Tuesday, January 27, 2009

அமெரிக்காவின் நிதி நெருக்கடியும்...வேலையிழப்பும்...

ஒபாமா பதவியேற்றதும் மகிழ்ச்சியில் இருந்த ஊழியர்களுக்கு , சென்ற திங்கள் கறுப்பு திங்களாக அமைந்தது.

அன்று ஒரே நாளில்..70000 ஊழியர்களுக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.

அவற்றில்..சில முன்னணி நிறுவனங்கள் என்பது வேதனையிலும் ..வேதனை.

கேட்டர் பில்லர்,ஃபைசர்,ஹோம் டிப்போ.ஸ்பிரிண்ட் நெக்ஸ்டல் ஆகிய நிறுவனங்களும் இதில் அடக்கம்.

இந்த ஆண்டு ஆரம்பித்து..25 நாட்களில்..இரண்டு லட்சத்திற்கு மேல் வேலை இழந்துள்ளனர்.இதுவரை..பொருளாதார சீர்குலைவால்..26 லசத்திற்கும் மேற்பட்டோர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாம்.

இதன் பிரதிபலிப்பு..யூரோப்..கிழக்கு ஆசிய நாடுகளிலும்..இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவின் பொருளாதார நிலை சற்று வலுவாக உள்ளதால்...நாம் பயப்பட தேவையில்லை..என..பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.

பார்ப்போம்...ஒபாமா எடுக்கப்போகும் நடவடிக்கைகளை.

7 comments:

யாத்ரீகன் said...

இவர்களெல்லாம் எங்கே போவார்கள் ?!?!?!

T.V.ராதாகிருஷ்ணன் said...
This comment has been removed by the author.
T.V.ராதாகிருஷ்ணன் said...

/// யாத்ரீகன் said...
இவர்களெல்லாம் எங்கே போவார்கள் ?!?!?!///

:-(((((

அக்னி பார்வை said...

நிறுவனங்களின் முதல் பிரச்சனை, அவர்கள் கொடுக்கும் அதிக சம்பளம். ஆரம்பத்தில் ஒரு வேலையை முடிக்க, ஆளைப்பிடித்தாக வேண்டிய நிலையில் நிறைய சம்பளம் கொடுக்க ஒத்துக்கொள்வார்கள், பின்பு வேலை முடியும் நிலையில் அடுத்த வேலை (project) வரவில்லையென்றால், அதிக சம்பளம் வாங்கும் ஆட்களை முதலில் வேலையைவிட்டு தூக்கிவிடுவார்கள்... என்ன சொன்னாலும் இதை ஓபாமாவால் ஒன்றும் செய்யா முடியாது...

சின்னப் பையன் said...

:-(((((((((((

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்ப்போம்...பொருளாதார சிக்கல் தீர என்ன செய்கிறார் என்று..உங்களுக்கு ஒரு உபரி தகவல்..அமெரிக்காவின் 30 சதவிகித வேலைகள் நமக்கு அவுட் சோர்சிங் கொடுக்கப்பட்டுள்ளது. வருகைக்கு நன்றி அக்னி பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ச்சின்னப் பையன் said...
:-(((((((((((//

நன்றி ச்சின்னப் பையன்