Thursday, January 8, 2009

நான் ராமதாஸை ஆதரிக்கிறேன்

திருமங்கலம் இடைத்தேர்தல் இன்ரு.வாக்குப்பதிவு 70 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

தி.மு.க.விற்கு...மக்கள் தங்கள் பக்கம் என நீருபிக்க வேண்டியது கட்டாயம்..ஏனெனில்..நடப்பது அவர்கள் ஆட்சியாய் இருப்பதால்.

அ.தி.மு.க.விற்கோ..ஜெயித்தால்...தி.மு.க.ஆட்சியை மக்கள் விரும்பவில்லை..என்ற ஆயுதத்தை கையில் எடுக்கலாம்.

மூன்றாவதாக இருக்கும் விஜய்காந்திற்கோ..தன் கட்சியின் வாக்கு சதவீகிதம் தெரிந்துக்கொள்ள ஆசை.

சரத்குமாருக்கோ...ஒரு கணிசமான அளவு ஓட்டுக்கள் வாங்கிவிட்டால்..அதைவைத்து..ஏதேனும் ஒரு திராவிட கட்சியுடன் கூட்டு வைத்து..குடும்ப உறுப்பினர்கள் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.ஆகும் கனவு.

காங்கிரஸிற்கோ..வரும் பாராளுமன்ற தேர்தலில்..யார் முதுகில் சவாரி செய்யலாம்..என தீர்மானிக்கும் தேர்தல்.

இதற்கு இவர்கள் கடந்த சிலநாளில்..செலவழித்தகோடிக்கணக்கான பணம்...அடிதடியில் காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை...தேர்தல் கமிஷனிடம் கொடுக்கப்பட்ட..நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள்,காவல்துறை,ராணுவத்தினர் குவிப்பு..அரசு செலவழிக்கும் மக்கள் வரிப்பணம்..இத்தியாதி...இத்தியாதி...

ஒரு இடைத்தேர்தல் தேவையா..என்பதே கேள்வி.

பொதுத்தேர்தலின் போது..தொகுதி மக்கள் ஒரு கட்சியை சார்ந்த வேட்பாளரை 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்கிறார்கள்.இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.இதனால் அனாவசிய செலவுகள் கூட குறையும்.பிறக்கும் குழந்தைகளுக்கு பணம் கொடுப்பது.லட்டுக்குள் மூக்குத்தி ஆகியவைக் களுக்கான செலவும் இல்லை.இந்த விஷயத்தில்.... ராமதாஸிற்கு என் முழு ஆதரவை தெரிவித்துக்
கொள்கிறேன்

10 comments:

கோவி.கண்ணன் said...

//இடையே அந்த வேட்பாளர் மறைந்தால்...அவர் சார்ந்த கட்சிக்கே.உரிமம் கொடுத்து...அவர்கள் யாரையேனும் அவ்விடத்திற்கு தேர்ந்தெடுக்க சொல்லலாம்.//

மக்கள் கட்சிக்காக மட்டுமே ஓட்டுப்போடுவதாக இருந்தால் சொல்வது சரி, ஆனால் பல இடங்களில் வேட்பாளருக்காகத் தான் ஓட்டே விழுகிறது. அது போல் ஒரு விதி இருந்தால் அந்த வேட்பாளர் கட்சியால் கட்டம் கட்டப்பட்டால் மக்கள் ஏமாற்றம் அடைவார்கள். அது மட்டுமில்லாமல் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படும் போதே கட்சித்தலைமைகள் பதவி விலகல் கடிதத்தையும் கையெழுத்தோடு வாங்கி வைத்துக் கொள்வார்கள் (அம்மாவின் நடைமுறை)

இந்த சட்டம் கட்சிகளுக்கோ, வேட்பாளர்களுக்கோ, மக்களுக்கோ பயனில்லை, கட்சித்தலைவர் கண்ணாமூச்சு ஆட பயன்படும். தலித் எழில்மலையிடம் மருத்துவர் இராமதாஸ் இந்த சட்டத்தைப் பற்றி பேசுவது வியப்பு இல்லை.

எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் ஆட்சி சட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவருக்கே உரிமை. கட்சி செல்வாக்குகளினால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

நசரேயன் said...

நல்லது நடந்தா சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///பல இடங்களில் வேட்பாளருக்காகத் தான் ஓட்டே விழுகிறது//.
வேட்பாளருக்காக ஒட்டு என்றால்..காமராஜரும்,அண்ணாவும் தோற்றது ஏன்? பூலாந்தேவி போன்றோர் வெற்றி பெற்றது எப்படி?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கட்சி செல்வாக்குகளினால் அவர்கள் நிறுத்தும் வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை//

:-))))))))))

மணிகண்டன் said...

************ வேட்பாளருக்காக ஒட்டு என்றால்..காமராஜரும்,அண்ணாவும் தோற்றது ஏன்? பூலாந்தேவி போன்றோர் வெற்றி பெற்றது எப்படி *************

உங்களோட வாதம் புரியல. ஏன் இவங்க தோக்ககூடாது ? ஏன் பூலான்தேவி ஜெயிக்ககூடாது ?

இறந்தா மட்டும் அந்த கட்சியல உள்ள வேறு ஒருத்தருக்கு கட்சி தலைமை சான்ஸ் கொடுக்கும்ன்னு சட்டம் கொண்டு வந்தா, பணம் கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் மட்டும் தான் போகும் (சிகாகோல ஒபாமா சீட் மாதிரி ). அதுவே தேர்தல் வச்சா, தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சி பணம் கிடைக்கரதுனால. மத்த எல்லாருக்கும் பொழுதுபோக்கு. என்ன வன்முறை மட்டும் இல்லாம இருந்தா சூப்பர். வாரம் ஒரு தேர்தல் வந்தா கூட ஜாலி தான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மக்கள் கட்சிக்காக மட்டுமே ஓட்டுப்போடுவதாக இருந்தால் சொல்வது சரி, ஆனால் பல இடங்களில் வேட்பாளருக்காகத் தான் ஓட்டே விழுகிறது//

//வேட்பாளருக்காக ஒட்டு என்றால்..காமராஜரும்,அண்ணாவும் தோற்றது ஏன்? பூலாந்தேவி போன்றோர் வெற்றி பெற்றது எப்படி?//

மணி புரிகிறதா?

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...

வேட்பாளருக்காக ஒட்டு என்றால்..காமராஜரும்,அண்ணாவும் தோற்றது ஏன்? பூலாந்தேவி போன்றோர் வெற்றி பெற்றது எப்படி?
//

நீங்கள் எதிர்ப்பார்பது கட்சித் தொண்டர்களுக்கு பொருந்தும், மக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. தங்களுக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுக்கும் போது எதிர்த்து நிற்பவர் காமராஜரா அண்ணாவா என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். இதுதான் நிர்பந்தம் எதுவுமில்லாத ஜனநாயகம், மற்றபடி காமராஜரையும் அண்ணாவையும் என்றுமே தோற்கடிக்கக் கூடாது என்று நினைத்தால் அது தலைமீதான அடிமைத்தனம். அந்த தொகுதி மக்களை பாராட்டுகிறேன்

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...

வேட்பாளருக்காக ஒட்டு என்றால்..காமராஜரும்,அண்ணாவும் தோற்றது ஏன்? பூலாந்தேவி போன்றோர் வெற்றி பெற்றது எப்படி?
//

அம்மாவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை. அம்மா மக்கள் விரோதியா ?

என்னுடைய சீரியஸ் கண்டனம் !
:)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

அம்மா..ஜெயிப்பதுதான் ஆச்சர்யம்..கோவி