Sunday, January 11, 2009

வருங்கால முதல்வர்கள் தோல்வி..

திருமங்கலம் இடைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றிப் பெற்றது.தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான்..39266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.2011ல் தாங்கள் தான் முதல்வர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நடிகர்கள் கட்சி வேட்பாளர்கள் படு தோல்வி அடைந்தனர்.

இவ் வெற்றிப் பற்றி..நமது சரடு நிருபருக்கு தலைவர்கள் அளித்தப் பேட்டி.

கலைஞர் - இவ் வெற்றி கடந்த 2 1/2 ஆண்டுகளான தி.மு.க. ஆட்சிமேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் ,பொங்கல் திருநாளாம் தமிழ்புத்தாண்டுக்கு எனக்களித்த பரிசு.

ஜெ- இத் தேர்தலில் அராஜகம் தலை விரித்தாடியது.பணம் வினியோகிக்கப்பட்டது.அரசு இயந்திரங்கள் தவறாக செயல் பட்டன.இது குறித்து கூடிய விரைவில் வழக்கு தாக்கல் செய்வேன்.

விஜய்காந்த்- இத் தேர்தலில் தி.மு.க.தோல்வி அடைந்துள்ளது.தி.மு.க.,தேர்தல் பொறுப்பாளர் மு.க.அழகிரி 50000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறுவோம் என்றார்.ஆனால்..வெற்றி வாக்கு வித்தியாசம் 39266 தான்..ஆகவே தி.மு.க., 10734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பதே உண்மை.எங்கள் கட்சியைப் பொறுத்த மட்டில் 8 சதவிகிதம் மக்கள் ஆதரவு தொடர்கிறது.

ராமதாஸ்- பா.ம.க., நடுனிலை வகித்தாலும்...எங்கள் கட்சியினர்கள் வாக்கு தி.மு.க.விற்கு விழுந்ததால் தான் வெற்றிப் பெற்றனர்.

காங்கிரஸ்-இவ் வெற்றி அன்னை சோனியாவிற்கு கிடைத்த வெற்றி.மக்கள் சோனியா பக்கம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறோம்.

கம்யூனிஸ்ட்டுகள்-விரைவில் பொலிட்பீரோ கூடி..கூட்டணிப் பற்றி முடிவெடுப்போம்.,

சரத்குமாரை தொடர்பு கொள்ளமுடியவில்லை.

10 comments:

கோவி.கண்ணன் said...

:) நானும் இதே மேட்டர வச்சு காமெடி பண்ணி இருக்கேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனி பதிவிடுமுன் நாம் பேசிக்கொள்வது முக்கியம் என எண்ணுகிறேன் கோவி
:)))

விடுதலை said...

makkalum jananayagamunthan thoilvi adainthullathu thimuka panamum,athikaramum vetriyai solvatharkku ungalukku vetgam illai

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்.கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி விடுதலை

குடுகுடுப்பை said...

நாங்கள் தொடர்ந்து தளம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாரோடும் போட்டி போட்டால்தானே தோற்கமுடியும்.

மணிகண்டன் said...

நீங்களும் கோவி கண்ணனும் ஒரே ஆளான்னு சந்தேகம் இருக்கு எனக்கு !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருங்கால முதல்வர் said...
நாங்கள் தொடர்ந்து தளம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் யாரோடும் போட்டி போட்டால்தானே தோற்கமுடியும்.//


ஆமாம்..போட்டி போடாமல் உங்களால்..உங்கள் வீட்டுக்குத்தான் முதல்வர் ஆக முடியும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
நீங்களும் கோவி கண்ணனும் ஒரே ஆளான்னு சந்தேகம் இருக்கு எனக்கு //!

ஆமாம்...எனக்கும் அந்த சந்தேகம் உண்டு

Thamizhan said...

தமிழின உணர்வாளர்களை ஒன்று சேர்த்துத் துரோகிகளையும்,மதில் மேல் பூனைகளையும் தூக்கியெறிந்து விட்டுக் கலைஞர் துணிவுடன் தமிழர்களை நம்பி பாராளுமன்றத் தேர்தலை நோக்க வேண்டும்.
சென்ற தேர்தலில் பார்ப்பன்ப் பத்திரிக்கை பலம் என்ற பூச்சாண்டியை அடையாளங் கண்டார்.திருமங்கலத்தில் பார்ப்பனீய அடி வருடிகளை அடையாளங்கண்டார்.
இனிக் காங்கிரசு அடிமைகளையும் அடையாளங்கண்டு வெளியேற வேண்டியது தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி...தமிழன்..என் அடுத்த பதிவையும் படியுங்கள்