Monday, January 19, 2009

திருமாவளவன் உண்ணாவிரதம் ஒரு நாடகம்...- ஜெயலலிதா

இலங்கை தமிழர் பிரச்னையில்..திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தது பற்றி ஜெயலலிதா கூறுகையில்...

நேற்று என் அறிக்கையில்..அவர் நாடகமாடுகிறார் என்று கூறினேன்.அதை நிரூபிக்கும் வகையில்..நான்கு நாட்களில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.இதனால் பல பகுதிகளில்..அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.மக்களை திசைத் திருப்ப அவர்கள் நடத்திய நாடகம் இது.இதனால் இலங்கையில் போர் நிறுத்தமும் ஏற்படவில்லை, தமிழர் பிரச்னையும் தீரவில்லை...என்றுள்ளார்.

இவர் ஆட்சியில் இருந்தபோது..மெரினாவில்..சொகுசு வேன் பக்கத்தில் நிற்க..இவர்..காவேரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தாரே..அது நாடகம் என்று நாம் சொல்லவில்லை..

இவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..என நாம் கேட்கவில்லை...

ஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..

மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?

13 comments:

கோவி.கண்ணன் said...

அந்தம்மா நடிகையாக இருந்ததால் அப்படி தெரிவதில் வியப்பு இல்லை.

//அரசு பேருந்துகள் தீயிட்டும்,கற்கள் வீசப்பட்டும் சேதம் அடைந்துள்ளன.//

இதை சுட்டிக்காட்ட இந்த அம்மாவிற்கு தகுதியே இல்லை. இந்த அம்மாவை உள்ளே வைத்ததற்காக இவருடைய கட்சியினர் பேருந்துடன் சேர்த்து மூன்று மாணவிகளை எரித்தனர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இதை சுட்டிக்காட்ட இந்த அம்மாவிற்கு தகுதியே இல்லை.//

உண்மை

TamilBloggersUnit said...

அருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//TamilBloggersUnit said...
அருமையான வெப்தளம் நன்றி உங்களுக்கு//

நன்றி

கோவி.கண்ணன் said...

ஜனவரி 20க்குள்ளேயே 40 பதிவுகள் வந்துட்டு ! :) கலக்குறிங்க !

நசரேயன் said...

//மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?
//
அம்மையாருக்கு அப்படி தோணலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
ஜனவரி 20க்குள்ளேயே 40 பதிவுகள் வந்துட்டு ! :) கலக்குறிங்க !//


நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
//மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?
//
அம்மையாருக்கு அப்படி தோணலாம்//
:-)))))))))
வருகைக்கு நன்றி நசரேயன்

தமிழ்நதி said...

"மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?"

இதிலெல்லாம் நீங்கள் சந்தேகப்படலாமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தமிழ்நதி said...
"மக்கள் அவ்வளவு கேணையர்களா என்ன?"

இதிலெல்லாம் நீங்கள் சந்தேகப்படலாமா?//


ஹா..ஹா..ஹா..

உடன்பிறப்பு said...

//இவர் இருந்த உண்ணாவிரதத்தால் காவிரி பிரச்னை..தீர்ந்ததா..என நாம் கேட்கவில்லை...

ஏனெனில் அது ஒரு நாடகம் என அவருக்கே தெரியும் போது...நமக்கு தெரியாதா என்னா..//

நல்ல கேள்வி, திருமாவை கொச்சைப்படுத்த ஜெவுக்கு எந்த தகுதியும் கிடையாது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உடன்பிறப்பு

ராஜேஷ், திருச்சி said...

http://arataiarangam.blogspot.com

same topic running here too.