சேர்வதற்குள்..சுந்தரேசன் கதை முடிந்து விட்டது.

இறுதிக் காரியங்கள் எல்லாம் முடிந்ததும்..அப்பாவுடையது என்று சொல்லிக்கொள்ள இருந்த மரப்பெட்டி ஒன்றைத்திறந்தான்.

அதில் சில தேவையில்லாத பழுப்பேறிய காகிதங்கள்..அம்மா போட்டிருந்த சில கண்ணாடி வளையல்கள்..அப்புறம்..அவன் குழந்தையாய் இருந்தபோது போட்டிருந்த சில சட்டைகள்..பிறகு..அது என்ன நீல நிறத்தில் .. சிறு புத்தகம் போல்...

எடுத்தவன் அதிர்ந்தான் ...வீட்டின் அருகாமையில் இருந்த ஒரு வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகம்.

சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.

14 comments:

கோவி.கண்ணன் said...

//சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.//

தேவைக்கு அதிகமான பாசத்தினால் தான் நம்மவங்க பாழாப்போறாங்க.

sayrabala said...

pain full touch

நசரேயன் said...

நல்லா இருக்கு ஐயா

T.V.Radhakrishnan said...

////கோவி.கண்ணன் said...
//சுந்தரேசன்..சிறிது சிறிதாக நாற்பதாயிரம் ரூபாய் வரை..தன் மகனை வாரிசுதாரராகப் போட்டு பணம் சேர்த்திருந்ததை அது காட்டியது.//

தேவைக்கு அதிகமான பாசத்தினால் தான் நம்மவங்க பாழாப்போறாங்க.///


பாசம்தான் வாழவைக்கிறது..கோவி

T.V.Radhakrishnan said...

நன்றி sayrabala

மதிபாலா said...

நெஞ்சைப் பிழிந்த சிறுகதை அய்யா.. தன் இரத்தத்தையும் கொஞ்சம் சோற்றில் கலந்து போட்டுத்தான் பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால் ஒரளவு வளர்ந்ததும் இந்த பிள்ளைகள் பெற்றோர்களை நடத்தும் விதமும் , ஓரமாக் கெட என்ற புறக்கணித்தலும் , என்ன இந்த கெழம் எப்ப பார்த்தாலும் தொணதொணக்குது என்ற புலம்பலையும் செய்யும் இளைஞர்களே , உங்கள் தாய் நீங்கள் சின்ன வயதில் எப்போதும் அழுது கொண்டிருந்த காரணத்தால் உங்களை புறக்கணித்திருந்தால் இன்று நீ நிம்மதியாக இருக்க முடியுமா????

உண்மையில் நாம் சிந்திக்க வேண்டிய விடயமிது.....

சிந்திக்க வேண்டியதொரு விடயத்தை அற்புதமாக வடிவமைத்து சிறுகதையாக்கியிருக்கிறீர்கள்.....

நன்றிகள் பல.

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி மதிபாலா

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி
நசரேயன்

மணிகண்டன் said...

நல்லா இருந்தது கதை........

நான் என்னோட ப்ளோக்ல ஒரு சிறுகதை எழுதி இருக்கேன். ! படிச்சி பாத்துட்டு, காரி துப்பிட்டு போங்க !

T.V.Radhakrishnan said...

நன்றி மணிகண்டன்

ச்சின்னப் பையன் said...

நல்லா இருந்தது கதை........

T.V.Radhakrishnan said...

நன்றி sathya

குடுகுடுப்பை said...

சூப்பர்...

நமக்கு நாமே திட்டமும் வேணும்ங்கிறது
நல்லாவே தெரியுது.

T.V.Radhakrishnan said...

நன்றி
குடுகுடுப்பை