இலங்கை தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.கலைஞரும்...கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால்..வருத்ததை அளிக்கிறது..ஏமாற்றத்தை அளிக்கிறது..என்ற அளவிலேயே அக்கட்சியை விமரிசனம் செய்ய முடிகிறது.
இன்னிலையில்...கள் இறக்கும் போராட்டத்தை இன்று நடத்தப் போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இச்செய்தியைக் கேட்டதும்தான்..காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மதுவிலக்கு இல்லை என்ற ஞாபகம் வந்தது போலிருக்கிறது.
எதைத் தின்றால்..பித்தம் தெளியும் என்ற நிலையில் இருப்பவர் போல்...இலங்கை தமிழர் பிரச்னையை...எதைச் சொல்லி திசை திருப்பலாம் என்றிருந்தவர்களுக்கு காரணம் கிடைத்துவிட்டது.
தமிழகத்தில்..மகாத்மா,காமராஜர்,பெரியார் (அண்ணாவை ஏன் விட்டு விட்டார்கள்)ஆகியோர் போராடி..மதுவிலக்கை கொண்டுவந்து..மக்கள் நலனுக்காக வரலாறு படைத்தார்கள்.தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக நிறைவேற்ற வேண்டும்..அதற்காக இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை என் தலைமையில்..சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என தங்கபாலு அறிவித்துள்ளார்.
ஐயா..தங்கபாலு...முதலில் உங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்...மாநிலங்களில் போராடுங்கள்..அந்த மாநில மக்கள் நலனும் முக்கியமில்லையா? அங்கு மதுவிலக்கு அமுலுக்கு வந்ததும்...பிற கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்து மக்கள் பற்றி கவலைப்படலாம்.
8 comments:
போரடிட்டு போராங்க விடுங்க பாவம்.
நீங்க சொன்ன சரி..விட்டுடுவோம்
தமிழ்நாடு தங்கபாலு கோஷ்டி காங்கிரஸ் ஈழப் பிரச்சினையை திசை திருப்ப இப்படி ஒரு போராட்டத்தை அல்பத் தனமாக அறிவித்துள்ளது. பார்ப்போம் எத்தன பேர் தான் கலந்துக்கிறாங்கன்னு.
வருகைக்கு நன்றி Xavier
தங்கபாலு தடுமாருகிறார்.
தமிழக முதல்வர் நேரே சோனியா அம்மையாரிடம் தமிழினம் அழிவது அவரது பழி வாங்கும் படலமா என்பதைக் கேட்டு,ஆம் என்றால்
காங்கிரசைக் கை கழுவித் தமிழகத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
கட்டாயம் வெற்றி அவருக்குத் தான்.
புது டில்லியில் எந்தக் கொம்பன் வந்தாலும் அவர் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.
டாஸ்மார்க்கை விட கள் உத்தமன்.
வருகைக்கு நன்றி Thamizhan
வருகைக்கு நன்றி
ராஜ நடராஜன்
Post a Comment