இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பப்படுவதை கண்டித்தும்..போர் நிறுத்தம் கோரியும்...தமிழக அரசியல் கட்சிகளும்..அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந் நிலையில்..கடந்த மாதம் 4ம் நாள் கலைஞர் தலைமையில்..அனைத்துக்கட்சி தலைவர்களும் ..பிரதமரை சந்தித்து...போர் நிறுத்தத்தை வலியுறுத்தினர்.பிரதமரும்..பிரணாப் முகர்ஜியை இது விஷயமாக இலங்கை அனுப்புவதாகக் கூறினார்.
அப்படி உறுதிமொழி கொடுத்தும் 45 நாட்களுக்கு மேல் வாளாயிருந்து விட்டு..வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனனை இலங்கை அனுப்பியுள்ளார் பிரதமர் .தமிழன் உயிர்தானே..அமைச்சர் எதற்கு...அதிகாரி போதும் என எண்னியிருப்பார் போலும்.
இதற்கிடையே..சிவசங்கர் மேனன்..அடுத்த மாதம் நடைபெற உள்ள சார்க் மகாநாடு பற்றியும்,வெளியுறவுத் துறை அமைச்சர்களுடனான மாநாடு குறித்தும்..இலங்கை அதிபருடன் சிவசங்கர் பேசுவார் என தெரிகிறது.
சிவசங்கர் மேனன்..எதற்கு செல்கிறார் என்று பாருங்கள்...மத்திய அரசு...தமிழன் என்ற குழந்தை அழாமல் இருக்க லாலிபாப் காட்டுகிறது.
நேற்று முதல் ..இலங்கையில் போர் நிறுத்தம் கோரி திருமாவளவன் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்னு அவர்கள் பேசுகையில்..இப்பிரச்னையில் இந்திய அரசு கல் போல உள்ளது..கல் என்றாலும் தூக்கி எறியலாம்..ஆனல் இது செத்த பிணமாய் உள்ளது என்று கூறியுள்ளார்.
உண்மைதான்..பிணத்திடம்...தமிழர் உயிர்களைக் காப்பாற்று ..என்றால்..அதனால் என்ன செய்ய முடியும்.?!
13 comments:
தலைப்பில் சிறு பிழை,
செத்தால் தான் பிணம், செத்த பிணம் என்று ஒன்று இல்லவே இல்லை !
:)
நாட்டில் இன்று உயிருடன் நடமாடும்..பிணங்களும் இருக்கின்றனவே..கோவி..
பிணம் தூக்கிகளுக்கு பிணத்தை எப்போது இறக்கிவைத்து எரிப்பதாக உத்தேசம். இங்கே நாறிய பிறகா அல்லது அங்கே நாறிய பிறகா?
பிணம் தூக்கிகளுக்கு பிணத்தின் ஆதரவில்தான் காலம் ஓடுகிறது..என்ன செய்வது?
உயிரோடு இருக்கும் (பிணத்தை சுமக்கும்)பிணம் தூக்கிகள் உயிரில்லாத பிணத்திடம் ஏதாவது செய்துகொடுக்க மாட்டாயா என்று கெஞ்சுவதும் உயிரில்லாத பிணத்தை வாய்க்கு வாய் திட்டுவதும் பகுத்தறிவுக்கு ஒத்துக்கொள்ளும் காரியங்களா?
சந்தர்ப்பங்களும்..ஆதாயங்களுமே..பகுத்தறிவு என்றால் என்ன என்பதை தீர்மானிப்பவை.
நாம்,அலறுவதும்,ஆதங்கப்படுவதும் மட்டும்
போதாது.கரு,கரு என எண்ணத்தில் வைத்துக்கொண்டு இந்திய வல்லாண்மையை
வஞ்சிக்கக்கற்கவேண்டும்.
வருகைக்கு நன்றி இறைகற்பனைஇலான்
உண்மைதான்
அம்மையாரின் பழி வாங்கும் படலத்திற்கு,மவுன மோகனும்,மலையாள பகவதிகளும் துணை போகிறார்கள்.
மற்றதெல்லாம் ஏமாற்று வேலை.
மத்திய அரசு நிருவனங்கள் நட்க்காமல் மூடப்பட வேண்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவர்களுக்குத் தெரியாது.
தெரிந்த தங்கபாலு எடுத்துரைக்க வேண்டும்,அல்லது அவ்ருடைய எதிர்காலம் சேர்ந்து எரிந்து விடும்.
//இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவர்களுக்குத் தெரியாது.
தெரிந்த தங்கபாலு எடுத்துரைக்க வேண்டும்,அல்லது அவ்ருடைய எதிர்காலம் சேர்ந்து எரிந்து விடும்///
சரியாகச் சொன்னீர்கள், இந்தி எதிர்ப்பு போல் ஒன்று தேவை தற்போது...
///Thamizhan said...
அம்மையாரின் பழி வாங்கும் படலத்திற்கு,மவுன மோகனும்,மலையாள பகவதிகளும் துணை போகிறார்கள்.
மற்றதெல்லாம் ஏமாற்று வேலை.
மத்திய அரசு நிருவனங்கள் நட்க்காமல் மூடப்பட வேண்டும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவர்களுக்குத் தெரியாது.
தெரிந்த தங்கபாலு எடுத்துரைக்க வேண்டும்,அல்லது அவ்ருடைய எதிர்காலம் சேர்ந்து எரிந்து விடும்.///
சரியாகச் சொன்னீர்கள்
///BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
//இந்தி எதிர்ப்புப் போராட்டம் அவர்களுக்குத் தெரியாது.
தெரிந்த தங்கபாலு எடுத்துரைக்க வேண்டும்,அல்லது அவ்ருடைய எதிர்காலம் சேர்ந்து எரிந்து விடும்///
சரியாகச் சொன்னீர்கள், இந்தி எதிர்ப்பு போல் ஒன்று தேவை தற்போது///
repeateyyyyyyyy
Post a Comment