Thursday, January 8, 2009

படித்ததும்...கேட்டதும்...

1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது
2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது
4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது
5.கேளிக்கைகளை வாங்களாம்...மகிழ்ச்சியை வாங்கமுடியாது
6.ஆயுதங்களை வாங்கலாம்...வீரத்தை வாங்கமுடியாது
7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது
8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது


2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.

3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்ரின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்
1.அரசமரம்
2.அத்திமரம்
3.ஆலமரம்
ஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன

2 comments:

கோவி.கண்ணன் said...

//படித்ததும்...கேட்டதும்...

1.பணத்தால் வாங்க முடியாதவை இவை
1.புத்தகத்தை வாங்கலாம்...அறிவை வாங்கமுடியாது//

எதோ ஒரு படத்தில...என் கிட்ட பணம் இருக்கு, படிச்ச பசங்களை நாலு பேரை பிடிச்சுப் போட்டால் வேலை ஆகிடும் என்று ஒரு வசனம் வரும். படிப்பை வாங்க முடியாது, ஆனால் படிச்சவங்களை வாங்கலாம்

//2.உணவை வாங்கலாம்..பசியை வாங்கமுடியாது
//

செறிக்க மாத்திரைகள் இருப்பது போலாவே பசிக்கவும் மாத்திரைகள் உண்டு

//3.பகட்டை வாங்கலாம்...பண்பாட்டை வாங்கமுடியாது//

நடிகைகள் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்து குத்துவிளக்கு ஏற்றி பல கடைகளை திறந்து வைக்கிறாங்களே

//4.படுக்கையை வாங்கலாம்..உறக்கத்தை வாங்கமுடியாது//

ஒரு க்வாட்டார் ராவாக அடித்தால் அப்பறம் துணியைப் பற்றிக் கூட கவலை இல்லாமல் தூங்கிக் கிட்டு இருப்பாங்க

மற்ற மற்றதையெல்லாம் இப்படியே...எழுத மனசு வரலை


//2.உலகத்திலேயே அருமையானவர்கள்
1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி
2.புகழை விரும்பாத கொடையாளி
3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்
4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்
5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.//

இதெல்லாம் ஒரு மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய குணம், இயல்பாக இருப்பவர்களையே தேட வேண்டி இருப்பதால் இவையெல்லாம் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்க வைக்கிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பின்னொரு..படித்ததும்..கேட்டதும் பதிவில் ..உங்கள் மறுப்புக்களையும் ,எழுத்துக்களையும் ஒரு பதிவிட்டால் போயிற்று..கோவி