Tuesday, January 13, 2009

தமிழனுக்கு மத்திய அரசின் ஓர வஞ்சனை..

கடந்த நவம்பர் மும்பை குண்டுவெடிப்பில்...பாகிஸ்தானுக்குள்ள தொடர்பால்..இந்திய கிரிக்கட் குழு பாகிஸ்தான் செல்வதை.இந்திய அரசு தடை விதித்தது.

இது பாராட்டபட வேண்டிய முடிவு என எல்லா ஊடகங்களும் பாராட்டு தெரிவித்தன.

இந்த நிலையில்..இந்திய கிரிக்கட் குழு அடுத்த மாதம் இலங்கை செல்கிறது.அங்கு 5 ஒரு நாள் போட்டியும்..ஒரு 20 ஓவர்கள் போட்டியும் நடைபெற இருக்கிறது.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்..இலங்கைக்கு.. பலமுறை முதல்வர் கூறியும்...வாய் மூடி மௌனமாய் இருக்கும் மத்திய அரசு..உண்மையில் அங்கு வாழ் தமிழர் மேல் அக்கறை கொண்டதாய் இருக்குமேயாயின்..அங்கும் இந்திய குழுவை அனுப்பாமல் தடை செய்ய வெண்டும்.

மத்திய அரசு செய்யுமா?

முதல்வர் இதை வலியுறுத்துவாரா?

2 comments:

மணிகண்டன் said...

இத எழுத கொஞ்சம் கடியா தான் இருக்கு. ஆனாலும் இலங்கை தமிழர்கள் இந்தியர்கள் கிடையாதே ! அதுனால இந்திய அரசாங்கத்த திட்டாதீங்க. முதல்வரையும் கேள்வி கேக்காதீங்க. பதவில இருக்கும்போது பிரச்சனைகளை பலவித கோணத்தோடு பாக்கணும்.

ஒண்ணுத்துக்கும் உபயோகம் இல்லாத கிரிக்கெட் நிறுத்தி என்ன பயன் ? இந்தியாவால இப்ப இருக்கற சூழ்நிலைல பாகிஸ்தான் மேல வேற எந்த நடவடிக்கையும் எடுக்க முடியல. அதுனால மக்களோட கோவத்த திசை திருப்ப கிரிக்கெட்டை நிறுத்தறாங்க. ஆனா இலங்கைல இந்தியா முயற்சி செஞ்சா ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரமுடியும். அத செய்ய சொல்லி கேளுங்க ! அதுக்கு முதல்வர முனைப்போட செயல்பட சொல்லுங்க. மத்திய அரசாங்கத்த கேள்வி கேளுங்க. அத விட்டுட்டு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நம்ம எதிர்ப்பை பல வழிகளில் மத்திய அரசுக்கு புரிய வைச்ச்ட்டோம்.இதற்கும் குரல் கொடுப்போம்..ஏனெனில் நம் குரலுக்கு அங்கு மதிப்பில்லை. மணி..வஞ்சப்புகழ்ச்சி கெள்விபட்டு இருக்கீங்களா?