Friday, January 16, 2009

நடிகர்களை கெடுக்கும் எம்.ஜி.ஆர்.,

அரசியல் சாணக்கியரான கலைஞர் செய்த அரசியல் தவறுகளில்...மா பெரும் தவறு..எம்.ஜி.ஆரை.,கட்சியிலிருந்து நீக்கியதுதான்.

அண்ணாவே ஒருமுறை..தம்பி எம்.ஜி.ஆர்., தன் முகத்தை மக்களுக்குக் காட்டினால் போதும்..நமக்கு ஓட்டுகள் விழும்..என கூறியிருந்தார்.அப்படிப்பட்ட செல்வாக்கு பெற்றவரை..கட்சியை விட்டு அனுப்பாமல் ..சமரசமாய் போயிருக்க வேண்டும்.

பின் எம்.ஜி.ஆர்., கட்சி ஆரம்பித்து..ஆட்சியைப் பிடித்து...தன் இறுதிவரை தி.மு.க.,வை தமிழகத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் செய்தார்.,

எம்.ஜி.ஆர். இன் வெற்ரி ரஹசியம் தெரியாத பல நடிகர்கள் அரசியலில் நுழைய ஆசைப்பட்டு...முதல்வர் கனவு கண்டனர்.

சிவாஜி..தனிக் கட்சி ஆரம்பித்து...ஜானகி அணியுடன் கை கோர்த்து..தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார்.

கலைஉலகில் என்வாரிசு..பாக்கியராஜ் ..என்று அவர் சொன்னதை..வைத்துக்கொண்டு பாக்கியராஜ்..நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு..எனக் கூறிக் கொண்டு கட்சி ஆரம்பித்தார்...தோல்வி அடைந்தார்.

டி.ராஜேந்திரன்..ஒரு கட்சி ஆரம்பித்து..அவ்வப்போது இடைவெளி விட்டு நடத்தி வருகிறார்.தி.மு.க.வில் அவர் இருந்தபோதுதான் அவரால் எம்.எல்.ஏ.,ஆக முடிந்தது.

நான் எம்.ஜி.ஆர்., வரிசு..நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,என திடீரென விஜய்காந்த் அரசியல் நுழைந்தார்.ஓரளவு மக்கள் ஆதரவுடன் தாக்கு பிடித்து வருகிறார்..ஆனால்..இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது.

சரத்குமாரும்..தன் பங்குக்கு ஒரு கட்சி ஆரம்பித்து..தள்ளாடிக்கொண்டிருக்கிறார்.,

ஆக மொத்தம்..இந்த நடிகர்களுக்கு..முதல்வர் ஆசையை ஏற்படுத்தியது எம்.ஜி.ஆர்., ஆக இவர்கள் கெடக் காரணம் எம்.ஜி.ஆர்.,

எம்.ஜி.ஆரை நினைத்து..ஆட்சிக்குவர துடிக்கும்..நடிகர்களே...ஆரம்ப காலத்திலிருந்து அவர் அதற்காக எவ்வளவு கணக்குப் போட்டு காய்களை நகர்த்தினார் என்றும்.,உழைத்தார் என்பதையும் மறந்து விடாதீர்கள்.

13 comments:

நசரேயன் said...

எனக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை போல தெரியுது

MUTHU said...

no chance

MUTHU said...

atharkku niraiyya poi solla vendum,so no chance

குடுகுடுப்பை said...

டி.ராஜேந்திரன்..ஒரு கட்சி ஆரம்பித்து..அவ்வப்போது இடைவெளி விட்டு நடத்தி வருகிறார்/

//

சரியான சிரிப்பு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நசரேயன்..முதலில் ஏதேனும் படத்தில் தலையைக் காட்டுங்கள்..பிறகு கட்சி ஆரம்பிக்கும் ஆசை..முதல்வர் ஆசை எல்லாம் வரும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் பின்னூட்டம் நசரேயனுக்கு என்று எண்ணுகிறேன்..சரிதானே..

ஏனெனில் எனக்கு அரசியல் ஆசை கிடையாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
டி.ராஜேந்திரன்..ஒரு கட்சி ஆரம்பித்து..அவ்வப்போது இடைவெளி விட்டு நடத்தி வருகிறார்/

//

சரியான சிரிப்பு சார்.///


வருங்கால முதல்வருக்கே சிரிப்பா?

Focus Lanka said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
http://www.focuslanka.com

ஷாஜி said...

இப்போது இவர்கள் வரிசையில் விஜய். கொடி ரெடி; டாக்டர் பட்டமும் வாங்கியாச்சு; இப்போ வருங்கால வாக்களர்களான குழந்தைகளை cover பண்ற வேலை ஜருரா நடந்துட்டு இருக்கு...

RAMASUBRAMANIA SHARMA said...

Actor "Sathyaraj"...has done a political satire film "MAHANADIKAN"... in which he uses a dialogue...THIRU M.G.R.IS THE ONLY ONE PERSON...FOR THE ENTIRE INDIAN FILM INDUSTRY AND FOR POLITICS...THERE IS NO REPLACEMENT FOR HIM IN THE NAME OF "BLACK" M.G.R. or "GREEN" M.G.R. etc...This comment itself contains lots of meaning for the so called actors....who wanted to become CM of tamil nadu thru their cinema popularity. Every body knows...Late Thiru M.G.R. is a LEGEND in all his walks of life...That's all...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிலா பிரியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஷாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி RAMASUBRAMANIA SHARMA